Published:Updated:

அட.. தேங்காய் பாலில் இத்தனை ரெசிபிகள் செய்யலாமா? | My Vikatan

Representational Image

தேங்காய் பால் சேர்த்து செய்யக் கூடிய சுலபமான ரெசிபிகள் உங்களுக்காக..

அட.. தேங்காய் பாலில் இத்தனை ரெசிபிகள் செய்யலாமா? | My Vikatan

தேங்காய் பால் சேர்த்து செய்யக் கூடிய சுலபமான ரெசிபிகள் உங்களுக்காக..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கோக்கனட் பன்னீர் ஸ்வீட் பால்ஸ்

தேவையான பொருட்கள்

பால்- ஒரு லிட்டர்

பெரிய மூடி தேங்காய் ஒன்று- துருவியது

பொடித்த சர்க்கரை- கால் கப்

ஃபுட் கலர் (ரோஸ்) (விருப்பம் இருப்பின் ) - ஒரு சிட்டிகை

ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்

வினிகர்- இரண்டு டீஸ்பூன்

சர்க்கரை- அரைக் கப்

ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை

பாலை கொதிக்க விட்டு, வினிகரை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு திரிந்ததும் வடிகட்ட, சுவையான பனீர் கிடைக்கும். பன்னீருடன் பொடித்த சர்க்கரை, புட் கலர், ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

துருவிய தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். சர்க்கரை உருகி இளகி திரும்ப சற்று சேர்ந்தாரற் போல் வரும்போது இறக்கி விட வேண்டும். அதில் ஏலக்காய் தூளைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஆறியவுடன் சிறிதளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து அதனுள் பனீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி உருட்டவும். பிரிட்ஜில் குளிர வைத்து பரிமாற சுவையில் அசத்தும் இந்த கோக்கனட் பனீர்பால்ஸ்.

Representational Image
Representational Image

கோக்கனட் ராகி ஸ்னாக்ஸ்

தேவையான பொருட்கள்

ராகி மாவு - ஒரு கப்

தேங்காய் துருவல்- ஒன்றரை கப்

பச்சை மிளகாய் விழுது- ஒரு டீஸ்பூன்

அரிசி மாவு -ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்

வறுத்த ரவை -ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

தேங்காயை நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய்ப் பாலில் ராகி மாவு, அரிசி மாவு, வறுத்த ரவை, பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கெட்டியாக கலக்கவும் . பிறகு குட்டி குட்டி பகோடாக்களாக காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். செம டேஸ்டியான ஸ்நாக்ஸ் ரெடி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினை அரிசி கீர்

தேவையான பொருட்கள்

தினை அரிசி - கால்கப்

சின்ன மூடி தேங்காய் - துருவியது ஒன்று

வெல்லம் - கால் கப்

பால் - கால்கப்

நெய் - ஒரு டீஸ்பூன்

பொடித்த முந்திரி - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை

துருவிய தேங்காயை நன்கு அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும்.

அடி கனமான வாணலியில் நெய் விட்டு தினை அரிசியை நன்கு வறுத்து, குக்கரில் போட்டு ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து அதில் பால் சேர்க்கவும் . வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி திணை அரிசியில் சேர்த்து கொதிக்க வைக்கவும். எல்லாம் ஒன்றாக கலந்து திக்காக வரும் சமயத்தில் தேங்காய் பாலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும் . முந்திரிப்பருப்பை சேர்த்து சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தோ பரிமாறலாம்.

Representational Image
Representational Image

கரகர தேங்காய்ப் பால்முறுக்கு

தேவையான பொருட்கள்

அரிசி மாவு- ஒரு கப்

தேங்காய்ப் பால்- கால் கப்

கடலை மாவு- முக்கால் கப்

சீரகம்- நான்கு டீஸ்பூன்

வெள்ளை எள் - 2 டீஸ்பூன் வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

அரிசி மாவுடன் கடலை மாவு தேங்காய் பால் உப்பு சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும் இந்த மாவில் சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் அல்லது முள்ளு அச்சில்ல் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிய கரகர மொறு மொறு தேங்காய் பால் முறுக்கு ரெடி.

லேடிஸ் ஃபிங்கர் தேங்காய்ப்பால் க்ரேவி

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் -15

பெரிய வெங்காயம் -ஒன்று

பச்சை மிளகாய்- இரண்டு

பாசிப்பருப்பு - அரை கப்

தேங்காய் பால் - கால் கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க- கடுகு, உளுந்து- தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- இரண்டு

எண்ணெய் சிறிதளவு.

வெண்டைக்காய் 
வெண்டைக்காய் 

செய்முறை

பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைக்கவும். வெண்டைக்காயை கழுவி துடைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, மூன்று நிமிடம் வதக்கி வெண்டைக்காயை சேர்க்கவும். வெண்டைக்காய் சற்று கொழ கொழப்பில்லாமல் நன்கு வதங்கியதும் மலர வேக வைத்த பருப்பு ,தேவையான உப்பு சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும் . இறுதியாக தேங்காய் பால் சேர்த்து இறக்க இறக்கி ஐந்து நிமிடம் கழித்து எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து... சூடான இடியாப்பம் ஆப்பம் போன்றவற்றுடன் பரிமாறலாம். அல்லது சூடான சாதத்தில் பிசைந்து உருளைக் காரக் கறியுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் இந்த லேடிஸ் ஃபிங்கர் தேங்காய் பால் கிரேவி!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.