Published:Updated:

அடிச்சு வெளுத்துட்டாங்க! | My Vikatan

Indian women cricket team

பௌலிங் மற்றும் பீல்டிங்ல் ஆரம்பம் முதலே சீறிப்பாய்ந்து சிறப்பாக செயல்பட்டது இந்திய பெண்கள் அணி.

அடிச்சு வெளுத்துட்டாங்க! | My Vikatan

பௌலிங் மற்றும் பீல்டிங்ல் ஆரம்பம் முதலே சீறிப்பாய்ந்து சிறப்பாக செயல்பட்டது இந்திய பெண்கள் அணி.

Published:Updated:
Indian women cricket team

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எட்டாவது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் ஏழாவது முறையாக கோப்பையை வென்று மாஸ் காட்டியுள்ளது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம்,மலேசியா,யு.ஏ.இ., தாய்லாந்து என மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்ற இந்த பெண்கள் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இலங்கை பாகிஸ்தான் மோதிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி "த்ரில்" வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி. எனவே இந்தியா - இலங்கை மோதும் இறுதிப் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. ஆனால் எந்த சலசலப்பும் இல்லாமல் இலங்கை அணியை அடி அடியென அடித்து துவைத்து கெத்தாக கோப்பையை வென்று இந்த ஆண்டின் ஆசியக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.

Indian women cricket team
Indian women cricket team

அக்டோபர் 15ம் தேதி நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இலங்கை அணி.

அப்பொழுது சற்றும் எதிர்பார்த்திருக்காது இந்திய அணியின் பௌலிங் படை இப்படி தாக்குமென்று. பௌலிங் மற்றும் பீல்டிங்ல் ஆரம்பம் முதலே சீறிப்பாய்ந்து சிறப்பாக செயல்பட்டது இந்திய பெண்கள் அணி. அதனால் 7 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டும் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது இலங்கை பெண்கள் அணி. 50 ரன்களைக் கூட எட்டாது என்ற நிலையில் இருந்து ஒருவழியாக 20 ஓவர்களில் 65 ரன்களை எடுத்து ஓரளவுக்கு கொஞ்சம் டீஸன்டான ஸ்கோரை எட்டியது. வழக்கம் போல அபாரமாக பந்து வீசிய ரேணுகா சிங் தாக்கூர் 3 ஓவர்கள் வீசி வெறும் 5ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் அதிலும் ஒரு ஓவர் "மெய்டன்..!"

66 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய பெண்கள் அணி எத்தனையாவது ஓவரில் ஆட்டத்தை முடிக்க போகிறது என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. சீக்கிரம் போட்டியை முடித்தால் கோப்பையோடு சீக்கிரம் வீட்டுக்குச் செல்லலாம் என்ற மனநிலை தான் எல்லோருக்கும். அதற்கேற்றாற் போல் ஸ்மிருதி மந்தனாவின் ஷாட் ஒவ்வொன்றும் அப்படி இருந்து. "வீட்டு பக்கம் சின்ன பசங்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய அண்ணன் வந்து பேட்டை புடுங்கி எனக்கு ஒரு நாலு பால் நல்லா போடு நான் பேட்டை கொடுத்திடுறேன்னு சொல்லி ஒவ்வொரு பாலையும் அடித்து குட்டி பசங்களை ஓட விடுவாரே..." அப்படி இருந்தது ஸ்மிருதி மந்தனாவின் ஆட்டம். வெறும் 66ரன்கள் இலக்கில் 25 பந்துகளில் 51 ரன்கள் அதில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என இலங்கை அணியின் பந்து வீச்சை பந்தாடினார்.

ஸ்மிருதி மந்தனாவின் இந்த அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 8.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 8வது பெண்கள் ஆசியக் கோப்பையை ஏழாவது முறையாக வென்று அசத்தியுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் ஒரு ஆறுதலுக்கு கூட இலங்கை அணியை இளைப்பாற விடாமல் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி ஏழு முறை சாம்பியன் என்றால் சும்மா இல்லை என்று நிரூபித்துள்ளனர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர். இந்த தொடரின் தொடர் நாயகி விருதை தீப்தி ஷர்மாவும், ஆட்ட நாயகி விருதை ரேணுகா சிங் தாக்கூரும் வென்றனர். தரமான, அட்டகாசமான ஓர் அணியாக நிமிர்ந்து நிற்கும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியிடமிருந்து வருங்காலங்களில் இதே போன்று சிறந்த ஆட்டத்தையும் பல கோப்பைகளையும் எதிர்பார்க்கலாம் .!

-கோ.ராஜசேகர், தருமபுரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.