Published:Updated:

ஹோட்டல் சுவையில் பன்னீர் குருமா | My Vikatan

Representational Image

ஹோட்டல் சுவையில் சிம்பிளான பன்னீர் குருமா செய்வது மிகவும் சுலபம்..

ஹோட்டல் சுவையில் பன்னீர் குருமா | My Vikatan

ஹோட்டல் சுவையில் சிம்பிளான பன்னீர் குருமா செய்வது மிகவும் சுலபம்..

Published:Updated:
Representational Image

பன்னீர் குருமா செய்ய தேவையானப் பொருட்கள்:-

பன்னீர் - 250 கிராம்

வெங்காயம் - 2

கேரட் - 2

பச்சைப் பட்டாணி - 1 கப்

பீன்ஸ் - 1 கப்

உருளைக்கிழங்கு - 3

தக்காளி - 3

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கிராம்பு - சிறிதளவு

பட்டை - சிறிதளவு

கசகசா - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

அரைப்பதற்கு:-

தேங்காய் - அரை மூடி

பச்சை மிளகாய் - 4

பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்

Representational Image
Representational Image

செய்முறை:-

முதலில் தக்காளி, கேரட், பீன்ஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் அதே வாணலியில் பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், கசகசா போட்டு வதக்கி, மிக்ஸியில் லேசாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பை சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கிக் கொள்ள வேண்டும்.

கடைசியாக அரைத்த மசாலா கலவை மற்றும் பன்னீரை போட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான பன்னீர் குருமா தயார்!!!

-A s GovindaRajan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.