Published:Updated:

விழுப்புரம் ஸ்பெஷல் கொத்துக்கறி கடலைபருப்பு ! | My Vikatan

Representational Image

சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த மசாலாவை போட்டு பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சரியான இணை இது.

விழுப்புரம் ஸ்பெஷல் கொத்துக்கறி கடலைபருப்பு ! | My Vikatan

சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த மசாலாவை போட்டு பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சரியான இணை இது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ருசியாக, விதவிதமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையே இல்லாத ஆணோ,பெண்ணோ இருக்கிறார்களா என்ன? விடிஞ்சா இன்னைக்கு என்ன சமையல் பண்றதுங்கறதே பெரிய தலைவலியாக இருக்கு என்று அலுத்துக்கொள்ளும் இல்லத்தரசிகள் ஆகட்டும்..

இந்த ஞாயிற்றுக்கிழமை யாவது நம்ம ஊரு சாப்பாடு செஞ்சி சாப்பிடணும் என்று திட்டமிடுகிற வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகட்டும்...

1000 சொல்லுங்க.. எங்க ஊர் பொரிச்ச பரோட்டா க்கு ஈடாகுமா? என்றோ , அயிரை மீன் குழம்பு ன்னாலே எங்க ஊர் தான் ஞாபகத்துக்கு வரும் என்று சொல்கிறவர்கள் ஆகட்டும்... அவரவர் ஊர்சமையலை ஸ்பெஷல் ஐட்டத்தை சிலாகித்து சொல்லி மார்தட்டிக் கொள்பவர்கள் நிறையப் பேர்.

ஹி ஹி ஹி... அதில் நான் மட்டும் விதிவலக்கா என்ன?

எங்க ஊர் விழுப்புரம் ஸ்பெஷல்...

கொத்துக்கறி கடலைபருப்பு மசாலா சாப்பிட்டு இருக்கீங்களா??

எங்கள் ஊர் ஸ்பெஷல் இது.

Meat
Meat

கொத்துக்கறி + கடலைப்பருப்பு மசாலா..

தேவையான பொருட்கள்

கொத்துக் கறி - 1/2கிலோ

கடலைப்பருப்பு - ஒரு கப் 

பெரிய வெங்காயம்- 2 

தக்காளி - 4

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் 

மிளகாய்த்தூள் -3 டீஸ்பூன் மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன் தேங்காய் துருவல் -ஒரு டேபிள்ஸ்பூன் 

உப்பு : தேவையான அளவு.

தாளிக்க :  பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 

பெருஞ்சீரகம் -அரை டீஸ்பூன்

எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை

கொத்துக் கறியை நன்கு சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் .அத்துடன் கடலைப்பருப்பு +பொடியாக நறுக்கிய வெங்காயம்+ தக்காளி இஞ்சி-பூண்டு விழுது+ மிளகாய்த்தூள்+ மஞ்சள்தூள் தேங்காய் துருவல்+ உப்பு சேர்த்து பிரஷர் பேனில் போட்டு மூடி அடுப்பில் வைக்கவும் .4 விசில் வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து பட்டை லவங்கம் ஏலக்காய் பெருஞ்சீரகம் தாளித்து கறி கடலை பருப்பு கலவையை ஊற்றி தண்ணீர் வற்றி சுருண்டு வரும்வரை விட்டு கிளறி இறக்கி விடவும். சுவையான கொத்துக்கறிகடலைப்பருப்பு மசாலா தயார்.

சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த மசாலாவை போட்டு பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சரியான இணை இது.

எங்க ஊர் ஸ்பெஷல் ரெசிபி இது. நீங்களும் செய்து சாப்பிட்டு சுவையை உணருங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.