Published:Updated:

சின்ன கோயிந்தனின் சினிமா ஆசை! - வில்லேஜ் டைரி

Representational Image

ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் வாங்கிய மளிகை சாமான்களுடன் தீனி என்று எழுதி 25 அல்லது 50 பைசா எழுதப்பட்டிருக்கும். அவருடைய எழுத்து டாக்டர்களின் மருந்து சீட்டை போலவே என்ன எழுதி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு புதுவகை மொழியில் இருக்கும்.

சின்ன கோயிந்தனின் சினிமா ஆசை! - வில்லேஜ் டைரி

ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் வாங்கிய மளிகை சாமான்களுடன் தீனி என்று எழுதி 25 அல்லது 50 பைசா எழுதப்பட்டிருக்கும். அவருடைய எழுத்து டாக்டர்களின் மருந்து சீட்டை போலவே என்ன எழுதி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு புதுவகை மொழியில் இருக்கும்.

Published:Updated:
Representational Image

எழுத்தாளர் திரு சுஜாதாவின் "கனவு தொழிற்சாலை" நாவலில் சினிமா பற்றி விரிவாக எழுதியிருப்பார். சினிமா மற்றும் அது சார்ந்த பிற வேலைகளில் எவ்வளவு மனிதர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி தெளிவான விளக்கங்களை அந்த நாவலில் வரும் கதை மாந்தர்கள் மூலம் பேசியிருப்பார். சாமான்ய மனிதர்களுக்கு சினிமா என்பது என்றுமே ஒரு கனவுதான். இங்கு சினிமா பற்றிய கனவுகளுடன் மற்றும் சினிமாவை விரும்பிய மூன்று மனிதர்களை பற்றிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

திருவிழா நாட்களிலும் மற்றும் பிரபல நடிகர்களின் பிறந்த நாளின் போதும் தீரைப்படம் திரையிடுவது எங்கள் கிராம இளைஞர்களின் வழக்கம். வெளியூரிலிருந்து வாடகைக்கு எடுத்து இங்கே திரையிடும் வழக்கத்திலுள்ள நடை முறை சிக்கல்களை தவிர்த்து தன்னுடைய மண்ணின் மைந்தர்களுக்காக ஒரு பழைய 16mm ப்ரொஜெக்டரை வாங்கி அவர்களுடைய தேவையை நிறைவேற்றியவர் செல்லாத காசுக்கு மிட்டாய் கொடுத்து வாடிக்கையாளர்களை தான் வசம் இழுத்த எங்கள் ஊர் A to Z செந்தாமரை கடை நடத்திய பெருமாள்தான்.

Representational Image
Representational Image

எங்கள் வீட்டை போல பலரும் பெருமாள் கடையில் கணக்கு வைத்திருந்தார்கள். மாத சம்பளம் வந்தவுடன் எவ்வளவு என்று நோட்டை பார்த்து என்னுடைய அப்பா கணக்கு முடிப்பார். இதற்காகவே ஒரு சிறிய கையடக்க நோட்டு புத்தகம் தயார் செய்வார் என்னுடைய அப்பா. எங்களுடைய முந்தய வருட நோட்டு புத்தகங்களின் எழுதப்படாத வேற்று தாள்களை கிழித்து அதை இரண்டாக மடித்து மேற்புறம் ஒரு அட்டையை வைத்து நடுவில் ஊசி நூலை வைத்து தைத்து விடுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொரு முறை கடைக்கு செல்லும்போதும் ஒயர் கூடை பைக்குள் இந்த மளிகை கடை கணக்கு நோட்டும் இருக்கும். பெரும்பாலும் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் நான்தான் கடைக்கு செல்வேன். வீட்டிற்கு கடைசி என்பதாலும் ஒவ்வொருமுறை கடைக்கு செல்லும்போதும் எனக்கு 25 அல்லது 50 பைசாவிற்கு ஏதேனும் தீனி வாங்கி கொள்ள அனுமதி இருந்தது. ஆரம்ப காலங்களில் தயங்கி தயங்கி அப்பா திட்டுவாரோ என்று வாங்குவேன்.

ஒருநாள் அப்பா வந்து இனிமே ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் தீனி வாங்கணும் என்று மிக கண்டிப்புடன் பெருமாளிடம் வந்து சொல்லிவிட்டார். அதற்கு அவர் சார் விடுங்க சார் சின்ன பயந்தானே என்று எனக்கு வக்காலத்து வாங்கினார். அவருடைய வியாபாரம் உள்நோக்கமாக இருந்தாலும் எனக்காக பரிந்து பேசியதில் நான் சற்று மகிழ்ந்துதான் போனேன் என்பதை மறுப்பதற்கில்லை.

அதன் பிறகு நான் கடைக்கு செல்லும்போதெல்லாம் என்ன தீனி வாங்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்ததில்லை. திரு பெருமாள் அவரே முடிவு செய்து ஏதாவது கொடுப்பார். ஆனால் 50 பைசாவிற்குள் மட்டுமே.

இப்படி சொல்லுவார்,

``இங்கப்பார் இது இன்னைக்கு தான் வந்துச்சு சாப்பிடு சூப்பரா இருக்கும்’’ என்று இரண்டு பால்பன்னை கொடுப்பார். எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு இந்த பண்டம் நிச்சயமாக அறிமுகமாக இருக்கும். மைதாமாவில் பொரித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து கிட்டத்தட்ட ஒரு பாதுஷா போல இருக்கும். ஆனால் இது கன செவ்வக வடிவமாக இருக்கும். மிக மிருதுவாக உள்ளே குறைவான இனிப்பும் மேற்பூச்சில் சர்க்கரை பாகின் அதிகமான இனிப்புடன் அருமையாக இருக்கும். அது போலவே ஏதேனும் புதிய தின்பண்ட வகை வாங்கி வைத்திருந்தார் என்றால் கட்டாயமாக எனக்கு கொடுத்து விடுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் வாங்கிய மளிகை சாமான்களுடன் தீனி என்று எழுதி 25 அல்லது 50 பைசா எழுதப்பட்டிருக்கும். அவருடைய எழுத்து டாக்டர்களின் மருந்து சீட்டை போலவே என்ன எழுதி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு புதுவகை மொழியில் இருக்கும். பொருள்கள் மடித்து கொடுக்க ஆகும் கால இடைவெளியில் அந்த மாதத்திற்கான பக்கங்களை கூட்டி போட்டுவிடுவார். அவருடைய கூட்டி போடும் வேகத்தை பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். அதன் பிறகு பெருமாள் செய்யாத தொழிலே இல்லை. மளிகை கடையுடன் உணவகம், ஜவுளி கடை, ரேடியோ ஸ்பீக்கர் செட், 16mm திரைப்பட ப்ரொஜெக்டர் மூலம் திரையிடுதல் என அவருடைய கனவு சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே இருந்தது. ஊர் மக்களுக்கு தேவையான அனைத்தும் தன்னிடம் இருக்கவேண்டும் அல்லது தான் மூலமாக கிடைக்க வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருந்திருக்க கூடும்.

Representational Image
Representational Image

பெருமாளை போலவே அதே காலகட்டத்தில் வேறொரு மனிதரும் இருந்தார். அவரும் மளிகை கடை வைத்திருந்தார். ஆனால் பெருமாள் கடை போல வாடிக்கையாளர்களுக்காக இல்லாத பொருளை தருவித்து கொடுக்க மாட்டார். கடையில் எது இருக்கிறதோ அதை கொடுப்பார். ஒன்பதாவது படித்த சின்ன கோயிந்தன் எப்படி CP ராஜாவாக மாறினார்.....

பெருமாள் கடை போலவே கோயிந்தன் கடை என்று ஒரு கடை இருந்தது. அண்ணன் தம்பி இருவர் கடையை நடத்தி வந்தார்கள். இருவருடைய பெயருமே கோயிந்தன் தான். சின்ன கோயிந்தன் பெரிய கோயிந்தன் என்று வித்தியாச படுத்துவார்கள். பெரும்பாலும் நமது கதாநாயகன் (ஏன் கதாநாயகன் என்பதற்கான காரணம் கீழே வருகிறது) சின்ன கோயிந்தனே கடையில் இருப்பார். அவர் பொருட்களில் கொடுக்கும் விதத்தில் ஒரு ஸ்டைல் இருக்கும். ஒரு அம்பது மில்லி எண்ணையை நாங்கள் கொண்டு செல்லும் சீசாவில் புனல் வைத்து ஒரு பெரிய சம்படத்திலிருந்து எண்ணையை மொண்டு அந்த சிறு அம்பது மில்லி குடுவையை அசால்டாக தூக்கி புனலுக்குள் போடுவார். நடிகர் பாண்டியன் சாயலில் அதே போன்ற சற்றே பூசிய உடற்கட்டுடன் இருப்பார்.

Representational Image
Representational Image

எண்பதுகளில் திரைப்படங்களே அவ்வளவாக அறிமுகமாகாத எங்கள் கிராமத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஒரு ஸ்டில் போட்டோ கிராபரை வைத்து பலவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்து ஒரு பெரிய அட்டையில் ஒட்டி பிரேம் செய்து வைத்திருந்தார். எங்கள் ஊரிலுள்ள ஏரியில் மூழ்கி எழுவது போல் ஒன்று, சிலம்பம் சுழற்றி சண்டையிடுவது போல் ஒன்று பெல் பாட்டம் பெரிய காலர் சட்டையுடன் பெரிய பிரேம் கூலிங் கல்லஸ் அணிந்து ஒன்று என சுமார் பத்து விதமான போஸில் இருக்கும்.

ஆட்டுரலில் இட்லி தோசைக்கு மாவு ஆட்டி கொண்டிருந்த எங்கள் கிராமத்து பெண்களுக்காக மூன்று பெரிய எலக்ட்ரிக் கிரைண்டரை வாங்கி ஒரு படிக்கு ஒரு ருபாய் வாங்கி கொண்டு அரைத்து கொடுத்தவர். இன்றைய கார்பரேட் மொழியில் அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் (Out of Box Thinking) என்று சொல்வார்களே அதனை முதன் முதலில் எண்பதுகளின் தொடக்கத்தில் முயற்சி செய்தவர் அவர்தான்.

அதை ஒரு நாள் வாய் பிளந்து பார்த்து விட்டு வந்தேன். எங்களுடைய சிறிய கிராமத்திலிருந்து அவருக்கு எப்படி அவ்வளவு பெரிய சினிமா பற்றிய கனவு வந்தது என்று தெரியவில்லை. ஒருமுறை அந்த போட்டோக்களுடன் சென்று சினிமா வாய்ப்புக்காக சிலரை சந்தித்து விட்டு வந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. ஒரு கிராமத்து மைனர் போல வயது பெண்களை கிண்டல் செய்வதாகட்டும் ஸ்டைலாக பூ போட்ட சட்டை போடுவதாகட்டும். ஆனால் அதன் பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை சினிமா பற்றிய நினைவுகளை அந்த பிரேம் போட்ட புகைப்படங்களுடன் மூட்டை கட்டி வைத்துவிட்டு தொழிலை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அப்பொழுது எங்கள் ஊரில் சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தனியாக ஹோட்டல் என்று எதுவுமில்லை. இவர் தான் முதன் முதலாக உட்கார்ந்து சாப்பிடும் வகையில் டேபிள் பெஞ்ச் போட்டு தனியாக கிட்சனுடன் ஒரு கட்டிடத்தில் உணவகம் தொடங்கினார். இட்லி தோசை மட்டுமே கிடைத்த எங்கள் ஊரில் முதன் முதலாக பூரியையும் ரோஸ்ட் தோசையும் பரோட்டாவும் அறிமுகப்படுத்தினார். இதற்கென ஒரு மாஸ்டரை சம்பளத்துடன் வேலைக்கு வைத்த முதல் முதலாளி இவர்தான்.

அதுமட்டுமில்லாமல் ஆட்டுரலில் இட்லி தோசைக்கு மாவு ஆட்டி கொண்டிருந்த எங்கள் கிராமத்து பெண்களுக்காக மூன்று பெரிய எலக்ட்ரிக் கிரைண்டரை வாங்கி ஒரு படிக்கு ஒரு ருபாய் வாங்கி கொண்டு அரைத்து கொடுத்தவர். இன்றைய கார்பரேட் மொழியில் அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் (Out of Box Thinking) என்று சொல்வார்களே அதனை முதன் முதலில் எண்பதுகளின் தொடக்கத்தில் முயற்சி செய்தவர் அவர்தான். இப்படியாக பலவித முதிய முயற்சிகளை செய்த அவர் திடீரென ஒருநாள் குடல் வால் வெடித்து திருமணம் ஆகாமலேயே இளைஞராய் இறந்து போனதுதான் துயரம். எங்கள் கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பிய முதல் மற்றும் கடைசி மனிதர் CP ராஜா என்ற சின்ன கோயிந்தன்தான்.

