Published:Updated:

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

இறுதி மாதவிடாய்க்குப் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜோன் ஹார்மோன் அளவு மிகவும் குறைவதால், இந்தத் தொற்று வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இது ஏற்படலாம்.

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

இறுதி மாதவிடாய்க்குப் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜோன் ஹார்மோன் அளவு மிகவும் குறைவதால், இந்தத் தொற்று வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இது ஏற்படலாம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நீங்கள் மாதவிடாய் நின்றவரா? அல்லது உங்கள் வீட்டில் மாதவிடாய் நின்ற மகளிர் உள்ளனரா? அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் நின்ற சில பெண்களுக்கு புற்று நோய் மற்றும் எலும்புத் தேய்மான நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, சிறுநீர்த் தொற்று.

யாருக்கெல்லாம் வரும்?

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள், சிறுநீர் வடிகுழாய் பொருத்தியவர்கள், சிறுநீர் அடங்காமை பாதிப்பு உள்ளவர்கள், மலச்சிக்கலால் தவிப்பவர்கள், கர்ப்பப்பை அடி இறங்கியவர்கள்,சிறுநீர்ப் பாதையில் கல் அல்லது கட்டி ஏற்பட்டு அடைப்பு பாதிப்பில் இருப்பவர்கள், புற்றுநோய் தாக்கியவர்கள் ஆகியோருக்கு இது மீண்டும் மீண்டும் வரும் அபாயம் அதிகம். இறுதி மாதவிடாய்க்குப் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜோன் ஹார்மோன் அளவு மிகவும் குறைவதால், இந்தத் தொற்று வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இது ஏற்படலாம்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுநீர்த் தொற்று எப்படி ஏற்படுகிறது?

  • பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்க் கிருமி சிறுநீர்த் தாரையைத் தாக்குவதால் சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.

  • பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்யும்பொழுது அசுத்த நீரில் உள்ள பாக்டீரியா சிறுநீர்த் தாரையை சென்றடைந்ததும் தொற்று ஏற்படலாம்.

  • பெருங்குடலின் கடைசிப் பகுதியான ஆசன வாயில் உள்ள பாக்டீரியா சிறுநீர்த் தாரையில் சென்றதும் நோய்த் தொற்று ஏற்படலாம்.

  • உடலில் வேறு ஏதேனும் உறுப்புகளில் நோய்த் தொற்று இருந்து, அங்கிருந்து கிருமிகள் ரத்தத்தில் கலந்து சிறுநீர்ப் பாதையை பாதிக்கும் போதும், அங்கு நோய்த் தொற்று ஏற்படலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறிகுறிகள் என்ன?

நீர்க்கடுப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடி வயிற்றில் வலி, காய்ச்சல், பசியின்மை மற்றும் வாந்தி, உடல் சோர்வு, மனக்குழப்பம், எழுந்து நடக்க சிரமப்படுவது போன்றவை அறிகுறிகள். தொற்று முற்றிய நிலையில் சிறுநீரின் நிறம் மாறும், ரத்தம் கலந்து இருக்கும், துர்நாற்றம் வீசும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கிருமி விரைவாக ரத்தத்தில் பரவி சிறுநீரகம், மூளை, இதயம் ஆகிய முக்கிய உறுப்புகளை பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும். எனவே எச்சரிக்கை அவசியம்.

என்ன செய்ய வேண்டும்?

சுய சிகிச்சை செய்து கொள்வது தவறு. சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி, உங்களுடைய அறிகுறிகளைக் கூற வேண்டும். அவர் சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து சரியான மருந்துகளைத் தருவார்.

சிறுநீர்த் தொற்றுக்கு எந்தக் கிருமிகள் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குண்டான நுண்ணுயிர்க் கொல்லி (ஆன்ட்டி பயாடிக் மருந்துகள்) மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி முறையாக எடுத்துக் கொண்டால் நோய் குணமாகும்.

ஒருவேளை சிறுநீரக செயல் இழப்பு இருந்தால், மருத்துவர் மருந்தின் அளவைக் குறைத்துத் தருவார். கிருமித் தொற்று இருந்தாலும், தொந்தரவோ, அறிகுறியோ இல்லை என்றால் மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

மேலும் சிறுநீரகக் கல், சிறுநீர் துவாரம் அடைப்பு, கர்ப்பப்பை அடி இறக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இவை அனைத்துமே குணப்படுத்த முடிகிற பிரச்சனைகள் தான். அதனால் அச்சம் இல்லாமல் தேவையான அறுவை சிகிச்சை செய்து கொண்டால், சிறுநீர்த் தொற்று வராமல் தடுக்கலாம்.

Representational Image
Representational Image

தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

  • போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • சிறுநீரை அதிக நேரம் அடக்குவது தவறு. ஒவ்வொறு முறை சிறுநீர் கழித்தவுடனும் அந்தப் பகுதியை தண்ணீர் விட்டு சுத்தப்படுத்த வேண்டும்

  • மலம் கழித்தவுடன், தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்முன்பக்கமிருந்து பின்பக்கமாக சுத்தம் செய்வது நல்லது. அப்போது தான் பின்புறமிருந்து கழிவுகள் பிறப்புறுப்பு துவாரத்தினுள் சென்ற நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கும். தண்ணீரால் சுத்தப்படுத்திய பிறகு டவல் அல்லது டாய்லெட் பேப்பரை உபயோகித்து ஈரம் போகத் துரைக்க வேண்டும்.

  • மாதவிலக்கு நாட்களில் நாப்கினை அடிக்கடி மாற்ற வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது வர வாய்ப்பு அதிகம். எனவே சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

  • சிறுநீர் கதி்ட்டர் பொருத்தியுள்ளவர்கள், அதை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் அதைப் புதுப்பிக்க வேண்டும்.

  • மாதவிடாய்க்குப் பின்னர் பிறப்புறுப்புகளில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால் அப்பாகத்தில் ஈஸ்ட்ரோஜோன் ஹார்மோன் களிம்பை உள்ளே தடவலாம். இது சிறுநீர்த் தொற்று வராமல் தடுக்கவும் உதவும்.

  • சிறுநீரகத் தாரையில் கல், கட்டி இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அவசியம் செய்து கொண்டு, இதன் விளைவாக ஏற்படும் சிறுநீர்த் தொற்றிலிருந்து விடுபட வேண்டும்.

  • சிறுநீர் நோய்த் தொற்றைத் தடுக்க முழு உடலையும் சுத்தமாக பராமரிப்பதோடு, பிறப்புறுப்புகளையும் சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் அவசியம்.

  • நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளையும், மருத்துவரின் அறிவுரைகளையும் பின்பற்றினால், மாதவிடாய் முடிந்த பருவம் சிறுநீர்த் தொற்று போன்ற பிரச்சினைகள் இல்லாத வசந்த காலமாகவே இருக்கும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.