Published:Updated:

வேர்கடலையில் வெரைட்டியான ரெசிபி! | My Vikatan

வேர்க்கடலை

வேர்க்கடலை, வால்நட் மற்றும் பாதாம் போன்ற மரக்கொட்டைகளைப் போலவே சுவையிலும் ஊட்டசத்துகளும் நிறைந்த ஒன்று அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்றும் கூறுவர்

வேர்கடலையில் வெரைட்டியான ரெசிபி! | My Vikatan

வேர்க்கடலை, வால்நட் மற்றும் பாதாம் போன்ற மரக்கொட்டைகளைப் போலவே சுவையிலும் ஊட்டசத்துகளும் நிறைந்த ஒன்று அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்றும் கூறுவர்

Published:Updated:
வேர்க்கடலை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வேர்க்கடலையை வறுத்துக் கொண்டே, அந்த கரண்டியை வைத்து சத்தமும் எழுப்பிக் கொண்டே வரும் வண்டி.. வேர்க்கடலை வறுபடும் வாசம்.. நம் நாசிக்குள் சென்று ஏதோ ஒரு புதியதோர் உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். பொரி வேர்க்கடலை சாட் .

ருசியை அடித்து க்கொள்வது வரை வேறு எந்த ஸ்னாக்ஸும் பிறந்ததில்லை! வேர்க்கடலை, வால்நட் மற்றும் பாதாம் போன்ற மரக்கொட்டைகளைப் போலவே சுவையிலும் ஊட்டசத்துகளும் நிறைந்த ஒன்று அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்றும் கூறுவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் வேர்க்கடலையில் மல்லாட்டை என்று சொல்வார்கள்.

(எங்கள் ஊர் பகுதியில் வேர்க்கடலை உற்பத்தி மிக அதிகம்) வேர்க்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாய் முதன் முதலில் எங்கள் ஊரில் இருந்து தான் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது . எங்க ஊர் பக்கம் எந்த சமையல் செய்தாலும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை சேர்த்து தான் செய்வோம். இதோ சில வித்தியாசமான ரெசிபிகள் உங்களுக்காக..

கடலை மிட்டாய்
கடலை மிட்டாய்

வேர்க்கடலை பால்ஸ்

தேவையான பொருட்கள் உலர்ந்த தோல் நீக்கிய வேர்க்கடலை, புழுங்கல் அரிசி, பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு- தலா 200 கிராம் வெல்லம் -முக்கால் கிலோ ஏலக்காய் தூள்- இரண்டு டீஸ்பூன் பல்லு பல்லாககீறிய தேங்காய் (ஒரு மூடி)-ஒரு கப்

செய்முறை

வெறும் வாணலியில் அரிசி பருப்பு வகைகளை சிவக்க வறுத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தில் முக்கால் கப்நீர் விட்டு பாகு காய்ச்சவும். பாகில் வேர்க்கடலை, தேங்காய் ஏலக்காய் தூள் சேர்த்து பாகு உருண்டை பதம் வரும் வரை நன்கு கிளறவும்  அகலமான தட்டில் அரைத்த மாவை கொட்டி, பாகைகொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலந்து குட்டி குட்டி உருண்டைகளாக பிடிக்கவும். சுவையில் அசத்தும் இந்த வேர்க்கடலை பால்ஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேர்க்கடலை போளி

தேவையான பொருட்கள்

பச்சை வேர்க்கடலை- 200 கிராம் உருளைக்கிழங்கு ,கேரட் -தலா 2 பெருங்காயம் -ஒரு சிட்டிகை மல்லித்தழை -சிறிதளவு 

கடுகு -ஒரு டீஸ்பூன் 

மைதா மாவு -இரண்டு ஆழாக்கு மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்

 தனி மிளகாய்த்தூள் ,எலுமிச்சை ஜூஸ் -தலா 2 டீஸ்பூன் 

உப்பு எண்ணெய் -தேவையான அளவு.

செய்முறை

வேர்க்கடலை ,உருளைக்கிழங்கு, கேரட் மூன்றையும் நன்கு குழைய வேக விட்டு மசிக்கவும் .இத்துடன் பெருங்காயம் ,உப்பு ,தனி மிளகாய் தூள் பொடியாக நறுக்கிய மல்லி தழை, எலுமிச்சைஜூஸ் சேர்த்து கடுகையும் தாளித்துக் கொட்டி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் தேவையான உப்பு, சிட்டிகை மஞ்சள் தூள் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு தளர பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள்ளே ஒரு வேர்க்கடலை உருண்டையை வைத்து மூடிவிடவும். பிறகு மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரின் மீது போளியாக தட்டி தவாவில் பொரித்தெடுக்க 'ஹாட் மசாலா வேர்க்கடலை போளி' சுடச் சுட ரெடி.

போளி
போளி

வேர்க்கடலை பிட்லை

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு- 50 கிராம் 

பிஞ்சு கத்திரிக்காய்- 4 

தக்காளி -இரண்டு

 காய்ந்த மிளகாய்- எட்டு 

தனியா -ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன் மிளகு- 10 

வெந்தயம் -கால் டீஸ்பூன்

 கசகசா -ஒரு டீஸ்பூன்

 தேங்காய் துருவல் -இரண்டு டேபிள் ஸ்பூன் 

பச்சை வேர்க்கடலை, புளிக்கரைசல் -தலா மூன்று டேபிள்ஸ்பூன் 

உப்பு ,கடுகு ,பெருங்காயம், எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

வேர்க்கடலை, துவரம் பருப்பை தனித்தனியாக வேக வைக்கவும். எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம் ,கசகசா ஆகியவற்றை வறுக்கவும். வேகவைத்த வேர்க்கடலை+ வறுத்த மசாலாசாமான்+ ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும். இரண்டு டம்ளர் நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேக விடவும். வெந்தபின் புளி கரைசலை விடவும் .பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும் . 5 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும் .பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம் ,கருவேப்பிலை தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை கமகமவென்று ரெடியாகிவிடும்.

வேர்க்கடலை தேன்குழல்

தேவையான பொருட்கள் 

பச்சை வேர்க்கடலை- அரைஆழாக்கு

 பச்சரிசி மாவு- ஒரு ஆழாக்கு கடலை மாவு -இரண்டு டேபிள் ஸ்பூன் 

காய்ந்த மிளகாய்- 3 

பெருங்காயம் சிறிதளவு வெண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

பச்சரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நீரை வடித்து லேசாக காய விட்டு மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வேக விட்டு நன்கு மசித்து கொள்ளவும். காய்ந்த மிளகாய் ,உப்பு பெருங்காயம் மூன்றையும் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசி மாவுடன் மசித்த வேர்க்கடலை ,காய்ந்த மிளகாய் ஜூஸ் ,வெண்ணெய் , கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து மாவை தேன்குழல் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிய வாசமான  வேர்க்கடலை தேன்குழல் ரெடி.

வேர்க்கடலை
வேர்க்கடலை

கத்தரி முருங்கை வேர்க்கடலை கிரேவி..

கத்தரிக்காய் - 1/4 கிலோ முருங்கை- இரண்டு 

பச்சை வேர்க்கடலை -ஒரு கப்

வெங்காயம் , தக்காளி -தலா2  பூண்டு-- 20 பல் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்  -மூன்று டீஸ்பூன்

தாளிக்க குழம்பு வடகம் மற்றும் கருவேப்பிலை.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு வடகம் கருவேப்பிலை தாளித்து, வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கி, நீள நீளமாக நறுக்கிய கத்தரி மற்றும் முருங்கைத் துண்டுகள், வேர்க்கடலை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி தேவையான உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி விடவும் எல்லாம் சேர்ந்து கிரேவியாக வரும்போது இறக்கி பரிமாறவும். தண்ணி சாம்பாருக்கு தொட்டுக்கொள்ள சுவையில் அள்ளும் இந்த க்ரேவி.

தினப்படி வேர்க்கடலையை ஏதாவது ஒரு ரூபத்தில் நம் உணவில் சேர்த்துக்கொள்ள ஆரோக்கியத்திற்கு 100% கியாரண்டி.

 என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால் 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.