Published:Updated:

மறதி சுகமா, சுமையா ? | முதுமை எனும் பூங்காற்று

Representational Image ( Photo by Loren Joseph on Unsplash )

முதுமையடைந்தவர்கள் எல்லோருக்கும் மறதி அவசியம் ஏற்படுறதா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். எழுபது, எண்பது வயதிலும் நல்ல ஞாபக சக்தியோடு இருக்கும் முதியவர்களைப் பார்க்கிறோம். அதே சமயத்தில்...

மறதி சுகமா, சுமையா ? | முதுமை எனும் பூங்காற்று

முதுமையடைந்தவர்கள் எல்லோருக்கும் மறதி அவசியம் ஏற்படுறதா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். எழுபது, எண்பது வயதிலும் நல்ல ஞாபக சக்தியோடு இருக்கும் முதியவர்களைப் பார்க்கிறோம். அதே சமயத்தில்...

Published:Updated:
Representational Image ( Photo by Loren Joseph on Unsplash )

மறதி எப்படி சுகமாகும் என்பதை அறிய நீங்கள் ஆவலாக இருக்கிறீர்களா. பல வகைகளில் நமது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை மறந்து நல்ல நிகழ்வுகளே மட்டுமே மனதில் பதிய வைக்கும் சக்தி, மறதிக்கு மட்டுமே உண்டு என்பது மிகை அல்ல. மறதி மட்டும் இல்லை என்றால் மனிதன் மன உளைச்சலில் சிக்கி இன்று மிருகமாக அல்லவா மாறி இருப்பான். மறதி எப்படியெல்லாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.


மறதி ஒரு சுகமே !


மறதி, மனித இனத்துக்கு கடவுள் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். நினைக்க தெரிந்த மனிதனுக்கு மறக்கவும் தெரிய வேண்டும். இல்லையென்றால் அவன் படுகிறபாடு என்னவாகும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அதன் விளைவு உங்களுக்கே புரியும்.

Representational Image
Representational Image
Bhikku Amitha from Pixabay

நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை இன்பம் துன்பம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் மனதில் தோன்றி மறைந்தும், மறையாமலும் இருக்கின்றன. நம் வாழ்வில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உதாரணம்: திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் உறவினர்களின் இறப்பு போன்றவை. இவை போன்ற மிக முக்கியமான நிகழ்ச்சிகள் மூளையில் ஆழ பதிந்து விடுவதால் அவை அனைத்தும் மறதிக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடுகின்றன. அதே சமயத்தில் மிகவும் சாதாரண அன்றாட நிகழ்ச்சிகள், உதாரணம்: பள்ளியில் குறைந்த மார்க் வாங்கியது, அப்பா சில சமயங்களில் திட்டியது போன்றவைகள் காற்றோட காற்றாய் கலந்து மறைந்து போகின்றன.

இந்த ஜன்மத்தில் மட்டுமில்லாமல் போன ஜன்மத்திலும் நடந்தது எல்லாம் மறக்காமல் இருக்குமேயானால் நமது வாழ்க்கை தற்பொழுது எப்படி இருக்கும் ? போன பிறவியில் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், கயவர்கள், திருடர்கள் அவர்கள் அனைவரும் இந்த ஜன்மத்திலும் தம் அருகில் இருப்பதாக எண்ணினால் ஒரு வினாடிக் கூட நிம்மதியாக வாழ முடியாது. ஆகையால் மறதி மிகவும் அவசியமானதே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதுமையடைந்தவர்கள் எல்லோருக்கும் மறதி அவசியம் ஏற்படுறதா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். எழுபது, எண்பது வயதிலும் நல்ல ஞாபக சக்தியோடு இருக்கும் முதியவர்களைப் பார்க்கிறோம். அதே சமயத்தில் நாற்பது, ஐம்பது வயதிலேயே மறதியை தொலைத்த மக்களையும் நாம் பார்க்க முடிகிறது.

கவிஞர் கண்ணதாசன் கடவுளிடம் இரண்டு வரம் வேண்டும் என்று கேட்டார். நினைப்பதற்கு ஒரு மனமும் அதை மறப்பதற்கு ஒரு மனமும். ஆனால் நம் மூளையோ இரண்டு மனம் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான எண்ணங்களையும், செயல் திறன்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள ஒரு அரிய கம்யூட்டர். ஒருவரின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக்கேற்றவாறு அவர்களுடைய நினைவாற்றலும், மறதியும் செயல்படும்.

Representational Image
Representational Image

ஞாபக சக்தியும், மறதியும் மனிதனுக்கு இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டுமே ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். ஆனால் மறதி ஓரளவிற்கு தான் பயனுள்ளதாகவும், சுகமாகவும் தெரியும். மறதியே சற்று அதிகமானால் அதுவே அறிவித் திறன் வீழ்ச்சி அல்லது டிமென்சியா என்ற நோயாக மாறி அவர்களுக்கு அது ஒரு சுமையாகி விடும் !

ஒரு சில மக்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக மறதியை கையில் எடுத்துக் கொள்வார்கள். மக்களிடையே சுலபமாகவும் அடிக்கடி சொல்லும் பொய் தான் மறதி. சில அற்ப விஷயங்களுக்குக்கூட “மறந்துவிட்டேன்” என்ற ஒரு பொய்யைச் சொல்லி சிலர் தப்பித்துக் கொள்வது, தற்பொழுது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவன் வேலைக்குச் செல்வதற்கு முன்பு தன் மனைவியிடம் அவருடைய உடைகளை சலவை செய்து வைக்கும் படி சொல்வார். ஆனால் மனைவியோ தொலைக்காட்சியை விடாமல் பார்த்துக் கொண்டு இருந்ததால் அந்த வேலையை செய்ய முடியவில்லை. ஆனால் கணவனிடம் பல வேலைகளின் நிமித்தமாக தான் அடியோடு மறந்து விட்டதாக (பொய்) கூறுவார். இவர்கள் கூறும் பொய்களை மறதியின் மீது பழியை சுமத்துகிறார்கள். இது போன்ற பொய்யர்களின் மறதி நாளடைவில் வெட்ட வெளிச்சமாகி உண்மை வெளி வந்து விடும்.

Representational Image
Representational Image

ஒரு சிலர் தனக்கு ஞாபக சக்தி நன்றாக இருந்தாலும் மறதி இருப்பது போல் நடித்து சிறு சிறு பயன்களை அடைவதில் அற்ப சந்தோஷம் அடைவார்கள். உதாரணம்:- இரயில்வே கவுண்டரில் பயண சீட்டு வாங்கும் படிவத்தை நிரப்ப பக்கத்திலுள்ளவரிடம் பேனா வாங்கி தன் காரியம் முடிந்ததும் அதை திருப்பி கொடுக்காமலேயே வேண்டுமென்றே தன் சட்டையில் வைத்துக் கொள்வார். பேனாவைக் கொடுத்தவர் திருப்பி கேட்கும் பொழுது, சாரி என்ற ஒரு வார்த்தையுடன் பேனாவை திருப்பி கொடுப்பார். பேனா கொடுத்தவர் கேட்காமல் இருந்தால் வாங்கியவர்க்கு பேனா ஒரு லாபமே. இது போன்று பலர், மறதி என்ற போர்வையில் சில சுகங்களை அனுபவிப்பதை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.

ஒரு பெரியவர் தன் வீட்டை குறைவான பணத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்பு விற்று விட்டார். ஆனால் ஆறு மாதத்திற்கு பின் தான் விற்ற வீடு பல லட்சத்திற்கு போவதை விசாரித்துவிட்டு விற்றவரிடம் தான் ஆறு மாதத்திற்கு முன்பு ஞாபக மறதியால் வீட்டை விற்பதற்கு கையெழுத்து போட்டு விட்டதாகவும், தற்பொழுது பூரணமாக குணம் அடைந்து விட்டதால் அந்த இடம் தனக்கே வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை ஒரு மனோதத்துவ டாக்டரிடம் பரிசோதனைக்கு அனுப்பினார்.

அவரை பரிசோதித்த டாக்டர் தற்காலிகமாக மறதி ஏற்படுத்தக் கூடிய நோய்கள் ஏதும் அவருக்கு இல்லையென்றும் அவர் பூரண மனநலத்துடன் இருப்பதாகவும் சான்றிதழ் வழங்கினார். ஆனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட அச்சமயத்தில் சிகிச்சையளித்த டாக்டரால் மட்டுமே அவர் அச்சமயத்தில் தற்காலிக மறதி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாரா? இல்லையா? என்று அறுதியிட்டு கூற முடியும் என்றும் டாக்டர் கூறினார். நீதிபதி விசாரிக்கையில் அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்ட காலத்தில் எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததனால் நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். அவர் கூறிய பொய் (மறதியின் போர்வையில்) விசாரணையினால் அம்பலமாகிவிட்டதல்லவா?

Representational Image
Representational Image

சின்ன சின்ன மறதிகளினால் சுகம் காண்பவர் பலர். அது ஒரு விதத்தில் நல்லதே ஆகும். மாமியார், மருமகளை திட்டுவதும், மருமகள் மாமியாரை புறக்கணிப்பதும் பல குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளாக நடக்கின்றன. ஆனால் இருவருமே ஓரளவுக்கு அதை மறந்து விடுவதினால் பல குடும்பங்களில் இன்னமும் கூட்டுக் குடும்ப முறை அழியாமல் இருக்கின்றன.

பெரியோர்களினால் நிச்சியக்கப்பட்டு நடத்தும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் மற்றும் கலப்புத் திருமணங்கள், தற்பொழுது அதிகமாக நடைபெற்று வருகின்றன. காதல் திருமணங்கள் பெரியோர்களினால் ஏற்றக் கொள்ளப்படாததால், அவர்களையும் மீறி காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால் இவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவு உண்டாகி, தனித்தனியே வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். காலம் செல்லச் செல்ல அவர்களின் மனக்கசப்புக்குரிய பழையவற்றை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ்வதை நிறையவே பார்க்கிறோம். அதுவும் காதல் தம்பதினர்க்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இரண்டு குடும்பங்களும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியடைகிறது. மறதியின் சுகம் எவ்வளவு ஆனந்தம் தருகிறது பாருங்கள்.

மறதி ஒரு சுமையே !

மறதி நோய் என்பது டிமென்சியா எனும் அல்சிமர் நோயாகும். மறதி நோயின் தன்மை தீவிரமடைய அடைய, ஒருவர் அன்றாடம் செய்யும் வேலைகள் பாதிக்கப்படும் (Activities of Daily Living). அதாவது அவர் குளிப்பதற்கும், உடை உடுத்துவதற்கும், சாப்பிடுவதற்கும் மற்றவர் உதவி தேவைப்படும். மறதி நோய் சற்று முற்றிய நிலையில் கூட இருப்பவர் யார் யார், தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் போய்விடும். அவரை அறியாமலேயே சிறுநீர் மற்றும் மலஜலம் வீட்டிலேயே எங்கு வேண்டுமானாலும் போய் விடுவார். அவர் ஒரு குழந்தையாக மாறி விடுவார். கடைசியாக தம்மையே மறந்து ஒரு தாவர வாழ்க்கையை வாழ்வார். அதாவது சுருக்கமாக சொன்னால் மனதளவில் இறந்து, உடல் அளவில் வாழும் மனிதர்களாக இருப்பார்கள்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன்
டாக்டர் வி.எஸ்.நடராஜன்

மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவதினால் அவருடைய அன்றாட வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டம் அவருக்கு தெரிவதில்லை. அவரை பொறுத்தவரையில் உயிருடன் இருந்தும் இல்லாதிருப்பது போல் தான். இந்நிலை ஒரு சில நாட்களில் முடிவதில்லை. பல வருடங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகும் இந்த மறதி நோய் என்றோ ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும்.

நோயாளியை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் நிலையோ இன்னமும் பரிதாபம். இரவு, பகல் என்று நேரம் காலம் பாராமல் ஒரு மனவளர்ச்சி குன்றிய (பெரிய) குழந்தையை பார்ப்பது போல் இவர்களை கவனித்து வரவேண்டும். இவர்கள் எவ்வளவு செய்தாலும் அதனுடைய அருமை, பெருமை டிமென்சியா நோயாளிக்கு தெரியாது. ஆகையால் பல நேரங்களில் மனசோர்வும், விரக்தியும் ஏற்படுவதுண்டு.

இத்தோடு இவர்களின் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படும். நேரத்திற்கு உணவு இல்லை, உறக்கம் இல்லை, நோயாளியின் கவனிப்பு, வேலைச் சுமை, இத்தோடு குடும்பத்தில் ஏற்படும் அன்றாட பிரச்சனைகள் இவை அனைத்தும் உறவினர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இத்தோடு நோயாளியின் தொடர் சிகிச்சையால் நிதி வசதியும் பாதிக்கப்படும். இளம் கணவர், மனைவி இடையே தாம்பத்திய உறவும் சீர்கேடும் என்பது சொல்லாமலேயே விளங்கும். மறதி ஒரு நோயாக உருவேடுக்கும் பொழுது அதன் விளைவு என்ன என்பதை பார்த்தீர்களா?

மறதி ஓரளவிற்குத் தான் சுகமாக இருக்கும். அதே சற்று தீவிரமடைந்து மறதி நோயாக (டிமென்சியா) மாறும் பொழுது அது ஒரு பெரும் சுமையாக மாறுகிறது. சுமை அந்த நோயாளிக்கு மட்டும் அல்ல, அவரை பராமரித்து பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் உண்டு.

அளவுக்கு அதிகமானால் மறதியும் ஒரு சுமையே!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism