Published:Updated:

இந்த Body Spray விஷயமெல்லாம் சங்க காலத்தில இருந்ததா? - வாக்கிங் டாக்கிங் - 13

Representational Image
Representational Image

நடக்க ஆரம்பித்தோம்! எனக்கு லேசாக நெஞ்செரிச்சல் இருந்தது. அதனால், மாஸ்க்குக்கு வெளியே சத்தம் வராமல் ஏப்பம் விட முயற்சித்தேன்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

(வாக்கிங்.... இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான பலம்!! புதுமைக்கும் பழமைக்கும் இடையேயான பாலம் புத்தாண்டு சபதங்களில் ஒன்றான வாக்கிங் பற்றிய ஜாலியான தொடர்... புதுமையும் உண்டு.. நாஸ்டால்ஜியாவும் உண்டு)

முதல் பாகம் : ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

சனிக்கிழமை என்றால் கொஞ்சம் லேட்டாகத் தான் இனியவன் வாக்கிங் வருவார்!

அதனால், நானும் ரிலாக்ஸ் மூடில் இருந்தேன்.

இனியவன் இன்று காலை 7 மணிக்கு தான் வந்தார்.

சார்… கிளம்பலாமா? என்ற குரல் இனியவனுடையது.

நான் ரெடி இனியவன்… போலாமே!

நடக்க ஆரம்பித்தோம்! எனக்கு லேசாக நெஞ்செரிச்சல் இருந்தது. அதனால், மாஸ்க்குக்கு வெளியே சத்தம் வராமல் ஏப்பம் விட முயற்சித்தேன்.

சி.ஆர்… இன்னிக்கு காலையிலேயே ஏப்பம்?

நேத்து நைட் சாப்பிட்டது சேரல போல…

அப்படி என்ன சாப்பிட்டீங்க?

பிரைடு ரைஸ்…

உங்களுக்கு தான் ஆயில் ஐட்டம் சேராதே… எதுக்கு பிரைடு ரைஸ் சாப்பிட்டீங்க…

நேத்து பிரைடே ஆச்சே! அது தான்.

இனியவன் சிரித்து விட்டார்.

Representational Image
Representational Image

எதிரில் நண்பர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

வணக்கம் சி.ஆர்! வணக்கம் இனியவன்!

நீங்க மட்டும் தான் நின்னு கைக்கூப்பி வணக்கம் சொல்றீங்க…

இன்னிக்கு இரண்டு பேரு லேட் போல…

ஆமாம்… விசு இன்னிக்கு செகண்ட் சாட்டர்டே லீவு, மெதுவா வாக்கிங் போறோம்!

எனக்கு இன்னிக்கு ஸ்பெஷல் டூட்டி நான் போகணும் சி.ஆர்

(விசுவின் செண்ட் வாசனை இனியவன் மூக்கினைத் துளைத்தது.)

அதனால தான் விசுவாசமா இருக்கீங்க…

இனியவன் விசு”வாசம்” எனச்சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.

விசு புரிந்தாலும் புரியாத போல நகர ஆரம்பித்தார்.

இனியவன் நீங்க சிலேடையா சொன்னது புரியாத அளவுக்கு அறிவில்லாதவன்னு நினைச்சுட்டீங்களா?

டைப் ரைட்டரில் எந்த வார்த்தை பெரிய வார்த்தை? - வாக்கிங் டாக்கிங் -12

அய்யய்யோ! நீங்கள் அறிவில்லாதவன் தான்… ஆனா, முட்டாள் அல்ல!

என்ன குழப்புறீங்க இனியவன்?

நீங்க அறிவில் ஆதவன்…

ஆகா… இப்ப எனக்கா?

அவர் சிரிக்க ஆரம்பித்தார்.

இனியவன் ரொம்ப குலுங்கி குலுங்கி சிரிக்காதீங்க… தொப்பை கடமுடா கடமுடான்னு குதிக்குது!

பூசணிக்காய் மாதிரி குண்டாயிட்டே போறேன்…

அப்ப முழுபூசணியை சட்டையில மறைக்க முடியாதுன்னு சொல்லுங்க

ஹா… ஹா…ஹா…

பூசணிக்காய் ஒரு பழம்! ஆனா, நம்ம அதை காய்கறியில சேர்த்துக்கிட்டோம்!

ஹா ஹா ஹா...

நீங்க வெயிட் கம்மின்னு சொல்றது கேட்டா எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல...

உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது...

உங்க நல்ல மனசுக்கு நீங்க 99 வருசம் வாழணும்...

அதென்ன கணக்கு சார் 99? ஒரு வருஷம் என்னாச்சு?

அது தான் இப்ப ஓடிட்டு இருக்கே!

இனியவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை....

அதெப்படி எனக்கு ஹார்ட் அட்டாக் வராதுன்னு சொல்றீங்க இனியவன்?

Representational Image
Representational Image

ஆமாங்க சார்... உங்க உயரம் 10 அடின்னு வைச்சுக்கோங்க...

அட சாமி 10 அடியா? நான் தான் உலகிலேயே அதிகமா உயரமா இருப்பேன்!

