Published:Updated:

எவரெடி பேட்டரியில் இருக்கும் பூனையின் கதை! - கிராமத்தானின் ரேடியோ பெட்டி மெமரீஸ் 3

Representational Image ( iStock - SoumenNath )

ஆர்வக்கோளாறினால் பேட்டரிக்கு பதிலாக நேரடி மின் இணைப்பை கொடுத்து வானொலி பெட்டியை கருக வைத்த அரைவிஞ்ஞானிகளும் உண்டு !

எவரெடி பேட்டரியில் இருக்கும் பூனையின் கதை! - கிராமத்தானின் ரேடியோ பெட்டி மெமரீஸ் 3

ஆர்வக்கோளாறினால் பேட்டரிக்கு பதிலாக நேரடி மின் இணைப்பை கொடுத்து வானொலி பெட்டியை கருக வைத்த அரைவிஞ்ஞானிகளும் உண்டு !

Published:Updated:
Representational Image ( iStock - SoumenNath )

பொழுது போக்கு நினைவுகள் ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரத்துக்கு பிறகான தேச கட்டமைப்பில் "ஆல் இந்தியா ரேடியோ" ஆற்றிய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. நாட்டின் நலத்திட்டங்களை தேசத்தின் கடைக்கோடிக்கும் கொண்டு சேர்த்த சாதனம் வானொலிபெட்டி !

இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு உதவிய பசுமை புரட்சி சார்ந்த நீர்ப்பாசன திட்டங்கள், விதை ரகங்கள், உரவகைகளின் பயன்பாடு, விவசாய திட்டங்கள் மற்றும் உதவிகள் சார்ந்த விவசாய தகவல்கள் வானொலிபெட்டியின் மூலமே விவசாயிகளை சென்றடைந்தன. அம்மை, போலியோ தடுப்பூசி திட்டங்களை தேசம் முழுவதும் கொண்டு சேர்த்ததிலும் வானொலியின் பங்கி இன்றியமையாதது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Representational Image
Representational Image

மிக குறைவான எழுத்தறிவை கொண்ட கிராமங்கள் அதிகமான ஒரு தேசத்தின் திட்டங்கள் பத்திரிக்கைகள், தினசரிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் மட்டுமே முக்கியப்படுத்தப்பட்டிருந்தால் முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களும் தோல்வியில்தான் முடிந்திருக்கும். சுதந்திர இந்தியாவின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய வழிமுறைகளை கடைக்கோடி குடிமகனுக்கு கொண்டு சேர்த்து, சமூக பொருளாதார கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான முதன்மை பரப்புரை சாதனமாக விளங்கியது இந்திய வானொலி சேவை.

பேட்டரிகள் புழக்கத்துக்கு வந்த பிறகு, வானொலி பெட்டிகளின் அளவு படிப்படியாக சுருங்க தொடங்கியது. முதல் தலைமுறை பேட்டரி பெட்டிகள் இயங்க பெரிய அளவு பேட்டரிகள் ஆறு முதல் எட்டு வரை வேண்டும்.

"பேட்டரி ரேடியோவும்", "டார்ச் லைட்டும்" புழக்கத்தில் வந்த பிறகு, தமிழர்களின் மாதாந்திர மளிகை பட்டியலில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட பொருள் " எவரெடி பேட்டரி கட்டை" !

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வசந்தா ஸ்டோர்ஸ், கிராண்ட் பேக்கரி என எங்கள் ஊரின் ஒரு சில கடைகளில் மட்டுமே "பேட்டரி கட்டைகள்" கிடைக்கும் !

வரெடி பேட்டரியின் ஆரம்பக்கால, ஒன்பது எண்ணுக்குள் பாயும் கறுப்பு பூனை லோகோவுக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு...

பூனை மிகவும் லாவகமான ஒரு பிராணி. உயரத்திலிருந்து விழுந்தாலும், தூரத்திலிருந்து தாண்டினாலும் சட்டென சுதாரித்து ஓடிவிடும். விரைந்து ஓடும் வாகனங்களுக்கு நடுவே பாய்ந்த பூனைக்கு அடிபட்டிருக்குமோ என நாம் பதறிக்கொண்டிருக்க, சற்று நேரம் கழித்து அடுத்தவீட்டு சுவரில் அப்புராணியாய் அமர்ந்திருக்கும் !

பூனையை கொல்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை உணர்த்தும் விதமாக "cats have nine lives" எனும் ஆங்கில சொலவடை ஒன்று உண்டு ! மற்ற எந்த பேட்டரிகளை விடவும் தங்களின் தயாரிப்பு நீண்டு உழைக்கக்கூடியது என்ற விளம்பர பரப்புரைக்காக, ஒன்பது எண்ணுக்குள் பாயும் கறுப்பு பூனை லோகோவுடன் அந்த சொலவடையையும் சுவீகரித்துக்கொண்டது எவரெடி நிறுவனம் !

Representational Image
Representational Image

உலகின் வேறெந்த மக்களைவிடவும் அந்த சொலவடையின் அர்த்தத்தை முற்றிலும் உணர்ந்து, உலர்ந்த பேட்டரியிலும் சோட்டு மின்சாரம் மிச்சமில்லாமல் மீட்டெடுக்கப் பலவேறு உத்திகளை கையாண்டார்கள் நம்மவர்கள் …

பேட்டரிகள் வலுவிழப்பதற்கு ஏற்ப வானொலி பெட்டி மெல்ல மெல்ல குரல் இழக்கும், தூரத்து நிலையங்கள் கிடைக்காமல் கரகர சப்தம் எழும்பும் !

அந்த சமயங்களில் இறுதி மூச்சினை எட்டி பிடித்து நிற்கும் வானொலி பெட்டிக்கு உயிரூட்ட,

பேட்டரிகளை வெயிலில் காய வைப்பது, கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டுகளாய் பேட்டரிகளை இடம் மாற்றிப் போட்டு முயல்வது, பேட்டரி முனையை நாக்கில் வைத்து மின்சார இருப்பை தீர்மானிப்பது என பல வித்தைகள் கையாளப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுபோன்ற சமயங்களில் ஆர்வக்கோளாறினால் பேட்டரிக்கு பதிலாக நேரடி மின் இணைப்பை கொடுத்து வானொலி பெட்டியை கருக வைத்த அரைவிஞ்ஞானிகளும் உண்டு !

சிறிய பேட்டரிகள் வந்த பிறகு, அதுவரையிலும் பொது உபயோகமாக இருந்த வானொலி பெட்டி சுருங்கி "டிரான்ஸிஸ்டர் ரேடியோ" என்பதாகி, தனி உபயோக பொருளாக மாறியது. பொது தொலைப்பேசி தனிமனித அலைபேசியாக மாறிய மாற்றத்துக்கு ஈடாக இதனை குறிப்பிடலாம் !

"டிரான்ஸிஸ்டர் ரேடியோ" புழக்கத்துக்கு வந்த பிறகு, காதுக்கருகில் வைத்து தேர்தல் முடிவுகளையோ, கிரிக்கெட் வர்ணனைகளையோ கேட்டுக்கொண்டிருப்பவர் திடீர் என,

"அந்த தொகுதியும் போச்சு... விட்டுட்டான்...புடிச்சிட்டான்... சிக்ஸர்..."

என்றெல்லாம் அவ்வப்போது குரல் கொடுக்க, அவரது முக பாவனைக்கு ஏற்ப தங்களின் முக பாவனையை மாற்றிக்கொண்டிருக்கும் அவரை சூழ்ந்திருக்கும் கும்பல் !

Representational Image
Representational Image
Picasa

விஞ்ஞான வளர்ச்சியின் அதிவேக பாய்ச்சலினால் தொலைக்காட்சி பெட்டி, வாக்மேன், விசிஆர், சிடி, டிவிடி, சாட்டிலைட் டிவி, கம்ப்யூட்டர், இண்ட்டர்நெட் என அடுத்தடுத்து படையெடுத்த சாதனங்களால் வானொலி பெட்டி தன் ஏகபோக உரிமையை இழந்துவிட்டாலும், அன்று வானொலி கேட்டு வளர்ந்தவர்களின் நினைவலைகளில் அந்த ஞாபகங்கள் தொடர்ந்து மறுஒலிபரப்பாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன !

குனிந்த தலையுடன் கல்லூரி செல்லும் மனதுக்கு பிடித்தவளை பின் தொடர்ந்த காலை வேலையில், தெருமுனை தேநீர்க் கடை வானொலியிலிருந்து,

" இதோ ஒரு இளம் காதலனின் ஏக்க அழைப்பு !"

எனும் அறிவிப்பை தொடர்ந்து ஒலிக்கத்தொடங்கிய ,

"அதிகாலை நிலவே அலங்கார சிலையே..."

பாடலை கேட்டவுடன், அவள் மெல்லத்திரும்பி வெட்க பார்வை வீசியபோது எழுந்த உணர்வை,

இருக்குமிடத்தில் இருந்துகொண்டே நினைத்த நேரத்தில் நினைத்த நிகழ்ச்சியையோ, நேசிக்கும் பாடலையோ உடனடியாக கேட்கும் வசதியை கொண்ட இன்றைய இளைய இணையத் தலைமுறைக்கு எப்படி விவரிப்பது என தெரியவில்லை !

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism