அன்றைய காலக்கட்டத்தில் ஒலிப்பதிவு என்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. முதல் ஒலித்ததகடுகள் அலுமினியத்தால் ஆனவை. பின்னர், அரக்கினால் செய்யப்பட்டன. அதன் பிறகு பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட ஒலி தகடுகள் வந்தன. ஒளிப்பதிவுகள் செல்லுலோஸ் நைட்ரேட் என்ற பிளாஸ்டிக்கினால் ஆன ஃபில்ம்களில் செய்யப்பட்டது. இதை செல்லுலாய்ட் என்றும் அழைத்தனர். இந்த வார்த்தை பலருக்கும் பரிச்சயமானது. அதன் பிறகு பாலியெஸ்டர் என்ற பிளாஸ்டிக்கினால் ஆன ஃபில்ம்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

ஒளிப்பதிவு கருப்பு வெள்ளையில் ஆரம்பித்து வண்ணத்திற்கு மாறியது. இந்த ஃபில்ம்களை தயாரிப்பதில் உலகின் ஜாம்பவான் ஈஸ்ட்மன் கொடாக். அமெரிக்காவின் ராசஸ்ட்ர் நகரை தலைமையிடமாக கொண்ட இந்த தொழிற்சாலையை நிறுவியவர்கள் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் மற்றும் ஹென்றி ஸ்ட்ராங். நிறுவிய ஆண்டு 1892. பழைய திரைப்படங்களின் விளம்பரங்களில் "ஈஸ்ட்மேன் கலரில்" என்ற வார்த்தைகளை கவனித்திருப்பீர்கள். அதற்குக் காரணம், அத்திரைப்படங்களின் ஒளி ஒலிப்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஃபில்ம்களை தயாரித்தது ஈஸ்ட்மேன் கொடாக் தொழிற்சாலை. அவர்கள் தான் புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தும் கேமராக்களையும் அதற்கான ஃபில்ம்களையும் உற்பத்தி செய்தனர். எனவே 1990கள் வரை புகைப்பட துறையின் மன்னர்களாக விளங்கியது கொடாக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎந்த அளவிற்கென்றால், ஒரு நிகழ்ச்சியை எதிர்கால தலைமுறை தெரிந்து கொள்ள புகைப்படம் எடுக்கப்பட்டால், அதை "கொடாக் மொமெண்ட்" என்று அழைத்தார்கள். அழகான புகைப்படம் எடுப்பது ஒரு கலை என்றால், ஃபில்ம் கேமராவை இயக்குவது அதை விட பெரிய கலை. புகைப்பட சுருள் ஒரு பிளாஸ்ட்டிக் டப்பாவில் இருக்கும். அதன் ஒரு நுனியை வெளியே இழுத்து கேமராவில் இணைக்க வேண்டும். இதில் பலர் தவறு செய்து விடுவார்கள். அதன் பிறகு கேமராவை மூடி புகைப்படம் எடுக்க ஆரம்பிக்கலாம். பொதுவாக அதிகபட்சம் 36 புகைப்படங்கள் எடுக்கலாம். எடுக்கிற புகைப்படங்கள் எப்படி இருக்கின்றது என்று சரிபார்க்க முடியாது. உதாரணமாக புகைப்படம் எடுக்கிற அந்த நொடியில் ஒருவர் கண் திறந்திருந்ததா மூடி இருந்ததா என்றெல்லாம் தெரியாது. கண்ணை மூடி விடக்கூடாது என்பதற்காக, அந்த கால புகைப்படங்களில் பலர் கண்ணை பெரிதாக திறந்து வைத்திருப்பார்கள்.
அழகான புகைப்படம் எடுப்பது ஒரு கலை என்றால், ஃபில்ம் கேமராவை இயக்குவது அதை விட பெரிய கலை.
பழைய புகைப்படங்களில் உள்ள பெரும்பாலான மனிதர்களின் கண் விரிந்திருப்பதற்கான காரணம் இது தான் என நினைக்கிறேன். ஒரு பத்து படங்கள் எடுத்தால் அதன் தரம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாது. அனைத்து படங்களையும் எடுத்த பிறகு, கேமராவில் உள்ள ஒரு குமிழை பின் புறமாக சுற்றினால், ஃபில்ம் சுருள் மீண்டும் பிளாஸ்டிக் டப்பாவிற்குள் சென்றுவிடும். அதன் பிறகு கேமராவை திறந்து அந்த பிளாஸ்டிக் டப்பாவை வெளியே எடுக்க வேண்டும். ஒழுங்காக ஃபில்ம் சுருளை சுற்றாமல் கேமராவை திறந்தாள், ஒரு புகைப்படம் கூட கிடைக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எல்லா வேலையையும் சரியாக செய்து, அந்த சுருளை ஸ்டுடியோவில் கொடுத்து கழுவி அதை புகைப்படமாக அச்சடிக்கும் வரை புகைப்படங்களின் தரம் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும். புகைப்படங்கள் நன்றாக வந்திருந்தால் ஏற்படும் மகிழ்ச்சி அளப்பரியது. புகைப்படம் எடுப்பது இவ்வளவு கடினமாக இருந்த காலத்தில் கொடிகட்டி பறந்தது கொடாக். அப்பொழுது தான் டிஜிட்டல் கேமராக்கள் அறிமுகமாகின. அவை மொத்தமாக கொடாக்கின் ஃபில்ம் கேமரா தொழிலை அழித்து விட்டது.

சோனி, கேனான், நிக்கன் போன்ற பல கம்பெனிகள் டிஜிட்டல் கேமரா தொழிலில் முன்னணியில் இருந்தன. இப்பொழுது தனியாக கேமரா வைத்திருப்பதே குறைந்து விட்டது. செல்போனில் உள்ள டிஜிட்டல் கேமராவில் சிறந்த புகைப்படங்கள் காணொளிகள் எடுக்க முடிகிறது. அது சரி, டிஜிட்டல் கேமராவை கண்டுபிடித்து ஈஸ்ட்மேன் கொடாக்கின் தொழிலை அழித்த கம்பெனி எது? நம்ம ஈஸ்ட்மேன் கொடாக் தான்! டிஜிட்டல் கேமராவை கண்டுபிடித்து காப்புரிமை வாங்கியது ஈஸ்ட்மேன் கொடாக் கம்பெனி. யாராவது கொடாக் டிஜிட்டல் கேமராவை பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பு குறைவு. அதே போல எல்ஈடி தொலைக்காட்சி பயன்படுத்துகிறோம் இல்லையா, அதை கண்டுபிடித்ததும் ஈஸ்ட்மேன் கொடாக் தான்.
யாராவது கொடாக் டிவி பயன்படுத்துகிறீர்களா? வாய்ப்பில்லை. கொடாக் கம்பெனியில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவரும், எல்ஈடி டிவி கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவருமான முனைவர் ராஜேஸ்வரனும் நானும் ஐஐடி கான்பூரில் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டோம்.
அப்பொழுது முனைவர் ராஜேஸ்வரனிடம், கொடாக்கின் டிஜிட்டல் கேமரா தொழில் தோல்வியடைந்தது ஏன் என்று கேட்டேன். அவர்களுடைய ஃபில்ம் கேமரா தொழிலை அளவுக்கதிகமாக நேசித்தனர். டிஜிட்டல் கேமராவை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று டிஜிட்டல் கேமரா விற்பனை சக்கை போடு போடும் வரை நம்பினர் என்று சொன்னார். ஒரு தொழிலில் எப்படி மன்னனாக விளங்குவது என்பதற்கும், அதே தொழிலில் எப்படி தோற்பது என்பதற்கும் கொடாக் தொழிற்சாலை ஒரு மிக சிறந்த உதாரணம். தொழில் முனைவோருக்கான முக்கியமான பாடம் ஒன்றை இக்கட்டுரையில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, மூத்த முதன்மை விஞ்ஞானி, சி.எஸ்.ஐ.ஆர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.