 சின்ன கோயிந்தனின் சினிமா ஆசை! - வில்லேஜ் டைரி

அந்த காலகட்டத்தில் சினிமாவை பற்றியோ அதற்கு வாய்ப்பு தேடுவது பற்றியோ எனக்கு அவ்வளவாக தெரியாது. அதன் பிறகு சினிமா பற்றிய ஒரு ஆசை ஏற்பட்டது எங்கள் ஊருக்கு டீச்சராக பணியில் சேர்ந்த முனியம்மா டீச்சரின் அண்ணன் தெட்சிணா என்ற தட்சிணா மூர்த்தியால்தான்.

"ஒரு லட்ச ரூபா இருந்தா ஒரு படம் எடுத்திரலாம்...." அதுவும் சிரஞ்சீவியை கதாநாயகனாக வைத்து, என்று தெட்சிணா அண்ணா சொன்ன போது ஆ என்று வாய் பிளந்து கேட்டு கொண்டிருந்தோம். அது முடியுமா முடியாதா என்ற கேள்வியெல்லாம் எழவேயில்லை. எங்களுக்கு அவர் ரெண்டு கதைகள் சொன்னார். ஒரு திரைக்கதை போல சொல்ல சொல்ல மயிர் கூச்செரிய கேட்டு கொண்டிருந்தோம். சிரஞ்சீவி அந்த காலகட்டத்தில் ஒரு வளர்ந்து வரும் நாயகனாக இருந்தார். எதனால் இவருக்கு சிரஞ்சீவியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது என்று தெரியவில்லை.

"சிறை வளர்த்த சிங்கம்" என்பதே அது. சிறு வயது சிரஞ்சீவிக்கு நான் நடிக்கலாம் (இதை படிக்கும் போது நீங்கள் சிரிப்பது எனக்கு கேட்கிறது. எனக்கும் புன்னகை அரும்புவதை தவிர்க்க முடியவில்லை) என்று வேறு சொன்னார். அவரிடம் ஒரு நாற்பது பக்க நோட்டை கொடுத்து அண்ணா அந்த கதையை அப்படியே இதுல எழுதி குடுங்க என்று சொன்னதாக நினைவு. அந்த நோட்டின் முதற்பக்கத்தில் பிள்ளையார் சுழியுடன் "சிறை வளர்த்த சிங்கம்" என்று பெரிதாக எழுதி ஒரு புறாவை கைவிலங்குடன் வரைந்தது போக வேறு எதுவும் எழுதவில்லை. வெகுநாட்கள் அந்த நோட்டு புத்தகத்தின் முதல் பக்கத்தை பிரட்டி பார்த்துகொண்டேயிருப்பேன்.

Representational Image
Representational Image

எப்படியாவது ஒரு லட்சம் கிடைத்தால் தெட்சிணா அண்ணாவிடம் கொடுத்து திரைப்படத்தை எடுத்துவிடவேண்டும் என்ற வைராக்கியமெல்லாம் இருந்தது. ஆனால் அந்த ஒரு லட்ச ரூபாய்க்கான வழிதான் தெரியவில்லை.

பிற்பாடு சிரஞ்சீவி நடித்து கைதி என்றொரு படம் பார்க்க நேர்ந்தது. அவர் எங்களிடம் சொன்ன கதை இந்த படத்தின் கதையா அல்லது அதன் பாதிப்பினால் சொன்னாரா என்றொரு குழப்பம் இப்போது ஏற்படுகிறது.

இவ்வளவு பெரிய கனவுகளுடன் இருந்த தெட்சிணா அண்ணாவுடைய தலையெழுத்து அவ்வளவு சிறப்பாக இருந்ததாக தெரியவில்லை.

என்னுடைய பள்ளிக்காலத்தில் என்னை பாதித்தவர்களில் இவர்கள் மூவருக்கும் முக்கிய பங்குண்டு.


மீண்டும் பேசுவோம்.


அன்புடன்,

ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism