Published:Updated:

எனக்கு வாய்த்தது குக்கர் பொங்கல் தான்! - நகரவாசியின் பொங்கல் | My Vikatan

Representational Image

நகரவாசியான‌ எனக்கு சூரியன்‌‌ மட்டுமே கண்ணுக்குத் தென்படுவார். இயற்கைக்கும் , வயல்வெளிக்கும் நான்‌ பல மைல்கள் பயணிக்கவேண்டும்.

எனக்கு வாய்த்தது குக்கர் பொங்கல் தான்! - நகரவாசியின் பொங்கல் | My Vikatan

நகரவாசியான‌ எனக்கு சூரியன்‌‌ மட்டுமே கண்ணுக்குத் தென்படுவார். இயற்கைக்கும் , வயல்வெளிக்கும் நான்‌ பல மைல்கள் பயணிக்கவேண்டும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என் தைத்திருநாள் நன்றாகவே விடிந்தது. பொங்கல்‌ என்றால் நினைவில் வருவது, சூரியன், வயல்வெளி, மாடுகள் , இயற்கை போன்றவை.‌. நகரவாசியான‌ எனக்கு சூரியன்‌‌ மட்டுமே கண்ணுக்குத் தென்படுவார். இயற்கைக்கும் , வயல்வெளிக்கும் நான்‌ பல மைல்கள் பயணிக்கவேண்டும்.

ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வச்சேன்...‌நான் பூவாயிஈஈஈ ,, என‌ எனக்கும் கண்டாங்கி சேலைக் கட்டி பி. சுசீலா குரலில் கவுதமி போல் பாட்டுப் பாட ஆசைதான்.. ஆனால் இந்தப் பிறவியில் அமைந்தது நகர வாழ்க்கைத் தான்.‌ அதனால் வாசலில் பொங்கல் பானை கோலமிட்டு, வீட்டுக்குள் செய்யும் குக்கர் பொங்கல் தான்‌ இன்றைய‌ ஸ்பெஷல்.

Representational Image
Representational Image

என்‌ வீட்டு பால்கனியில் இருந்தபடியே சூரியனைப் பார்த்து வணக்கம் கூறிவிட்டு பொங்கலையும் செய்து இறைவனுக்குப் படைத்துப் பின்‌ என்‌ குடும்பத்தினர் அதைச் சாப்பிட்டால் பொங்கலோ பொங்கல் தான். குழந்தைகள் வளர்ந்த பின்னர், புது ஆடைகள்‌ அணிந்து மகிழ்வதையெல்லாம் நிறுத்திக் கொண்டு விடுகின்றனர்..

பின்‌ இருக்கவே இருக்கிறது நம் கண்ணைக் கட்டும் அளவிற்கு ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்... டிவி‌ நடிகர்கள் அனைவரும் சென்னைக்கு மிக அருகில் உள்ள‌ ஏதாவது வயவ்வெளிக்கு சில நாட்களுக்கு முன்னரே சென்று பொங்கல் கொண்டாடுவது போல் நடித்த நிகழ்ச்சிகள் இன்று‌ ஒளிபரப்பாகும்..

Representational Image
Representational Image

பொங்கலில்‌ சிறந்தது,, சக்கரைப்‌ பொங்கலா.. இல்லை வெண் பொங்கலா‌ என்ற‌ தலைப்பில் நடக்கும் பட்டிமன்றம், நடுநடுவில் திரை நட்சத்திரங்கள் வந்து ஹேப்பி பொங்கல் எனக் கூறுவது, ஏகப்பட்ட விளம்பரங்கள், ஸ்பெஷல் திரைப்படங்கள் என்று‌ தொலைக் காட்சித் திரை பொங்கல் லோகோ(logo) வுடன் மிக‌மிக பிஸியாக இருக்கும். இன்றைக்காவது ஸ்பெஷல் திரைப்பட மாக திரையில் வரும் காந்தாரா சினிமா பார்க்கவேண்டும் என‌ நினைத்துக் கொண்டு இருக்கிறேன்..

மற்றபடி அடிக்கடி கைப்பேசியை‌ நோண்டியபடி வாட்ஸ்ஆப்பில் பொங்கல் வாழ்த்துக்கள் அனுப்பியவர்களுக்கு ...தேங்க்யூ‌‌ விஷ் யூ த சேம் என பதிலளித்து ...டையர்டாகி, அதைப்பற்றிக் கவலைப்படாமல் வாட்ஸ்ஆப்‌ ஸ்டேட்ஸ் வேறு ஓபன்‌‌ செய்து சிலரின்‌ வீட்டு பொங்கல் கோலங்கள், பொங்கல் செய்த புகைப்படங்கள், கரும்பு , மஞ்சள்‌கொத்து புகைப்படங்கள் என‌ அவற்றையும்‌ பார்த்து , என்‌ வீட்டு சமையலையும் செய்து கொண்டே.... தை மாதம்‌ தொடங்கிவிட்டது!

Representational Image
Representational Image

இன்னும்‌ சில நாட்களில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளையும் வீட்டிலிருந்தே தொலைக்காட்சி வழியே பார்த்துவிட்டால்..‌‌‌‌‌‌‌‌‌‌‌என்‌ இன்றைய‌ வருடத்திற்கான பொங்கல் விழா சுபமாக முடிந்தவிடும்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.