Published:Updated:

மறக்க முடியாத சுதந்திர தினம்! | My Vikatan

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்கள்

அப்போது நாளிதழில் தேனி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ தேர்வு கோவையில் நடை பெறுவதாக அறிவிப்பு வெளியானதை கண்டவுடன் நானும் உடன் மூவரும் என நான்கு பேர் கோவை நேரு விளையாட்டு அரங்கம் அதிகாலை 4 மணி சுமாருக்கு வந்து சேர்ந்தோம்.

மறக்க முடியாத சுதந்திர தினம்! | My Vikatan

அப்போது நாளிதழில் தேனி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ தேர்வு கோவையில் நடை பெறுவதாக அறிவிப்பு வெளியானதை கண்டவுடன் நானும் உடன் மூவரும் என நான்கு பேர் கோவை நேரு விளையாட்டு அரங்கம் அதிகாலை 4 மணி சுமாருக்கு வந்து சேர்ந்தோம்.

Published:Updated:
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத சுதந்திர தின விழா எனில் அது 2008 - ம் ஆண்டு சுதந்திர தின விழாதான்.

1998- 99 ம் கல்வி ஆண்டில் +2 முடித்த நான், 99- 2000- மாவது கல்வி ஆண்டில் புதுச் சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் Diploma in Sanitation எனும் பட்டய கல்வியை முடித்து விட்டு 2001 ம் ஆண்டில் என்னுடைய சொந்த ஊரான தேனிக்கு வந்தேன். அப்போது நாளிதழில் தேனி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ தேர்வு கோவையில் நடை பெறுவதாக அறிவிப்பு வெளியானதை கண்டவுடன் நானும் உடன் மூவரும் என நான்கு பேர் கோவை நேரு விளையாட்டு அரங்கம் அதிகாலை 4 மணி சுமாருக்கு வந்து சேர்ந்தோம். அங்கே எங்களை போன்றே நிறைய இளைஞர்கள் கூட்டம். அரங்கில் உடல் தகுதி தேர்வுகள் அதில் முதலில் உடல் எடை தகுதி தேர்வு என கூறி அரங்கின் வெளியே இருந்த வாழைப்பழங்களை டஜன் கணக்கில் வாங்கி சாப்பிட, நானும் ஒரு சீப்பு பழங்களை வாங்கி சாப்பிட அதிகாலை அரங்கினுள் அழைக்கப்பட்ட நிலையில் சென்றோம்.

ராணுவ ஆள்சேர்ப்பு
ராணுவ ஆள்சேர்ப்பு

உடைகளை களைந்து உள்ளாடையுடன் வரிசையாக நிற்க மார்பில் எண்களை எழுதி அந்த எண் அடிப்படையில் அழைத்து சான்றிதழ்களை சரி பார்க்க அடுத்த கட்டமாக உயரம், எடை, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 1,500 மீட்டர் தூர ஓட்டம் என அனைத்திலும் நான் தேர்ச்சி பெற்ற நிலையில் அடுத்த 15 நாட்களில் மருத்துவ பரிசோதனைக்கு கோவை வர வேண்டுமென்ற அறிவுறுத்தலின் படி வீடு திரும்பி, அதற்குள்ளாக காது சுத்தம், பற்களை சுத்தம் செய்தல் , தினமும் காலையில் ஓட்டம் என தயாராக மருத்துவ பரிசோதனை அன்று கோவை வர, கண், காது, மார்வு என பரிசோதனை முடிய கைகளை உயர்த்துமாறு கூறிட கைகள் நேர்த்தியாக இல்லை என நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்க ஏமாற்றத்துடன் வெளியேற முற்பட , இரண்டு மூன்று குறைபாடுகள் சுட்டிக் காட்டபட்டவர்கள் வீடு செல்லலாம் எனவும், ஒரே ஒரு குறைபாடு சுட்டிக்காட்ட நபர்கள் அடுத்த 15 நாட்கள் கழித்து உதகை குன்னூரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள MRC - எனும் Madras Regiment Centre ராணுவ மருத்துவ மணைக்கு சென்று மறு மருத்துவ பரிசோதனை செய்து அங்கு தேர்வு என சான்று மூலமாக தேர்வானால் ராணுவத்தில் சேரலாம் என கூறிட, அவவாறே 15 நாட்கள் கழிந்த நிலையில் MRC சென்றேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கேயும் உடைகளை களைந்து உள்ளாடையுடன் கூடிய மருத்துவ பரிசோதனை, அங்கும் இறுதியாக நிராகரிக்கப்பட்ட நிலையில் வெளியேறினேன். அதன் பிறகு சென்னை சென்று DMLT படித்தேன். அதன் பின்பாக நாம் ஒரு டிகிரி படிக்க வேண்டுமென்ற ஆவல் மேலிட BSC MICRO BIOLOGY படிக்க கல்லூரியில் சேர்ந்து படிக்க நாட்கள் வேகமாக உருண்டோட அப்போது 2006 , 2007 ம் ஆண்டில் தமிழகத்தில் முதல் முறையாக சிக்குன்குன்யா என்ற உடல் எலும்பு மூட்டுகளில் கடுமையான வலியுடன் கூடிய காய்ச்சல் டெங்கு காய்ச்சல் ஆகிய நோய்கள் கொசுக்கள் மூலமாக தீவிரமாக பரவிட வெகு வேகமாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நானும் வேலை வாய்ப்பக பதிவு மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் 2008 ஜனவ‌ரி - 6 ம் தேதி நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில், உதகை மாவட்ட குன்னூர் வட்டார எடப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட ஆணையுடன் சென்று பணியில் இணைந்தேன்.

தேசியக் கொடி
தேசியக் கொடி

என்னுடைய மருத்துவ அலுவலர் ஜனவரி - 7, 8 ஆகிய தேதிகளில் விடு பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடர்வதாகவும், தன்னுடன் வருமாறு அழைக்க அவருடன் தமிழ் நாடு அரசு என பொறிக்கப்பட்ட ஜீப்பில் ஏறிக் கொள்ள, வாகனம் நேராக சென்று நின்ற இடம், வெலிங்டன் ராணுவ மருத்துவ மணை, அங்கு பணியிலிருந்த மருத்துவ அலுவரிடம் என்னுடைய மருத்துவ அலுவலர், ' இவர்தான் புதிதாக வந்துள்ள சுகாதார ஆய்வாளர் , வரும் நாட்களில் உங்களுடைய மருத்துவ மணை அறிக்கைகளை இவரிடமே சமர்ப்பிக்க வேண்டுமென கூறிட அவரும் எழுந்து புன்னகையுடன் கை குலுக்க நானும் கை குலுக்க மகிழ்ச்சியாக உற்சாகமாக நிறைந்தது அந்த நாள் . அதனை தொடர்ந்து வந்த ஆகஸ்ட்-15 அன்று ராணுவ பயிற்சி முகாமில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவசியமாக கலந்து வேண்டுமென MH மருத்துவ அலுவலரின் வேண்டுகோளினை ஏற்று அந்த விழாவில் கலந்து கொண்டது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத சுதந்திர தினம்.

எந்த இடத்தில் மருத்துவ பரிசோதனையில் தகுதியற்ற நபரென நிராகரிக்கப்பட்ட அதே இடத்தில் சுகாதார ஆய்வாளராக சென்று நின்ற 2008 ஆகஸ்ட் - 15 சுதந்திர தினம் மறக்க முடியாத சுதந்திர தினம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.