வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"கடைசி விவசாயி" படத்தை பார்த்துவிட்டு "இந்தப் படைப்பின் மூலம் மணிகண்டன் தன் ஆன்மாவை சுத்தப்படுத்த முயன்றிருக்கிறார்" என்று பாராட்டி இருந்தார் இயக்குனர் மிஷ்கின். அவர் கூறியதில் "ஆன்மாவை சுத்தப்படுத்துதல்" என்ற வரி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. "நம் ஆன்மாவை சுத்தப்படுத்த என்ன வழி?" என்று கேட்டால் "நல்ல இலக்கியங்களை வாசிப்பது ஒன்றே அதற்கு தீர்வு என்பேன்". அப்படிபட்ட நல்ல இலக்கியங்களில் ஒன்று தான் மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்டம்" என்கிற நாவல். ஆனந்த விகடனில் அவரது முதல் சிறுகதை வெளியானபோது அந்தச் சிறுகதையின் கடைசி வரியை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மயிலன் ஜியை பாராட்டி இருந்தார் எழுத்தாளர் வண்ணதாசன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது முதலே மயிலனின் படைப்புகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து வருகிறது. அப்படித்தான் "பிரபாகரனின் போஸ்ட்மாடர்ம்" நாவலை கிண்டிலில் படிக்கத் தொடங்கினேன். இந்த நாவலில் பிடித்தமான வரிகளோ, பிடித்தமான தருணங்களோ என்று ரசித்ததை சொல்லாமல் அந்தப் படைப்பு உணர்வு ரீதியாக எனக்கு எப்படிபட்ட அனுபவத்தை தந்தது என்பதை மட்டுமே பகிர்கிறேன்.
இந்த நாவலை படித்து ஒரு வருடம் கழித்து எழுதும் பதிவு இது. நிறைய காட்சிகள் மறந்துவிட்டது. ஆனால் நாவலின் பெயரை பார்த்தாலே அது எப்படிபட்ட எமோசனலை தந்தது என்பது மட்டும் எனக்கு இன்னும் மறக்கவில்லை. ஒருபோதும் அதை மறக்கவும் மாட்டேன். முழுநேரமாக அமர்ந்து முழு புத்தகத்தையும் படித்து முடிக்க எனக்கு மூன்று நாட்கள் ஆனது. முதல் நாளில் நாவலை படிக்க தொடங்கிய சில வரிகளிலயே என்னுடைய ஆன்மா அந்தப் புத்தகத்திற்கள் நுழைந்துவிட்டது. அதற்குப் பிறகு நிகழ்கால உலகத்தை மறந்து முழுக்க முழுக்க அந்த நாவலுக்குள்ளயே தான் என் ஆன்மா சுற்றி அலைந்துகொண்டிருந்தது. காலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு பதினோரு மணி வரைக்கும் கூட வாசிப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது.
என் அம்மா, "அந்த செல்ல இப்பயாவது கீழ வச்சிட்டு படுத்து தூங்கு..." என்று அதட்ட... எவ்வளவு முயன்றும் என்னால் தூங்க முடியவில்லை. படுக்கையில் வீழ்ந்த போதெல்லாம் உடல் தூக்கி அடித்தது. முழுநாவலையும் படித்து முடித்தால் மட்டுமே தூக்கம் வரும் என்ற நிலைக்கு ஆளானேன். அந்த அளவுக்கு பிரபாகரனோடு ஒன்றிப் போனேன். பிரபாகரனை எது சாகடித்தது? என்ற கேள்வி என் மனதுக்குள் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅந்தக் கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்த என்னிடம் பிரபாகரனின் இறப்பிற்கு நீயும் (நாமளும்) ஒரு வகையில் காரணம் என்று எனக்கு உணர்த்திய இடத்தில் மயிலன் வெற்றி பெறுகிறார். அந்த வகையில் நாவலில் வரும் பிரபாகரனை எல்லோருடனும் சேர்ந்து நானும் கொன்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது அழாமல் இருக்க முடியவில்லை. செல்லை கீழே வைத்துவிட்டு தலையில் கைவைத்துக்கொண்டு சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தேன். கபாலம் கலங்குவது போலிருந்தது. (ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னாடியும் ஏகப்பட்ட கொலைகாரங்க இருப்பாங்க என்ற வசனத்தை எதோ ஒரு சினிமாவில் கேட்டது நினைவுக்கு வந்தது). மயிலன் இந்த நாவலை எப்படி எழுதினார்? எழுதும்போது அவருடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? எவ்வளவு கண்ணீர் வடித்துக்கொண்டே இந்த நாவலை எழுதியிருப்பார்? என்று நினைத்துப் பார்க்கும்போதே வியப்பாக இருந்தது.

நாவல் படித்து முடித்தும் பிரபாகரனின் மீதான காதல் மாறவில்லை. "மிஸ் யூ பிரபாகர்" என்று சொல்ல தோன்றியது. அதே சமயம் "ரொம்ப ஸாரி பிரபாகர்... தெரியாமல் உன் தற்கொலைக்கு நானும் காரணமாகிவிட்டேன்" என்று பிரபாகரனின் ஆன்மாவிடம் மன்னிப்பும் கேட்கத் தோன்றியது. சிறுவயது முதல் நான் செய்த தவறுகளெல்லாம் கண்முன் வரிசை வரிசையாக வந்து நிற்க கண்ணீர் இடைவிடாமல் சுரந்துகொண்டே இருந்தது. (அன்றைய நாளில் அம்மாவும் அப்பாவும் பகல்பொழுதில் வேலைக்குச் சென்றிருந்தால் என்னால் சுதந்திரமாக அழ முடிந்தது). அழுது முடித்ததும் குளித்து முடித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு கோவிலுக்குச் சென்று வந்தேன். புதிதாக பிறந்ததை போன்று உணர்ந்தேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குற்ற உணர்ச்சியில் மூழ்கிப் போய் குறைந்தது ஒரு நாளாவது நாம் செய்த தவறுகளை திரும்ப திரும்ப நினைத்து பார்த்து அழுவோம். தப்பித்தவறி கூட யாருடைய தற்கொலைக்கும் நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று பதறுவோம். இதயம் பலவீனமானவர்கள் இந்த நாவலை படிக்க வேண்டாம் என்று தான் முதலில் சொல்ல நினைத்தேன். ஆனால் அப்படி சொல்வது தவறு. எல்லோருமே இந்த நாவலை கண்டிப்பாக ஒருமுறையாவது வாசிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தை வாசித்ததற்குப் பிறகு உங்களது மனத்திடம் அதிகரித்திருப்பதை உணர்வீர்கள்.
"அறம்" என்கிற புள்ளியிலிருந்து தொடங்கப்படும் எந்தவொரு படைப்பும் நிச்சயம் தோல்வியை சந்திக்காது. இனிவரும் காலங்களில் இந்த நாவல் நிச்சயம் பெரிதாக பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
குறிப்பு: ஆன்மா ஒருமுறை சுத்தமடைந்தால் கடைசி வரைக்கும் அதே பரிசுத்த நிலையில் அப்படியே இருக்காது. திரும்ப திரும்ப அது மாசடைந்து கலங்கிப் போகும். திரும்ப திரும்ப நல்ல இலக்கியங்களை வாசிப்பது, திரும்ப திரும்ப நல்ல மனிதர்களை சந்திப்பது போன்றவற்றின் மூலமே நம் ஆன்மா சுத்தமடையும். ஆன்ம பலம் அதிகரிக்கும்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.