சும்மா கணக்குக்கு வைச்சுக்கோங்க சார்!

சரி வைச்சுக்கோவோம்...

நீங்க மூச்சு இழுக்கும் போது மார்பு விரியும் அளவு 34 ன்னு வைங்க...

எனக்கு 5 செமீ கூட மார்பு விரியாம மிலிட்டரி செலக்சனில ஓடியாந்துட்டேன்.

இல்லைன்னா... பாகிஸ்தான் பார்டரில் இருந்திருப்பீங்களோ?

ஒகே...சொல்லுங்க!

சார்... உயரத்தையும் மார்பளவையும் பெருக்கி அதை 17 ஆல் வகுங்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு ஏழாம் வாய்ப்பாடே கஷ்டம்... இதுல 17 வேறையா?

17 ஆம் வாய்ப்பாடு சொல்ல ஏழாம் வாய்ப்பாடு போதுமே!

அட சாமி! எப்படி?

4x17 எவ்வளவுன்னு சொல்ல, 4x7 தெரிஞ்சா போதுமே...

ஆமா 28!

எட்டை அப்படியே வைச்சுக்கோங்க... முன்னாடி இருக்கிற 2 உடன் 4 ஐ சேர்க்க வேண்டியது தான்!

இருங்க... 9x17 போட்டுப் பார்க்கிறேன்... 9x7=63ன்னு, இதில 3 அப்படியே வைச்சுக்கிட்டேன்! 6 உடன் 9 ஐ கூட்டினா 15, அப்ப விடை 153.

சார்... கலக்கீறீங்க!

இனியவன் நான் ஒத்துக்க மாட்டேன்! கால்குலேட்டரில போட்டு பாருங்க...

மொபைலில் கணக்குப் போட்டுப் பார்த்தார்.

சி,ஆர்... இங்கே பாருங்க 153 தான்...

ரைட் இப்ப சொல்லுங்க... 5 அடிஉயரத்தையும் 34 இன்ச் மார்பளவையும் பெருக்கி,17 ஆல் வகுக்கணுமா?

ஆமா…120 பவுண்ட் வரும்…

எனக்கு விடை 10 தானே வருது… 34x5=170, 170 ஐ 10 ஆல் வகுத்தா 10 தானே வருது?

கணக்கில உங்களுக்கு அடிமேல அடி விழுது…

நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி

புரியல இனியவன்…

சார்… ஒரு அடி 12 இன்ச், அப்ப 5 அடி 60 இன்ச் ஆகுமே! 60x34=2034, அதை 17 ஆல் வகுத்தா 120 வரும்…

ஆமாம்… எனக்குத் தெரியும் இருந்தாலும்… நீங்க கண்டுப்பிடிக்கிறாங்கன்னு பார்த்தேன்…

நல்லா சமாளிக்கீறிங்க… 120 வந்தா 110க்கும் 130 க்கும் எடை இருக்கணும்...

இருந்தா ஹார்ட் அட்டாக் வராதா இனியவன்...

இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்சார்! அவ்வளவு தான் அப்பப்ப உடல் பரிசோதனை செஞ்சுக்கணும்!

மொதல்ல போய் மூக்கை டெஸ்ட் செய்யணும்…

ஏங்க சி.ஆர்?

அந்த விசு வாசம் உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு என் மூக்குக்கு தெரியலையே!

வாசனைத் தெரியலையா?

மூப்பனாரையும் தெரியும்….

அட போங்க சார்… நிஜமாலும் விசுவின் BODY SPRAY ஸ்மெல் தெரியாம இருந்தா கோவிட் இருந்துட போகுது…

நான் இரண்டு டோஸ் போட்டுட்டேன்…

இரண்டு டோஸ் போட்டாலும் கவனமா இருக்கணும்…

அது சரி இனியவன்… இந்த BODY SPRAY விஷயமெல்லாம் சங்க காலத்தில இருந்ததா?

Representational Image
Representational Image

என்ன இப்படி கேட்கிறீங்க… பரிபாடல் என்ன சொல்லுதுன்னு பாருங்க…

“ஆடல் அறியா அரிவை போலவும்
ஊடல் அறியா உவகையள் போலவும்
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது,
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க்கலவை போலப்
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம்பூம் புனல்.” (பரி 7: 17-22)

என்ன அர்த்தம் சொல்லுங்க...

வைகை ஆற்றில் புதுப்புனல் அதாவது தண்ணி நறுமணத்தோடு வருதாம்... ஆனால், அந்த ஆற்றின் ஆழத்தில் வேறொரு நறுமணமும் இருக்குதாம்... அது தான் பொது நாற்றம் என்கிறது பரிபாடல்.

ஆடவரும் மகளிரும் குளித்து விட்டு அவர்கள் BODY SPRAY ஐ வெற்றுடம்பிற்கு அடித்துக்கொண்டு பிறகு அவர்களின் ஆடைகளுக்கும் BODY SPRAY அடிப்பார்களாம். இப்படி ஆறு பொது நாற்றமும் புது நாற்றமும் கொண்டு வருகிறதாம்!

-வாக்கிங் தொடரும்!

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு