Published:Updated:

ஏறக்குறைய சொர்க்கம்!

Representational Image ( Photo by Maksudur Rahman )

நம் சினிமாக்களும் கதைகளும் சேர்ந்து 'ஐ லவ் யூ' என்பதை ஒரு மோசமான கெட்ட வார்த்தை போல் மாற்றி விட்டன. உண்மையில் நம்முடைய நேசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான விஷயமது.

ஏறக்குறைய சொர்க்கம்!

நம் சினிமாக்களும் கதைகளும் சேர்ந்து 'ஐ லவ் யூ' என்பதை ஒரு மோசமான கெட்ட வார்த்தை போல் மாற்றி விட்டன. உண்மையில் நம்முடைய நேசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான விஷயமது.

Published:Updated:
Representational Image ( Photo by Maksudur Rahman )

அறிவியலை ஊடகம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்! எழுத்து உலக ஜாம்பவான்! துப்பறியும் நாவல் துறையில் புதிய உத்தியை கையாண்டவர்! நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ஈடுபாடு கொண்டு எளிய முறையில் புதிய நடையில் மறுஉருவாக்கம் செய்தவர். அறிவியல் நாவலின் முதன்மை முன்னோடி. ஹைக்கூ கவிதைகளை எளிதாக விளங்குபவர்..

இப்படி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். பள்ளிப்பருவத்தில் அவரின்' என் இனிய இயந்திரா' (சரித்திரம் படைத்த) அறிவியல் புதினத்தை ஆனந்தவிகடனில் தொடராக வந்ததை படித்தபோது அவரின் எழுத்தின் மீது காதல் வந்தது. அதிலும் குறிப்பாக 'ஜீனோவை' யாராலும் மறக்க முடியாது. இந்த நாவலின் தொடர்ச்சியாக, 'மீண்டும் ஜீனோ' வந்தபோது கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்தேன்.

ஆனந்தவிகடன் எப்போது வரும் என காத்திருந்து படித்து விமர்சித்த காலம் அது. (அது ஒரு அழகிய கனாக்காலம்) அவர் எழுதிய நாவல்களின் தலைப்பு ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு தோதாக பதிவு போடலாம் என நினைத்தேன். (மிகவும் கடினமான ஒரு விஷயம்தான் ) ஆனால் ஏதோ என்னால் முடிந்ததை எழுதலாமே என்று யோசித்ததன் விளைவு(வே) இந்த பதிவு.

சுஜாதா
சுஜாதா

'ஏறக்குறைய சொர்க்கம்'

(பிரபலமான அவரது நாவல்களில் ஒன்று) சொர்க்கத்தைப் பற்றி பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லை.

வாழும்போதே சொர்க்கத்தை அனுபவித்தால் ... பார்க்க நேர்ந்தால்... அதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். இப்படி யோசித்ததன் விளைவே இந்த பதிவு. காதலிக்கும்/ காதலித்து திருமணம் செய்ய/ (செய்திருக்கும்) திருமண வெள்ளிவிழா/ பொன்விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகள் இப்படி அனைவருக்குமான சொர்க்கம் அவர்கள் கையிலே தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் சினிமாக்களும் கதைகளும் சேர்ந்து 'ஐ லவ் யூ' என்பதை ஒரு மோசமான கெட்ட வார்த்தை போல் மாற்றி விட்டன. உண்மையில் நம்முடைய நேசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான விஷயமது. அதை முடிந்த போதெல்லாம் சொல்ல வேண்டும். ' ஐ லவ் யூ 'சொல்ல கூச்சமா?! நோ ப்ராப்ளம் உங்களுடைய துணையை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை வேறு விதங்களில் சொல்லலாம் . 'இந்த ட்ரஸ் உனக்கு அழகாக இருக்கு', 'இன்னைக்கு சமையல் பிரமாதம்', அந்த வேலைய கரெக்டா ஞாபகம் வைத்திருந்து செஞ்சு முடிச்சிட்டீங்களே!" சமத்து!! இப்படியெல்லாம் சொல்லலாம்.

Representational Image
Representational Image
Photo by Ketut Subiyanto

இதையெல்லாம் சொல்ல கூச்சமா எழுதுங்கள் ஒரு கடிதத்தை..( கடிதம் எழுதுவது போல் ஒரு பரவசம் உண்டா) அது டீன் ஏஜ் பிள்ளைகள் தான் எழுதவேண்டும் என்று யார் சொன்னது?இப்பொழுது டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு கடிதம் என்றால் என்னவென்றே தெரியாது... அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எமோஜி/ மெசேஜஸ் மட்டுமே..

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் முன்னே உங்கள் கணவன் அல்லது மனைவியை குறிப்பிட்டு பாராட்டுங்கள்.

'அம்மா போல ஒரு விஷயத்தை சிறப்பாக செய்ய கற்றுக் கொள்',' அப்பா மாதிரி ஸ்மார்ட்டா இருக்கப் பழகிக்கொள்' என்றெல்லாம். தினமும் நீங்கள் இருவரும் பேசுவதற்காக என்று சில மணி நேரங்களை ஒதுக்குங்கள்.. அந்த நேரம் நீங்கள் இருவரும் பேசுவதற்காக மட்டுமே! அப்பொழுது டிவி ஓட விடாதீங்க.. புத்தகத்தை படிக்காதீங்க ... செல்போனை நோண்டாதீங்க.. காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு சினிமா பாட்டுகேட்காதீங்க.. சமயலறையில் வேலை இருக்கிறது என ஓடாதீங்க... ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் தானே உங்களுடைய நேரத்தை கவனத்தை முழுமையாக பேச்சில் செலுத்துங்கள்

இப்படி தனிமையில் பேசும் பொழுது வார்த்தைகளை விட உணர்வுகள் தான் முக்கியம். உங்கள் கணவர் அல்லது மனைவி வாயை திறந்து சொல்லாத விஷயங்களை கூட கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் ஏதாவது பரிசளியுங்கள். காதல் என்பது வெறும் பேச்சுப், பரிசுகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை . கணவனும் மனைவியும் வழக்கமாக ஒருவர் செய்யும் வேலையை மற்றவர் ஏற்றுக்கொண்டு அதன் மூலம் அவருக்கு நேரத்தை மிச்சப்படுத்தி தரலாம். (அது மிகப்பெரிய பரிசு ) அடுத்தது மிக முக்கியமானது உணர்வுகளை எல்லாம் விட தொடுதல் ஏற்படுத்தும் நெருக்கம் மிகவும் தீவிரமானது.

சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும்போது கைகளைக் கோர்த்துக் கொள்ளுதல், அவ்வப்போது சின்னச் சின்ன செல்ல அணைப்புகள், எதிர்பார்க்காத தருணத்தில் முத்தமிடுதல் இதெல்லாம் சின்னப் பிள்ளைகளின் விளையாட்டு என்று நினைத்தால் நீங்கள் சொர்க்கத்தை அடைவது மிகவும் கடினம் பாஸ்..

Representational Image
Representational Image
Photo by August de Richelieu

இப்படி சில அழகான விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்ற கண்டிப்பாக வாழும்போதே சொர்க்கத்தை பார்த்துவிடுவீர்கள் . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏறக்குறைய சொர்க்கத்தை பார்க்க சின்னச்சின்ன விஷயங்களைத் தான் பட்டியலிட்டுள்ளேன் . இப்படித்தான் பேச வேண்டும்/ நடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவரவர் பாணியில் சந்தோஷத்தை தொடருங்கள். மொத்தத்தில் சொர்க்கத்தை வாழும்போதே பார்த்துவிடுங்கள். அழகான வானவில் வாழ்த்துகள். (இது தம்பதிகளுக்கு மட்டும் இல்லை வீட்டில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொருந்தக்கூடியது)

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism