Published:Updated:

அட கோதுமையில் இத்தனை ஸ்னாக்ஸ் செய்யலாமா? - சிம்பிள் சமையல்

Representational Image
Representational Image

கோதுமை மாவில் சிம்பிளாகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய சில டிஷ்களை வாசகர் பகிர்ந்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கோதுமை கல கலா

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு- கால் கிலோ

உப்பு தேவைக்கேற்ப,

சமையல் சோடா- கால் டீஸ்பூன்

எண்ணெய் தேவைக்கேற்ப

மிளகாய்த் தூள் -ஒன்றரை டேபிள் ஸ்பூன்

செய்முறை : முதலில் கோதுமை மாவுடன் சமையல் சோடா, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை பூரி கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து கத்தியால் சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த துண்டுகளை போட்டு பொன்னிறமானதும் இறக்கி விட வேண்டும். பின்பு மிளகாய்த் தூள், உப்பை அதன் மீது தூவி விடவும். சுவையான கோதுமை கல கலா ரெடி....

Representational Image
Representational Image

கோதுமை இடியாப்பம்

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்

அரிசி மாவு - அரை கப்

எண்ணெய் தேவைக்கேற்ப

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் கோதுமை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மாவை சுத்தமான துணியில் மூட்டையாகக் கட்டி இட்லி பானையில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்து கட்டிகளின்றி சலித்து ஆற வைக்கவும். அதன் பிறகு சலித்த கோதுமை மாவுடன் அரிசி மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து சூடான தண்ணீர் விட்டு இடியாப்ப மாவு பதத்திற்கு பிசையவும். பின்பு பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்ப தட்டிலோ அல்லது இட்லி தட்டிலோ பிழியவும். அதன் பிறகு பிழிந்த இடியாப்பத்தை இட்லி பானையில் வைத்து 5 - 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். மென்மையான, சுவையான கோதுமை இடியாப்பம் தயார். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தேங்காய்ப் பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

குறிப்பு : இந்த மாவை டப்பாவில் கொட்டி வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோதுமை குழி பணியாரம்

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - கால் கிலோ

இட்லி மாவு - கால் கப்

ரவை - 1 டேபிள் ஸ்பூன்

முட்டை- 1

தேங்காய் துருவல் -கால் கப்

முந்திரி -3(பொடியாக்கியது)

உப்பு தேவைக்கேற்ப

வெல்லம் - 300 கிராம் (பொடியாக்கியது)

ஏலக்காய் - 3 (பொடியாக்கியது)

எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை : வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும். கோதுமை மாவில் இட்லி மாவு, ரவை, முட்டை, பொடியாக்கிய முந்திரி, உப்பு, ஏலக்காய் பொடி, வடிகட்டிய வெல்லம் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கெட்டியாக இருந்தால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு, குழிபணியார சட்டியை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு பணியாரமாக சுட்டெடுக்கலாம்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Representational Image
Representational Image

கோதுமை மாவு அப்பம்

தேவையான பொருட்கள்..

கோதுமை மாவு - கால் கிலோ

அரிசி மாவு - கால் கப்

வெல்லம் - ஒரு கப் (பொடியாக்கியது)

சமையல் சோடா - கால் டீஸ்பூன்

ஏலக்காய் - 2 (பொடியாக்கியது)

உப்பு - தேவைக்கேற்ப

தேங்காய் துருவல் - கால் கப்

சிறிய வாழைப்பழம் - ஒன்று

செய்முறை : வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில் வெல்லம், தேவையான அளவு தண்ணீர், உப்பு, வாழைப்பழம், பொடியாக்கிய ஏலக்காய், தேங்காய் துருவல், அரிசி மாவு, சோட மாவு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக கரைத்து குழிக்கரண்டி அளவுக்கு எடுத்து எண்ணெயில் ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

குறிப்பு : முட்டை சாப்பிடுபவர்கள் இதனுடன் ஒரு முட்டை சேர்த்து பரிமாறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோதுமை முறுக்கு

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - கால் கிலோ

மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

பெருங்காயத்தூள்- 3 சிட்டிகை

எள் - கால் டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

எண்ணெய் தேவைக்கேற்ப

Representational Image
Representational Image

செய்முறை : கோதுமை மாவை ஒரு மெல்லிய துணியில் கட்டி, ஆவியில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். ( தண்ணீர், உப்பு கலக்காத வெறும் மாவைதான் வேக வைக்கவேண்டும்) பின்பு ஒரு பாத்திரத்தில் வெந்த கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவைப் பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மாவை முறுக்கு அச்சில் போட்டு வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கிப் பிழியவும். பின்பு மாவு இரு புறமும் வெந்தவுடன், முறுக்கை எடுக்கவும். இந்த முறுக்கு வேக சற்று நேரம் எடுக்கும். மிதமான தீயில் வைத்துப் வேக வைக்கவும். மற்ற முறுக்கு வகைகளை விட இது சிறிது அதிகம் எண்ணெய் இழுக்கும். குறிப்பு : குக்கரில் வைத்தால் வெயிட் போட வேண்டாம். மாவை ஆவியில் இருந்து எடுத்து ஆறியவுடன் நன்கு சலித்துக் கொள்ளவும்.

-ஏ.எஸ். கோவிந்தராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு