Published:Updated:

நான்கு தலைமுறையாக பின்பற்றப்படும் `எலுமிச்சை' அழகு குறிப்புகள்! | My Vikatan

அம்மா இதன் செய்முறையை பத்திரமாக ஒரு பழைய டைரியில் எழுதி வைத்திருந்தார்கள். அதை தேடிக் கண்டுபிடித்து, பார்த்து எழுதுகிறேன்.

நான்கு தலைமுறையாக பின்பற்றப்படும் `எலுமிச்சை' அழகு குறிப்புகள்! | My Vikatan

அம்மா இதன் செய்முறையை பத்திரமாக ஒரு பழைய டைரியில் எழுதி வைத்திருந்தார்கள். அதை தேடிக் கண்டுபிடித்து, பார்த்து எழுதுகிறேன்.

Published:Updated:

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எலுமிச்சை... பார்த்தாலோ நினைத்தாலோ எங்கள் வீட்டு தோட்டம் தான் ஞாபகத்துக்கு வரும். வளவனூரில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மூன்று மரங்கள் இருந்தன. அதன் அருகில் போனாலே அதனுடைய நறுமணம்.. என்னை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் .ரொம்ப உயரம் போவதற்குள் அப்பா அவ்வப்போது அதை ட்ரீம் செய்து விடுவார். பாக்கவே அழகா இருக்கும்.

பொதுவாக எல்லோர் வீட்டிலும் யாராவது வீட்டிற்கு வந்தால் தாம்பூலம் தான் கொடுப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டிற்கு யார் வந்து போனாலும் சரி பை நிறைய எலுமிச்சை பழத்தை அம்மா தருவார்கள். கூடவே அம்மா தயாரித்த ஃபேஸ் பேக் (இப்பதான் ஃபேஸ் பேக் அப்பெல்லாம் இது எலுமிச்சை பவுடர் தான். நாங்களே கேட்போம் எப்படிமா சலிக்காம இத செய்யற? எல்லாருக்கும் அழகா குடுத்து அனுப்புறதுக்கு பதிலா ஃபேக் செய்து விற்கலாமே ?! என்போம். அம்மா புன்னகையை பதிலாகத் தருவார்.

Lemon
Lemon

இந்தப்பவுடரை அம்மாவிற்கு அவர்களின் பாட்டி (தேவகி அம்மாள்)சொல்லிக் கொடுத்ததாம். அதுமட்டுமல்லாமல் முகத்துக்கு என்றும் தனியே ஒரு பவுடர் தயாரிப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவின் எலுமிச்சை தொக்கு நினைத்தாலே நாவில் நீர் ஊற வைக்கும்... சரிப்பா..சரி எங்களுக்கும் சொன்னா நாங்களும் செய்வோமேல்ல... அப்படின்னு நீங்க சொல்றது காதுல விழுது... இதோ சொல்லிட்டா போச்சு. அம்மா இதன் செய்முறையை பத்திரமாக ஒரு பழைய டைரியில் எழுதி வைத்திருந்தார்கள். அதை தேடிக் கண்டுபிடித்து, பார்த்து எழுதுகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எலுமிச்சை தோல்- 50 கிராம் 

கஸ்தூரி மஞ்சள்- 200 கிராம் 

கசகசா -100 கிராம் 

பயத்தம் பருப்பு -கால் கிலோ... இவற்றை நன்கு காய வைத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும் இந்த பவுடரில் சிறிதளவு எடுத்து பாலில் குழைத்து முகம் , பின் கழுத்து, கைகள் மற்றும் கைமுட்டி ஆகிய இடங்களில் தேய்த்து பத்து நிமிடம் ஊறவிட்டு பின் குளிக்க முகம்/உடல் புத்துணர்ச்சி பெறும்.

அதேபோல் எலுமிச்சை தோல்- பத்து கிராம் லவங்கம் ,ஜாதிக்காய், மாசிக்காய் தலா- 10 கிராம், சர்க்கரை -20 கிராம் இது எல்லாவற்றையும் ரவை போல பொடித்துக் கொள்ள வேண்டும் .இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முகம் கை கால்களில் நன்றாக தேய்த்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவ தளர்ந்த சருமம் இறுக்கமாகிவிடும்.

Lemon
Lemon

கூடைப்பந்தாட்டம் விளையாடிவிட்டு (வெளியூர் சென்று)  திரும்பி வரும்போது எல்லாம் அம்மா இதை செய்து கொடுத்து முகம் அலம்பச் சொல்லுவார்கள். அது மட்டுமல்லாமல் வீட்டிற்குள் வந்தவுடன் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் ஒரு மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து ஆவி பிடிக்க சொல்லுவார்கள் அதை பிடித்த மறுகணம் நம்மால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வரும் பாருங்கள்... அதை அனுபவித்தால் தான் தெரியும்.

அம்மா செய்ற சூப்பரான எலுமிச்சை தொக்கு 

எலுமிச்சம் பழம் 15 

பச்சை மிளகாய் 8 

தனி மிளகாய் தூள் 3 டீஸ்பூன்

 மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் 

உப்பு தேவையான அளவு 

வறுத்து பொடித்த வெந்தய பெருங்காய பொடி- இரண்டு டீஸ்பூன் தாளிக்க -கடுகு சிறிதளவு, நல்லெண்ணெய் அரை கப் 

எலுமிச்சம் பழத்தை கழுவி நன்கு துடைத்து நறுக்கி விதைகளை முற்றிலும் நீக்கி விட வேண்டும். அதனுடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பிசறி இரண்டு நாட்கள் ஊற விடவும (பீங்கான் ஜாடி அல்லது கல் ஜாடியாக இருந்தால் நல்லது) பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்க்க வேண்டும். அதனுடன் மிளகாய் தூள், பொடித்த வெந்தய பெருங்காயப்பொடி சேர்த்து சுருள கிளறி இறக்கினால் சுவையான எலுமிச்சை தொக்கு ரெடி.

Lemon
Lemon

இதை கஞ்சிக்கு தொட்டுக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் நோய் வாய் பட்டிருக்கும் போது ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள நாவிற்கு உணவின் சுவை தெரியும். சும்மாவே நக்கி சாப்பிடலாம்...கதை கவிதை பிறக்கும்..

அன்று அம்மா எனக்கு செய்து தந்ததை இன்று நான் என் மகளுக்கு  செய்து தருகிறேன். தலைமுறை தலைமுறையாக (நான்காவது தலைமுறையாக) தொடர்கிறது. எலுமிச்சையுடனான எங்களது பந்தம்

நீங்களும் இதையெல்லாம் வீட்டில் செய்து பாருங்கள். அம்மா ரொம்ப நன்றிமா நீங்கள் எழுதி வைத்திருந்த குறிப்பிற்கு.. பழைய டைரியில் உங்களின் வாசம் (புத்தம் புது எலுமிச்சையின் வாசம் போல்) அப்படியே இன்னமும் மிச்சம் இருக்கிறது அம்மா!

 என்றென்றும் அன்புடன்

ஆதிரைவேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.