யோகத்தைப் பற்றி அறிய வேண்டுமெனில் அதன் மூலம், அதன் உள்ளிருப்புகள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வது அதை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள உதவும். சாங்கிய தத்துவத்திலிருந்து ஒவ்வொன்றாக பகுத்தறியலாம்.
சாங்கிய தத்துவத்தில் உருவ வழிபாடு கிடையாது; கடவுள்களும் இல்லை. இயற்கையே பிரதானம். அதனை பகுத்தறியும் அறிவு முதன்மையானது. சாங்கியம் துவைத தத்துவத்தை கொண்டது. துவைதம் என்றால் இரு கோட்பாடுகள் என்று பொருள். புருஷா மற்றும் பிரகிருதி என்னும் முதல் இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மற்ற 23 தத்துவங்கள் அமைகின்றன. புருஷா என்றால் அறிவு, பகுத்தறிதல், பேரறிவு என்று பொருள். அது மாற்றமடையாது. நிலையானது. அழிவில்லாதது. பிரகிருதி என்பது உணர்வுகள். மாறக்கூடியது, அழியக்கூடியது, மீண்டும் வரக்கூடியது. கிருதி என்றால் படைப்பு / உருவாக்கம் என்று பொருள். பிர என்றால் தயாரான நிலை என்று பொருள். பிரகிருதி எப்போதும் ஒன்றை உருவாக்க தயாரான, மாறுதலுக்கு உட்பட்ட நிலையில் இருப்பது.

இதில் மூலப்பிரகிருதி, பிரகிருதி என்று இரு வேறு சொற்கள் பயன்படுத்தப்படும். அவற்றிலும் ஆழமான கருத்துகள் உள்ளன. புருஷா என்பது தனி. பிரகிருதியில் மூல பிரகிருதி என்பது தன்னுள் இருந்து ஆற்றலை அடக்கி, வெளிபடுத்தாத தோற்றம். அதனுள்ளிருந்து ஆற்றல் வெளிப்பட்டு மாற்றமடையும் நிலை பிரகிருதி எனப்படும். டார்வின் தத்துவத்துக்கு இணையான ஒன்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாங்கியம் விளக்கியிருக்கிறது.
இன்னும் தெளிவாக கூறவேண்டுமென்றால்... இயற்கை எப்போதும் இருக்கிறது. அதனுடைய எண்ணற்ற ஆற்றலை தன்னுள் அடக்கி மூலப்பிரகிருதியாக இருக்கிறது. எப்போது தேவையோ அப்போது பிரகிருதியாக மாற்றங்களுடன் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தன்னை அறிதல், தன்னை முன்னிலைப்படுத்தல், நான் என்றால் யார், என்னுடைய முக்குணங்களின் விகித கலவை என்ன என்று அறிதல் அகங்காரம். நானே அனைத்தும் என்று நம்ப வைப்பதும் அகங்காரமே.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுக்குணங்கள் என்றால் என்ன? அவற்றுக்கும் இயற்கைக்கும் என்ன தொடர்பு?
* மா, பலா, வாழை முக்கனிகள்.
* இயற்பியலில் திட, திரவ, வாயு என்று மூன்று.
* காலங்களில் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்.
* கடவுளான சிவனுக்கு முக்கண், பெருமாளுக்கு மூன்று கோடுகளில் நாமம்.
* உடலில் நாடிகளில் முக்கியமானவை மூன்று
- இப்படி மூன்று என்று முன்னோர் நமக்கு எளிதாக சொல்லிக்கொடுத்த அனைத்துமே முக்குணங்களுடன் தொடர்புடையவை. முக்குணங்களின் கூட்டுக் கலவை இல்லாமல் எதுவுமே இவ்வுலகில் எல்லை என்பதே உண்மை. இயற்கையுடனும் அறிவியலுடன் எளிமையாக தொடர்புகொள்ளக்கூடியது இவை... சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் சாத்வீகம், ராட்சசம், தாமச குணங்கள்... பகவத் கீதை பதினான்காம் அத்தியாயம் இக்குணங்களை விவரிக்கிறது.

சாங்கியத் தத்துவத்தின் படி...
சத்வம் / சாத்வீகம் - சமநிலை, பகுத்தறிவு, படைப்பாற்றல், ஆக்கப்பூர்வம், உறுதி, அமைதி போன்றவை முக்கிய தன்மைகளாக இருக்கின்றன.
ரஜஸ் / ராட்சசம் - செயல்படும் தன்மை, உழைப்பு, விடாமுயற்சி, வலிமை, கோபம் போன்ற தன்மைகள்.
தமஸ் / தாமசம் - சோம்பல், செயலற்ற தன்மை, அமைதியற்ற நிலை, தாமதம், கற்க விருப்பமின்மை, மந்தம் போன்ற தன்மைகள்.
பிரகிருதியில் இந்த குணங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியே இருந்தன. இவை ஒன்றோடு ஒன்று கலந்து புதிய மாற்றங்களுடன் படைப்புகள் நிகழ்ந்தன. விகிதாச்சார ரீதியில் இவை மாறும்போது அதற்கு தகுந்த குணநலங்களுடன் இயற்கை படைப்புகளை படைத்தது. மனித உடல் மட்டுமல்ல, இயற்கை அனைத்திலுமே இந்த குணங்களை பொதிந்து வைத்துள்ளது. இம்மூன்று குணங்களும் ஒன்றிணைந்தே இயங்க முடியும், தனித்தனியாக இயங்காது.
மீண்டும் சாங்கிய தத்துவத்துக்கு வருவோம். புருஷா (அவ்யக்த்) - மாற்றமில்லாதது ஓரிடத்தில் இருக்கிறது. மூலப்பிரகிருதியிலிருந்து பிரகிருதி பிரிந்து முக்குணங்களுடன் சேர்ந்து புதிய படைப்புகளை உருவாக்குகிறது. இவற்றில் முதல் படைப்பு மஹத் / புத்தி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மஹத்/புத்தி
புருஷா எனப்படும் மாற்றமில்லாததில் இருந்து பிரகிருதியை பிரிப்பது இதுவே. உயிர்களில் புத்தியாக அறியப்படுகிறது. அறிவு, பிரித்தறிதல், செயல்படும் தன்மை, உறுதி, நிலைப்பு போன்றவை இவற்றின் தன்மைகள், இவற்றிலிருந்து உணர்வுகளான மகிழ்ச்சி, வேதனை, மாயை போன்ற முக்குணங்களின் கூறுகள் வெளிப்படுகின்றன.
அகங்காரம்
பிரகிருதியிலிருந்து மஹத் / புத்தி முதலாவதாக உருவாகிறது. இரண்டாவதாக அகங்காரம் வெளிப்படுகிறது. அகம் என்றால் நான். காரம் என்றால் தன்மை, முதனிலைப்படுத்தல் என்று பொருள். தன்னை அறிதல், தன்னை முன்னிலைப்படுத்தல், நான் என்றால் யார், என்னுடைய முக்குணங்களின் விகித கலவை என்ன என்று அறிதல் அகங்காரம். நானே அனைத்தும் என்று நம்ப வைப்பதும் அகங்காரமே. இந்த அகங்காரத்திலிருந்து மனஸ் / மனம் மற்றும் தன்மாத்ராஸ் / தன்மாத்திரைகள் வெளிவருகிறது.

மனஸ்/மனம்
இந்திய கலாசாரத்தில் மட்டுமே மனம் என்பது மிக தெளிவாக, ஒவ்வொரு படிநிலைகளுடன் அவற்றின் செயல்பாடுகள், விளைவுகளாக விளக்கப்படுகிறது. சாங்கியத்தில் மனஸ் என்பது எண்ணம், சிந்தனை, அவற்றை உருவாக்கல், மாற்றல், அழித்தல், நினைவுகொள்ளல் என்று அனைத்துச் செயல்களும் எல்லா உயிரினங்களுக்குள்ளும் உண்டு. இவை வெளியில் தெரியாமல் இருப்பதால் அந்தகரணம் என்றும் அழைக்கப்படுகிறது. மனம் மட்டுமே ஒரே நேரத்தில் மூன்று குணங்களை கொண்டும் உணர்ந்தும் செயல்படுத்துகிறது. அதென்ன உணர்வும் செயலும்?
மனஸ் என்பதன் கீழ் பஞ்ச ஞான இந்திரியங்களும், பஞ்ச கர்ம இந்திரியங்களும் வருகிறது. இவற்றை விரிவாக பார்ப்பதற்கு முன்பு அகங்காரத்தின் இன்னொரு நிலையை தெரிந்து கொள்வோம்!
(யோகம் அறிவோம்!)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.