Published:Updated:

கன்னித்திரை - மூடநம்பிக்கையும் கற்பிதங்களும்! | My Vikatan

Representational Image

சில பெண்களுக்கு இதைப் பற்றியப சரியான புரிதல் இல்லாமல் தன் மீது களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து செயற்கை சவ்வு ஒட்ட வைக்கும் அவலநிலை உலகம் முழுதும் வியாபித்து உள்ளது.

கன்னித்திரை - மூடநம்பிக்கையும் கற்பிதங்களும்! | My Vikatan

சில பெண்களுக்கு இதைப் பற்றியப சரியான புரிதல் இல்லாமல் தன் மீது களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து செயற்கை சவ்வு ஒட்ட வைக்கும் அவலநிலை உலகம் முழுதும் வியாபித்து உள்ளது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கண்மை,பெண்மை என்று நம் சமூகத்தில் பெண்களைப் பற்றி எதை பேசினாலும் பெரும்பாலானோர் மனக்கண்ணில் தோன்றுவது கற்பு அதன் பின் மனத்திரை ஓட்டத்தில் சற்று தூரம் சென்று விரிவடைவது கன்னித்திரை தான். கற்பு என்ற சொல்லாடல் எதற்காக எவ்விதம் , அதன் பின் எவ்வாறு கன்னித்திரையின் பின் ஒளிந்து கொண்டது என்பதை நாம் அறியவில்லை.

கற்பு என்ற சொல்லாடலே இன்று பல்வேறு விவாதங்களை உண்டாக்கி உள்ள நிலையில் கன்னித்திரை/ கன்னிச்சவ்வு என்பது சரியான பதமாகவும் இருக்க முடியாது . இது யோனிக்குழாயின் நுழைவாய்ப் பகுதியில் மெல்லிய சவ்வு போன்ற படலமே "யோனிச் சவ்வு", என்றழைக்கப்படுகிறது. மேலும் இது யோனிக்குழாய் நுழைவு பகுதி முழுவதும் மூடி உள்ள சவ்வும் அல்ல. இச்சவ்வானது ஒவ்வொரு பெண்ணிற்கும் வெவ்வேறு வடிவமைப்பை கொண்டதாக இருக்கும்.

Representational Image
Representational Image
Photo by Sofia Alejandra

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறை சந்திரன் வடிவிலோ,யோனிக்குழாயை சுற்றி வட்ட வடிவில் வளையம் போன்றோ (donut shape), மிகத்தடிமனாகவோ, நிறைய துளைகளுடனோ, இடைவெளி உள்ள பட்டையான அடுக்குகளாகவோ, காணப்படும்.மேலும் இது நெகிழும் , விரிவடையும் தன்மை கொண்டது தானே தவிர உடையக்கூடிய , கிழியக்கூடிய உறுப்பு இல்லை.இதுவரை இந்த சவ்வினால் ஏதேனும் மருத்துவ பயன்கள் உண்டா என்றால் அப்படி எதுவும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவ உலகம் கூறுகிறது .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1000 பெண் குழந்தைகளில் ஒருவருக்கு துளைகளற்ற மிகவும் தடிமனான சவ்வு (imperforate hymen) இருக்கிறது . மிகவும் தடிமனாகவோ , குறுகிய துளையுடனோ காணப்படும் சவ்வினால் மாதவிடாயின் போது இரத்தம் தேங்கி சரியாக வெளியேறாது இதனால் சிலருக்கு மிகச் சிரமும் வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி இருக்கும். இதனை மகளிர் நல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவை என்றால் அறுவைசிகிச்சை சரி செய்து விடலாம்.

Representational Image
Representational Image
Photo by Ketut Subiyanto:

மேலும் சிலருக்கு பிறப்பிலேயே இச்சவ்வு இல்லாமல் கூட இருக்கும், இது பெரிய குறைபாடோ அல்லது பெரும் குற்றமோ இல்லை. சில பெண்களுக்கு இதைப் பற்றியப சரியான புரிதல் இல்லாமல் தன் மீது களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து செயற்கை சவ்வு ஒட்ட வைக்கும் அவலநிலை உலகம் முழுதும் வியாபித்து உள்ளது.

மேலும் கன்னித்தன்மை பரிசோதனை (virginity test)மருத்துவ அனுமதி பெற்ற ஒன்று இல்லை. 2019ல் அமெரிக்காவின் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவக் கல்லூரியானது இப்பரிசோதனையைப்‌ (virginity testing) பற்றி எந்த ஒரு வழிகாட்டுதலையோ, ஆலோசனைகளை நாங்கள் வழங்கவில்லை என அறிக்கை வெளியிட்டது.‌

உலக சுகாதார நிறுவனமான WHO இந்த பரிசோதனை மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளது. இந்தியாவிலும் 2013ல் உச்ச நீதிமன்றம் இதை தடை செய்துள்ளது.2021ல் அண்டை நாடான பாக்கிஸ்தானும் கூட இதைத் தடை செய்துள்ளது.மகாராஷ்டிரா மருத்துவக் கல்லூரியின் பாடப்புத்தகத்திலிருந்து விரலைஉட்செலுத்தி பரிசோதிக்கும் பாடப் பகுதியை நீக்கியுள்ளனர்..

வட இந்தியாவில் குறிப்பிட்ட சில சமூக மக்களிடையே 400 வருடங்களுக்கும் மேலாக முதலிரவின் போது வெள்ளை மெத்தை விரிப்பை போட்டு அடுத்த தினம் இரத்த சொட்டுகளின் கறையை காண்பது தான் சிறந்த கன்னித்தன்மை பரிசோதனை முறையாக கடைபிடித்து வந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சியால் இத்தகைய போக்கு ஓரளவு மாறியுள்ளதாக கூறுகின்றனர்.
Representational Image
Representational Image

விளையாட்டு துறை , பைக் ஓட்டுதல் , குதிரை சவாரி , அதிக வேலை பளு போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் மேலும் கீழே விழுந்து இடுப்பில் அடிபடுவதாலும் இந்த சவ்வு விரிவடைய வாய்ப்புள்ளது.

இருப்பினும் பெண்களின் கற்பு , கன்னித்தன்மை என்றதும் ஆண்கள் , வேடு கட்டி மூடி வைக்கப்பட்ட ஜாடியை ரிப்பன் வெட்டி திறப்பதை போல அந்த உரிமை , கடமை தங்களது என தங்களைத் தாங்களே சிறப்பு விருந்தினராக மகுடம் சூட்டிக் கொண்டு இன்றளவும் செயல்பட்டு வருகின்றனர்.

பெண்களும் இதைப் பற்றி வெற்று விவாதங்களை எழுப்பாமல் இதன் பின் உள்ள அறிவியலை, உளவியலை சரியாக அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

-ந.கிருஷ்ணவேணி.

மகளிர் நல இயன்முறை மருத்துவர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.