Published:Updated:

மயிலாப்பூரில் கடவுளின் விஜயம்!| சிறுகதை | My Vikatan

Mylapore

பூமியில் தன் அறிவார்ந்த படைப்பான மானுட உயிரினம், எப்படி தன் அறி(ற)வியலை வளர்த்து கொண்டு உள்ளது என கண்டறியும் ஆர்வ மிகுதியாலும், மெல்ல, பூமியை நோக்கி பயணிக்கிறார்!

மயிலாப்பூரில் கடவுளின் விஜயம்!| சிறுகதை | My Vikatan

பூமியில் தன் அறிவார்ந்த படைப்பான மானுட உயிரினம், எப்படி தன் அறி(ற)வியலை வளர்த்து கொண்டு உள்ளது என கண்டறியும் ஆர்வ மிகுதியாலும், மெல்ல, பூமியை நோக்கி பயணிக்கிறார்!

Published:Updated:
Mylapore

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கடவுளுக்கு ஏனோ திடீரென,

பூமிக்கு விஜயம் செய்யும் பேராவல் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணங்கள், சில பல உண்டு.

அஃது யாதெனில், ..

முதலாவது, தனது வழக்கமான அண்டசராச்சர பால்வழிகள் "ரவுண்ட்ஸ்"சில், பூவுலகை" விஜயம் செய்து, நூறு (பூமி)ஆண்டுகள் ஆகிவிட்ட படியாலும்,..

பூமிக்கு மிக அருகில் (4.3 ஒளியாண்டு தூரத்தில்)உள்ள "ஆல்ஃபா செண்டுறி" நட்சத்திர குடும்பத்தில் உள்ள உயிரினம் வாழும் "கோளில்", தற்போது விஜயம் செய்து கொண்டு இருப்பதால், "இவ்ளோ தூரம் வந்துட்டோமே, அப்படியே ஒரு எட்டு, பூமிக்கும் விஜயம் செய்துட்டு போய்டுவோம்" என்ற எண்ணம் ஏற்பட்டதாலும்,..

பூமியில் தன் அறிவார்ந்த படைப்பான மானுட உயிரினம், எப்படி தன் அறி(ற)வியலை வளர்த்து கொண்டு உள்ளது என கண்டறியும் ஆர்வ மிகுதியாலும், (குறிப்பாக பெண்மானுட உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிந்திட).. மெல்ல, பூமியை நோக்கி பயணிக்கிறார்!

அவ்வாறு "டிராவல்"செய்யும் போது, நூறாண்டுகளுக்கு முன்னர் பூமியின் உயிரினங்கள், குறிப்பாக மானுட "ஆண்பெண் உயிரின உறவுகள்" எப்படி இருந்தது, என்பதை மெல்ல "டீகோட்" செய்து, டவுன் லோட் செய்து, நினைவலையில், அசை போட ஆரம்பிக்கிறார்...

மயிலாப்பூர்
மயிலாப்பூர்

1922...( பூமி ஆண்டு)

இதே நாள்...

கடவுள் "அருவமாகி" ..

பூமியில் அவருக்கு மிகவும் பிரியமான, சென்னை,மயிலாப்பூர் கிராமத்தில் (இப்போதைய லஸ் கார்னர் பகுதியில்) "லாண்டிங்" ஆகி....

"எந்த வீட்டில் நுழையலாம்?" என யோசித்த போது ,ஒரு ஒதுக்குப்புறமான ஓட்டு வீட்டில், குடும்ப சண்டையின் சத்தம் உச்சஸ்தாயியில் கேட்பது காதில் விழ...

"டக்" என அந்த வீட்டுக்குள் நுழைந்து "திக் விஜயம்" செய்கிறார்!

அது ஒரு கூட்டு குடும்பம், தலைவன் பெயர் "துரைசாமி" ,தலைவி பெயர் "அன்னம்மா".

அவன் தன் , தாய் தந்தை, பாட்டி (அப்பா வழி), வாழாமல் இருக்கும் அக்கா, நண்டும் சிண்டுமாக மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், என அனைத்து உறவுகளையும், தனி ஒருவனாய் குடும்ப பாரம் சுமக்கிறான்.

மாமியார், மருமகள் அன்னம்மாவை கண்ட கண்ட வார்த்தைகளில் தாறுமாறாக "வைது" சண்டை போட்டு கொண்டிருக்க,

மருமகளோ அடுப்படியில் தஞ்சமடைந்து தேம்பி தேம்பி அழுதபடியே, சமையல் செய்து கொண்டு இருக்கிறாள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஷயம் வேறொன்றுமில்லை.. காலையில் அவளுக்கு கொடுத்த பழங்கஞ்சியில், மருமகள் உப்பு போட மறந்து விட்டாளாம்.. இதுதான் மேட்டர். அதை தாங்கி கொள்ள முடியாமல்,

"எவ்வளவு கொழுப்புடி உனக்கு, உப்பு போடாத கஞ்சிய எனக்கு தருவ, ஆனா அந்த கெழவனுக்கு(மாமனார்) மட்டும் உப்பு போட்டு குடுக்கற, நான் என்ன, இந்த வீட்ல அவ்ளோ கேவலப்பட்டு பூட்டனா..? எம் மாமியார்காரிக்கு... அந்த காலத்துல, பயந்து பயந்து எவ்ளோ வக்கணையா ஆக்கி போட்டா கூட,"இது குத்தம் அது குத்தம்" நுட்டு, நூத்து நூத்து பார்த்து, ஒலக்கையாலயே அடிப்பா!, நான் அப்படியாடி உன்ன கொடும படுத்தறேன்... உன்ன சொல்லி குத்தமில்லடி! எல்லாம் என் புள்ள கொடுக்கற தைரியம்தான்! அவன் வரட்டும் இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு கேட்டுப்புடறேன்..! போதா குறைக்கு எனக்குண்ணு ஒண்ணு வாச்சது பார். எதுவுமே நடக்காதது மாதிரி புளிமூட்ட கணக்கா, ஈச்சேர்ல உக்காஞ்சிக்கிணு,விட்டத்தையே அண்ணாந்து பார்த்துகிட்டு கீது பார்!

இதெல்லாம் போதாதுண்ணு இலவச இணைப்பா "போன மச்சான் திரும்பி வந்தான்னு", ஆம்படையான கைக்குள்ள போட்டுக்க தெரியாம , இந்தம்மா வேற (நாத்தி) வந்து குந்திக்கினாங்க",என அனைத்து மூத்த உறுப்பினர்களையும் ஒரு வாங்கு வாங்கி.. மூச்சிரைக்க பேசி முடிக்கிறாள்.

மாமியாரின் மாமியார் பாட்டியோ, "இவ அழகு எனக்கு தெரியாதாக்கும்...! ஒண்ணும் இல்லாதவள வீட்டுக்கு கொண்டாந்து, எல்லா வசதியும் செஞ்சி குடுத்தா,

"மருந்து வச்சி" புருஷன மயக்கி ,இன்னிக்கி உச்சாணி கொம்புல உக்காந்துகிட்டு என்னமா எல்லாரையும் சுழற்றா பாரு.!"

என தனக்குள்ளேயே புலம்பினாலும்.. மூப்பின் காரணமாக சர்வ ஆணவமும் அடங்கிய வண்ணம், மூலைல உக்காந்து, மனசுக்குள்ள மருமகளை சபித்து கொண்டிருந்தாள்.

நல்லவேளை, மகன் துரை வீட்டில் இல்லாததால், இந்த சண்டையில் மாட்டி கொள்ளாமல், தப்பி விட்டான்.

Representational Image
Representational Image

சண்டை ஓய்ந்த சிறிது நேரத்திலேயே..., அடுப்படிக்கு சென்ற மாமியார், "சரி சரி! நீ போய் சாப்புட்ற வேலைய பாரு , வடுமாங்கா தொக்கு உனக்காக நேத்து பண்ணி வெச்சிர்க்கேன்! வாய்க்கு வாட்டமா இருக்கும்...

ஆ! அந்த கன்னி கோழி முட்டைகளை உரியில, தவிடு போட்ட பானைல வெச்சிருக்கேன், உடச்சி செக்கு நல்லெண்ணயோடு கலந்து குடி! இடுப்புக்கு நல்லது!" என கரிசனத்துடன் "வாயும் வயிறுமா" இருந்த அவளிடம் கூற, அவளும் அழுகை மறந்து "அத்தே, பால் சட்டி சூடா இருக்கு, கய்ய கிய்ய வச்சிட போறீங்க!" என பாசத்துடன் எச்சரிக்கை செய்ய "எனுக்கு எல்லாம் தெரியும் போடி! நான் பாத்துக்கிறேன்!..அப்படியே, பாட்டிக்கும், அத்தைக்கும் நீராகாரத்தில, புளிச்ச மோர் கலந்து, ரெண்டு உரிச்ச வெங்காயமும் சேத்து குடுத்துடுமா! பாவம் அதுக பசி தாங்காதுக! உப்பு போட மறுந்துடாத!"

என ஆணைகள் பிறப்பித்த போது, நாத்தியின் முகம் மலர்ந்தது.

சண்டை நடந்த சுவடே தெரியாமல், மீண்டும் கலகலப்பாக மாறியது அந்த குடும்பம்! ஆனால் பாட்டிக்கு மட்டும், சண்டை நிறுத்தம் இவ்வளவு விரைவில் அமல் படுத்தப்பட்டது குறித்து ,பெரிய மன வருத்தம்தான்! அது அவள் முகத்தில் தெளிவாக பிரதிபலித்தது.

ஆண்டவன்! இவை அனைத்தையும் ரசித்து பார்த்து தனது விசேஷ படைப்பான "பெண்டிர்"பற்றி பெருமிதம் கொண்டு வெளியேறியது...., அவர் நினைவில் இப்போதும் , இன்று நடந்தது போல் நினைவுக்கு வந்து மகிழ்வு தந்தது!

மீண்டும் அதே மைலாப்பூர் சென்று இன்றைய, அதாவது 2022ஆம் ஆண்டு நிலைமையை ஆய்வு செய்ய பேரார்வம் கொண்டு, வேகமாக விரைகிறார்!

ஆம் இதோ வந்துவிட்டது மயிலாப்பூர்..!

கிராமமாக அன்று இருந்த ஊர் இன்று இத்தனை ஜன நெருக்கடியுடன், உயர்ந்த கட்டடங்களுடன் , பளிச்சென்று மின்னும் வண்ண விளக்குகளுடன் ஜகஜோதியாய் ஜொலிப்பது கண்டு, தான் அருளிய அறிவாற்றலை , மானுடம் சிறப்பாக பயன் படுத்தியமைக்கு, மனதளவில் குதூகலம் கொள்கிறார்!.

அன்று கண்ட அந்த ஓட்டு வீட்டை மீண்டும் கண்டு பிடிக்க சிரமப்பட்டு, தன் ஞான திருஷ்ட்டியால் "காலப்பயணம்" செய்து, கண்டு பிடித்து ஒருவழியாக அந்த வீட்டை அடைகிறார்!.

இன்று அந்த வீடு மிகப்பெரிய சொகுசு பங்களாவாக மாறி இருந்தது! உள்ளே நுழைந்து பார்க்கிறார், அவ்வளவு பெரிய வீட்டில் ஆட்கள் நடமாட்டமே இன்றி வெறிச்சோடி கிடக்க, இது அதே வீடு தானா? என அவருக்கே சந்தேகம் வருகிறது.. அந்த அளவுக்கு நவீன மாற்றங்களை கண்டு வியக்கிறார்!

அந்த வீடு வேறு ஒரு பணக்காரனுக்கு கை மாறி இருப்பதை மெல்ல கடவுள் உணர்கிறார்! அந்த ஹாலின் சுவற்றில் ஒரு வயதான பெண்மணியின் போட்டோ மாட்டப்பட்டிருந்தது!

சற்று நேரத்தில்..

அருகில் இருந்த ஒரு பெரிய படுக்கையறையில் இருந்து, ஆங்கிலத்தில் கண்டமேனிக்கு கெட்ட வார்த்தையில் சண்டை போட்டு கொள்ளும் தம்பதியரின் கூச்சல் கேட்டு உள் நுழைந்து, கவனிக்கிறார்.

தேவதை போல் மிக அழகான பெண் ஒருத்தி , தன் கணவனுடன் மல்லு கட்டுவது புரிந்தது!

கணவன் "இளம் வயதிலேயே விதவையாகி, எங்கள உயிருக்கு உயிராய் பாசத்த கொட்டி வளர்த்த, வயது முதிர்ந்த என் அன்பு அம்மாவை! வீட்டை விட்டு துரத்தி, முதியோர் இல்லத்தில் சேர்த்து, என்னையும் அவளை பார்க்க விடாமல் அழிச்சாட்டியம் செய்தாய். அவ செத்த பிறகும் மனமிரங்காம, தலை மகனான என்னை கொள்ளி போடவும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி, அவளுக்கு என்னென்ன துரோகம் இழைத்தாய்..! இதை எல்லாமும் பொறுத்துக்கொண்டேன்! ஆனால் இன்று அவள் படத்தைக்கூட கழட்டி குப்பை தொட்டியில் வீசச்சொல்லி அடம் பிடிக்கிறாயே, இது நியாயமா? அவள் உயிரோடு இருக்கும்போதுதான் "இதை சொன்னாள்; அதை சொன்னாள்" என்று சண்டைபிடித்து, அவளது சொந்த வீட்டில் இருந்து கொண்டே, அவளை துரத்தி அடித்தாய்! இன்று என்னடான்னா.. நான், என் மன சாந்திக்காக, தினமும் காலையில் வணங்கும் என் தாயின் படத்தையும், கழற்றி குப்பை தொட்டியில் வீசி எறியும்படி அடம்பிடிப்பது, அந்த கடவுளுக்கு கூட அடுக்காது", என என்னை துணைக்கு அழைப்பது கண்டு சற்றே அரண்டு போனேன்!

Representational Image
Representational Image

அவ்ளோதான்!

அவன் மனைவி, பொங்கி எழுந்து,

"வாயை மூடுடா! உன் அம்மாவ பத்தி பேச எந்த அருகதையும் உனக்கு கிடையாது ! நான் உன்னை காதலிச்ச ஒரே பாவத்துக்காக என்னிய, என்னன்ன கேள்வி கேட்டாங்க?!

என் உயிருக்கு உயிரான அப்பாகிட்ட (இப்போ வீட்டோடு மாமனாராக, ஜம்மென்று மகளுடன் செட்டில் ஆகி விட்டவர்) "பொண்ணுக்கு கல்யாணம் பண்ண வக்கில்லாத , பரதேசி நீ ! பணக்கார மாப்பளய காதலிக்க சொல்லி குடுத்து, திருட்டு தாலி கட்டி ,கல்யாணம் பண்ணியே, அது எவ்ளவு கேவலம் தெரியுமா?", அப்டின்னு அவரை நிக்க வச்சி கேள்வி கேட்டாங்களே! அத ஏழு ஜென்மத்துக்கும் என்னால மறக்கவே முடியாது!

பாவம் ஏழைங்கிற ஒரே காரணத்திற்காக எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு, தல குனிஞ்சி "பட்ட மரம்" மாரி அவமானப்பட்டு நின்னார் எங்க அப்பா!

நாம கோயில்ல திருட்டு தாலி கட்டிகிட்டு வந்து நின்னப்ப, வீதியில நிக்க வச்சி என்னென்ன ஆர்ப்பாட்டம் பண்ணாங்க! எல்லாத்தையும் நான் பொறுத்துகிட்டேன்..

ஆனா, நாம ரெண்டு பேரும் மேஜர் என்பதால, என்கிட்ட அவங்க பாச்சா ஒண்ணுமே பலிக்கல..!.

வீட்ட விட்டே நம்பள தொரத்தி அடிச்சப்ப,

நான்தானே சம்பாதிச்சு போட்டு உன்னையும், நீ பெத்த பிள்ளைகளையும் காப்பாத்தினேன்! மூத்த பையனான உனக்கு உங்கப்பாவின் , "உயில்படி" இந்த வீடு ஆட்டமெட்டிக்கா வந்து சேர்ந்தது,!

மத்த எல்லா புள்ளைங்களையும், பொண்ணுங்களையும் பெரிய பெரிய படிப்பு படிக்க வச்சா உன் அம்மா! ஆனா, என்ன ஆச்சி.?

எல்லாரும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு,தம் பங்கு சொத்த எல்லாம் வித்து எடுத்துண்டு, வெளி நாட்டில, செட்டில் ஆகிட்டாங்க!

எவ்ளோ திமிரா கெத்தா வாழ்ந்த கெழவி, சர்வ நாடியும் அடங்கி ஒடுங்கி, சென்னையில இருந்த உன்கிட்ட அடைக்கலமா வந்தப்ப...!

நான் வீட்ல சேப்பனா?

எனுக்கு அவங்க குடுத்த கஷ்டத்த எல்லாம் மறந்து மன்னிக்க ,

நான் ஏசுவும் இல்ல ! புத்தனும் இல்ல! (இதை கேட்டதும் கடவுளுக்கு என்னமோ போல் ஆகி விட்டது)... பழிக்கு பழி வாங்கி நடுத்தெருவுக்கு துரத்தி அடிச்சேன்!

அவங்க படத்த நீ வைச்சபோது, நான்

போனா போறதுன்னுதான்

விட்டேன்.. !

ஆனா இப்பப்ப,...

அவங்க படத்த பார்த்தா,

அபசகுணமா தோன்றது,

வயத்தெரிச்சலால் மார்வலி வந்து உடம்பு கெட்டுடுது!

அந்த மொகரக்கட்டைய பாத்துட்டு போனா, போற காரியம் விளங்காம குட்டிச்சுவரா போறது!

அந்த படத்த பாக்கவே கூடாதுன்னுதான் நானும் எவ்ளோ "பிரம்ம பிரயத்தனம்" பண்றேன்.. ஆனா இந்த கண்ணு ஏனோ? அங்கேயே போய் நிலை குத்தி நிக்குது!

மரியாதையா, அத உடனே தூக்கி எறிங்க! இல்லேன்னா நடக்கர்தே வேற !"என தன் கண்களை உருட்டி பயமுறுத்த, அதன் வெப்பம் தாங்காமல்,மெல்ல அவன்,

தன் தாயின் போட்டோவை, கண்ணில் நீர் வழிந்தபடி , அகற்றும் பணியில் ஈடுபடுகிறான்!

இந்த நூறு வருடத்தில்,

உலகத்து மானுடம் அடைந்த பரிணாம வளர்ச்சியை கண்டு;

பிரம்மித்து நிற்கிறார் கடவுள்..!

ஒரு ஈடு இணையற்ற அதீத புகழ் பெற்ற இயக்குநர், தான் இயக்கிய படத்தை தானே ரசித்து பார்த்து சுய விமர்சனம் செய்து கொள்வது போல அவருள் ஒரு நெகிழ்ச்சி உண்டாகிறது!

பிரபஞ்சத்தின் படைப்பாளியாம் பகவான்! அனைத்தையும் ருசித்து பார்த்து, மானுட வக்கிரங்களை நினைத்துப்பார்த்து,"மர்ம புன்னகை" ஒன்றை சிந்திய வண்ணம்... உயிரினங்கள் உய்யும் அடுத்த சூரிய குடும்பத்தின் கோளுக்கு சென்று, ஆய்வு செய்ய விரைந்து பயணிக்கிறார்!!

அந்த "மர்ம புன்னகையின்" ரகசியம், புரிதலுக்கு அப்பாற்பட்டது அன்றோ??

( முற்றும்)

-மரு உடலியங்கியல் பாலா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.