Published:Updated:

``இளையராஜா மேல் இரக்கம் கொள்ளுங்கள்!’’ - வாசகர் வாய்ஸ்

இளையராஜா

இசையையையும் ஆன்மீகத்தை மட்டுமே பேசி வரும் இளையராஜா பாஜக ஆட்சித்தலைமை நரேந்திர மோடியைப் பாராட்டி முன்னுரை எழுத காரணம் வைத்திருக்க மாட்டாரா?

``இளையராஜா மேல் இரக்கம் கொள்ளுங்கள்!’’ - வாசகர் வாய்ஸ்

இசையையையும் ஆன்மீகத்தை மட்டுமே பேசி வரும் இளையராஜா பாஜக ஆட்சித்தலைமை நரேந்திர மோடியைப் பாராட்டி முன்னுரை எழுத காரணம் வைத்திருக்க மாட்டாரா?

Published:Updated:
இளையராஜா

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இசைத்துறையில் மூழ்கிக் கிடப்பதால் அரசியல், சமூகம் செயல்பாடுகளில் ஈடுபடத் தேவையில்லை என்று தான் இதுவரை இளையராஜா நம்பப்பட்டு வந்தார். ஆனால் பல ஆண்டுகளாக அம்பேத்கரைப் படித்திருந்தவர் போலவும் பல ஆண்டுகள் நரேந்திர மோடியை அறிந்திருந்தவர் போலவும் தேர்வு செய்யப்பட்ட சொற்றொடர்களைக் கொண்டு ஒரு முன்னுரையை ‘அம்பேத்கரும் மோடியும்’ என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் இளையராஜா பேசியிருப்பது தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முன்னுரை குறித்து இரு துருவங்களில் பார்க்க வேண்டியுள்ளது, ஒரு துருவம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், இன்னொரு துருவம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

தர்மன்
தர்மன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோ.தர்மன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில்,

“சில நாட்களாக ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதியதற்காக இசைஞானி இளையராஜாவை மோசமான முறையில் விமர்சித்து எழுதப்படும் விமர்சனங்களை பார்க்கிறேன்.

இந்த மோசமான விமர்சனங்களுக்கு காரணம் ,தன்னை சந்தோஷப்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கவும் ,தான் மனச்சோர்வடையும் போது அதிலிருந்து தன்னை மீட்கவும் பாடல்களை உருவாக்கித் தரும் ஒரு இசையமைப்பாளராக மட்டுமே இளையராஜாவைப் பார்த்தவர்களின் புலம்பல்கள்.இப்படிப்பட்டவர்களால் தான் அவருடைய இன்னொரு முகத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஒரு கலைஞனை,ஒரு படைப்பாளியை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து ரசித்தவர்கள்தான் இன்று அவருடைய ஜாதியைக் கூட விமர்சித்து பதிவிடுகிறார்கள். நீங்கள் ஆராதிக்கிற, நீங்கள் வழிபடுகின்ற,நீங்கள் கை தட்டி விசிலடிக்கின்ற,ஒரு கூட்டத்தோடு ஒரு கலைஞன் சேராமல் மாறுபடுகிற,கருத்துச் சொல்கின்ற உரிமையை ஏன் கொச்சைப் படுத்துகிறீர்கள்.அவருடைய கருத்தைச் சொல்லவும், பேசவும்,எழுதவும் முழுச் சுதந்திரம் அவருக்குண்டு….” (சோ.தர்மன், முகநூல் பக்கம் 16.04.2022)

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சோ.தர்மன் அவர்கள் சொல்வது போல் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்துச் சுதந்திரம் உண்டு.

அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழியில் கட்சி நடத்துகிறோம் என்று சொல்கிற பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, குடியரசுச் சட்சி, லோக் ஜன சக்தி உள்ளிட்டவையும் கூட பாஜகவுடன் கூட்டணி வைக்க காரணங்கள் சொல்லியுள்ளன.

பெரியார் வழியில் பயணிக்கிறோம் என்று சொல்லக் கூடிய திராவிடக் கட்சிகள் அனைத்துமே பாஜகவுடன் கூட்டு வைப்பதற்கான காரணங்களைச் சொல்லியுள்ளன.

மக்கள் தொகைக் குறைப்பு, பெண்கள் திருமண வயது உயர்வு ஆகிய திட்டங்களைப் பேசியதற்காக நரேந்திரமோடியைப் பெரியாருடன் ஒப்பிட்டே திராவிடர் கழகம் பேசியது.

அரசியலையே முழுநேரமாக நடத்துகிற அம்பேத்கர், பெரியார் அமைப்புகள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான காரணங்களை வைத்திருக்கும்போது, இசையையையும் ஆன்மீகத்தை மட்டுமே பேசி வரும் இளையராஜா பாஜக ஆட்சித்தலைமை நரேந்திர மோடியைப் பாராட்டி முன்னுரை எழுத காரணம் வைத்திருக்க மாட்டாரா?

இளையராஜா-கங்கை அமரன்
இளையராஜா-கங்கை அமரன்

“விருதுக்காகத்தான் இப்படி முன்னுரை எழுதியிருக்கிறார் என்றும் இளையராஜா மீது விமர்சனங்கள் எழுகின்றன” என்பதற்கும் சோ.தர்மன் பதில் தருகிறார்,

“அதிகாரத்தில் இருப்பவர்கள் ,அதிகாரத்தின் ஆதரவில் இருப்பவர்கள்,அதிகாரத்திற்கு துதி பாடிக் கொண்டிருப்பவர்கள் ஒருக்காலும் படைப்பாளியாகவோ ,கலைஞனாகவோ ஆக முடியாது.இட்டுக் கட்டிய அப்படிப்பட்டவர்களின் புகழை காலம் அழிக்கும் என்பதுதான் வரலாறு. ராஜா தன் உழைப்பாலும் ஞானத்தாலும் மட்டுமே உன்னத நிலையை அடைந்த சுயம்புவான கலைஞன்.

இறுதியாக ஒன்று இளையராஜா விருது வாங்குவதற்காகவே இப்படி எழுதியிருக்கிறார் என்ற கீழ்த்தரமான விமர்சனம்.

"இளையராஜா "பாரத ரத்னா"விருது பெறத் தகுதியான கலைஞன் என்பதை மனச்சாட்சியுள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ராஜாவின் கருத்துக்களோடு முரண்படுபவர்களுக்கு அவருடைய இசையை ரசிக்காமல் கடந்து போகிற உரிமை மட்டுமே உண்டு.

(சோ.தர்மன், முகநூல் பக்கம் 16.04.2022)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பார்வையிலும் கவனிக்க வேண்டியுள்ளது,

“சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் அவர்கள் நோக்கம். ஆர்எஸ்எஸ் காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அம்பேத்கர் மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும் என்ற புத்தகத்தை கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் இரண்டு பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என இசைஞானி சொல்லியிருக்கிறார்….

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம் என்று இரக்கம் காட்ட விரும்புகிறேன். (நன்றி NEWS18 15.04.2022)”

நாம் அதிகமாகக் கவலைப்படக் கூடிய தகவல் திருமாவின் பேட்டியில் உள்ளது,

ஆர்எஸ்எஸ் கடுமையாக வேலைசெய்கிறது, அவர்கள் இளையராஜாவை மட்டுமல்ல, நடுநிலை சார்ந்த அத்தனை பேரையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான தீவிரமான வேலைகளில் ஈடுபடலாம் என்பதையே திருமாவளவன் சுட்டிக் காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆர்எஸ்எஸ் நேர்த்தியான திட்ட வரைவுகள் வகுத்துக் கொண்டு தங்கள் செயல்திட்டங்களை நடைமுறைபடுத்துகிறது. இன்றைக்கு இளையராஜாவிற்கு நடப்பது நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

நரேந்திரமோடி என்பது ஒரு தனிநபர் சார்ந்த அடையாளம் அல்ல. ‘நரேந்திர மோடி’ அடையாளத்தாண்டி நாளை இன்னொரு அடையாளம் வரலாம். அந்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுப்பதும் செயல்பட வைப்பதும் தனிநபர்கள் அல்ல. அது ஒரு இந்துத்துவாத் தத்துவம்.

உண்மையில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கவலைப்படுபவர்கள் “நரேந்திர மோடியை இளையராஜா புகழ்ந்ததைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். இந்துத்துவாவின் செயல்திட்டங்களில் சிக்க வைப்பட்டுள்ளவர் இளையராஜா என்பதைப் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள்”.

எனவே இந்துத்துவாத் தத்துவதற்கு எதிராகக் கவனம் செலுத்துவதாக இருந்தால், திருமா சொல்வது போல் “இளையராஜா மேல் இரக்கம் கொள்ளுங்கள்” இல்லாவிட்டால் இந்துத்துவா அணிக்குச் சமமான படையைத் திரட்டுவதற்கான திட்டங்கள் திசைமாறும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism