Published:Updated:

சத்தான சிம்பிளான சாட் ஐட்டம்ஸ்! | My Vikatan

Representational Image

முதன்முதலாக நான் சென்னை வந்த பிறகு, சமோசா தான் செய்ய கற்றுக் கொண்டேன். நான் செய்யும் சுலபமான சமோசா செய்முறை இதோ உங்களுக்காக..

சத்தான சிம்பிளான சாட் ஐட்டம்ஸ்! | My Vikatan

முதன்முதலாக நான் சென்னை வந்த பிறகு, சமோசா தான் செய்ய கற்றுக் கொண்டேன். நான் செய்யும் சுலபமான சமோசா செய்முறை இதோ உங்களுக்காக..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தாளித்த வெங்காயத்தின் பொரித்த வாடை.. முக்கோண வடிவத்தில் கண்ணைப் பறிப்பது.. எல்லா டீக் கடைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு நொறுக்கு தீனி.. வெதுவெதுப்பான சூட்டில் வெங்காய மசாலா வைத்து பரிமாறப்படும் 'சமோசா' நினைத்தாலே நாவில் நீர் ஊறும்.. சென்னை போன்ற பெரு நகரங்களில் மொறு மொறு சுவையுடன் பச்சை சட்னி மற்றும் தக்காளி சாஸூடன் கிடைக்கும். சுடச் சுட பில்டர் காபி ஒரு கையில் ,மறு கையில் சமோசா... உலகம் நம் கையில்! உலகத்தில் எல்லா விஷயங்களும் அழகாக தெரியும் தருணம் அது. சமஸ்கிருதத்தில் 'கட்டாகக்கா'என்று சொல்வர்.

முதன்முதலாக நான் சென்னை வந்த பிறகு, சமோசா தான் செய்ய கற்றுக் கொண்டேன். நான் செய்யும் சுலபமான சமோசா செய்முறை இதோ உங்களுக்காக..

சமோசா
சமோசா

மேல் மாவுக்கு மைதா- ஒரு கப், சீரகம்- கால் டீஸ்பூன் , உப்பு எண்ணெய் தேவையான அளவு.

ஸ்டஃப்பிங்குக்கு

உருளைக்கிழங்கு -கால் கிலோ

பச்சை பட்டாணி -100 கிராம்

பச்சை மிளகாய் -இரண்டு

மிளகாய் தூள் -ஒரு டீஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு -ஒரு டேபிள் ஸ்பூன் ,

மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

எண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் -ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மைதா மாவில் உப்பு எண்ணெய் சீரகம் சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவை விட சற்று கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு மசித்து கொள்ளவும் மசித்து உதிர்த்துக் கொள்ளவும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பச்சை பட்டாணியை வேகவைத்து மசித்து கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வானொலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு ,பச்சை பட்டாணி , மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சை பழச்சாறு உப்பு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் ஒரு வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கி வதக்கி சேர்த்துக் கொள்ளலாம். பிசைந்த மாவை சின்ன சின்ன சப்பாத்திகளாக இட்டு இரண்டாக வெட்டி இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு ஒட்ட வேண்டும் இது கோன் போல இருக்கும் அதன் உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மேல் பக்கத்தை ஒன்றாக சேர்த்து தண்ணீர் தொட்டு ஒட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் (புகை வரக்கூடாது) (தீ மிதமாக எரிய வேண்டியது அவசியம்) சமோசாக்களை பொரித்தெடுக்க வேண்டும்.

ஆலூ சமோசா
ஆலூ சமோசா

சுடச்சுட சாப்பிட சுவையில் அசத்தும் இந்த சமோசா. இது சைவ சமோசா ‌.அசைவ பிரியர்கள் இந்த உருளைக்கிழங்குக்கு பதிலாக கொந்திய ஆட்டுக் கறியை உபயோகப்படுத்தி செய்ய...அது அசைவ சமோசா..பெரும்பாலும் தெருவோர கடையில் சமோசா பொறிக்க எந்த வகை எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அது மட்டுமல்லாமல் ஒரே எண்ணெயில் திரும்பத் திரும்ப பொரிப்பார்கள். அது உடலுக்கு நல்லதல்ல அது ட்ரான்ஸ்ஃபேட்டுக்கு வழிவகுக்கும். உண்மையைச் சொல்லப்போனால் மற்ற மாலை நேர சிற்றுண்டிகளை விடசமோசா கொஞ்சம் ஆபத்தானதுதான். அதீத கொலஸ்ட்ரால்... செரிமான கோளாறுகள்... கெட்ட கொழுப்பு சுகாதாரமற்ற எண்ணெய் இவையெல்லாம் தான் சமோசாவை வேண்டாம் என்று சொல்ல வைக்கிறதுபலரையும். சமோசா சாப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே செய்யலாம். நல்ல எண்ணெயில் ஆரோக்கியமான ஸ்டஃபிங்கோட மைதா மாவுக்கு பதில் கோதுமை மாவு சேர்த்து செய்யலாம்.

இனி கடை சமோசாவிற்கு "பை","பை"சொல்லுங்கள் வீட்டில் செய்யும் சமோசாவை வெல்கம் பண்ணுங்கள்.

அதேபோல் சாட் ஐட்டம்ஸ்....

பிள்ளைகள் மதியம் நாம் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு ஈவினிங் மாலை ஐந்து மணிக்கு வரும்போது அதீத பசியுடன் இருப்பார்கள். அப்பொழுது அரிசி சோற்றைக் கொடுப்பது எனக்கு உடன்பாடில்லை. அந்த நேரத்தில் லைட்டாக ஆனால் அதேசமயம் ஆரோக்கியமான சாட் மற்றும் ஏதாவது ஒரு சூடான பானம் கொடுத்து விட்டு... ஏழு அல்லது ஏழரை மணிக்கு சுட ச்சுட சோறு சமைத்து பரிமாற பிள்ளைகள் அதீத உற்சாகத்துடன் சாப்பிடுவார்கள். (அம்மாவின் பழக்கம் எனக்கும்) நான் வீட்டிலேயே செய்யும் சில வித்தியாசமான சாட் வகைகள் இதோ..

Representational Image
Representational Image

கரகர ஸ்பைசி பிஸ்கட் சாட்

உருளைக்கிழங்கு 2,

மைதா மாவு ஒரு கப் ,

கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்,

ஓமப்பொடி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை

சிறிதளவு ஸ்வீட் சட்னி,

சாட் மசாலா பொடி தலா ஒரு டீஸ்பூன் ,

உப்பு ,எண்ணெய் ஓமம் தேவையான அளவு.

மைதா மாவுடன் ,ஓமம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் அப்படியே வைத்திருந்து சப்பாத்தி போல் திரட்டி டைமண்ட் வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்து எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும் இதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் (குட்டி குட்டி மைதா பிஸ்கட்ஸ் ரெடி) உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துண்டுகளாக்கவும் இதனுடன் பொரித்த அந்த மைதா பிஸ்கட் ஸ்வீட்சட்னி ,சாட் மசாலா பொடி கலந்து மேலே கேரட் துருவல் ஓமப்பொடி மல்லித்தழை தூவி பரிமாற கரகர ஸ்பைசி பிஸ்கட் சாட் ரெடி.

நட்ஸ் சாட் ..

வறுத்த வேர்க்கடலை ,வறுத்த பொட்டுக்கடலை ,அவல் தலா- கால் கப் ,

பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு ,பிஸ்தா பருப்பு தலா- 10 ,

சாட் மசாலா பொடி -ஒரு டீஸ்பூன்

கொட்டை நீக்கிய பேரிச்சை, உலர் திராட்சை -தலா 10

உப்பு ஒரு சிட்டிகை

அவலை நன்கு பொறித்துக் கொள்ளவும்.

பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு பிஸ்தாவை நன்கு துருவிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொரித்த அவல் வறுத்த பொட்டுக்கடலை ,வறுத்த வேர்க்கடலை ,துருவிய பாதாம் ,முந்திரி ,பிஸ்தா ,சாட் மசாலா பொடி துண்டுகளாக நறுக்கிய பேரிச்சை, உலர் திராட்சை, சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும் இது பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

முளைகட்டிய பயறு!
முளைகட்டிய பயறு!

ஒரு கப் முளைகட்டிய பச்சை பயிறை நன்கு வேகவிடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு, சாட் மசாலா பொடி உப்பு கலந்து வைக்கவும் இதனுடன் முளைகட்டிய பச்சைபயிறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறும் சமயம் மல்லித்தழைத் தூவி பரிமாற சுவையான முளைக்கட்டிய பச்சைப் பயிறு சாட் ரெடி.

பானி பூரி ,பேல் பூரி சமோசா, கட்லெட், போன்ற சாட் ஐட்டம்ஸ் எதுவாக இருந்தாலும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது தான் உடலுக்கும் நல்லது (நம் பர்ஸூக்கும் நல்லது..) இப்படி வித விதமாய் வித்தியாசமாய் .. சாட் ஐட்டங்களை பிள்ளைகளுக்கு கொடுக்க தினமும் உங்கள் வீட்டில் சந்தோஷ ரோஜா பூக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை! என்னப்பா?? எங்க போறீங்க?? சமையல் அறைக்கா? ஓகே ஒ.கே ஆல் த பெஸ்ட்!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.