Published:Updated:

ரிவர்ஸ் கியர்! - குறுங்கதை

" நீங்க சந்தேகப்படற மாதிரி கூட இருக்கலாம்.. யாரும்,தங்களுக்குக் காது கேட்கலைன்னு அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டாங்க. நான் சொல்றபடி செஞ்சு பாருங்க.. உண்மையைக் கண்டு பிடிச்சுடலாம்.. "

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சுப்புவுக்குத் தன் மனைவியின் கேட்குந் திறன் குறைந்து விட்டதோவென்றசந்தேகம் வந்து விட்டது!பல முறை கேட்டால்தான் எதற்கும் பதில் சொல்கிறாளென்று எண்ணியபடியே, அந்த இஎன்டி ஸ்பெஷலிஸ்டை நாடினான். அவர் சொன்னார்!

" நீங்க சந்தேகப்படற மாதிரி கூட இருக்கலாம்!யாரும்,தங்களுக்குக் காது கேட்கலைன்னு அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டாங்க. நான் சொல்றபடி செஞ்சு பாருங்க!உண்மையைக் கண்டு பிடிச்சுடலாம்!"

" அப்படியா டாக்டர்!என்ன செய்யனுமுன்னு சொல்லுங்க?"

" பெரிசா ஒண்ணுமில்ல!ஒரு 50 அடி தூரத்ல இருந்து கூப்பிட்டுப் பாருங்க!அப்புறம் தூரத்தை

25,15,5 ன்னு கொறைச்சிக்குங்க! நீங்களே உண்மையை உணர்வீங்க!”

"ரொம்ப நன்றி டாக்டர்!"

Representational Image
Representational Image

வீட்டுக்குள் வரும் போதே டாக்டர் சொன்னதை நடைமுறைப் படுத்தினான். கேட்டைத் திறந்ததுமே (50 அடி),"வள்ளி! இன்னிக்கி என்ன குழம்பு வெச்சிருக்கே?"பதிலில்லை!

வாசலில்,ஹாலில் நின்று அதையே கேட்டான்!ஊஹூம்!இறுதியாக,கிச்சனுக்கு வந்து,

அதையே கேட்டான்!

"ஏங்க!எத்தனை தடவை சொல்றது!வத்தக் குழம்பு வெச்சிருக்கேன்னு! நாலு தடவை

நாயாக் கத்திட்டேன்!உங்களுக்குக் காது இப்பல்லாம் சரியாக் கேட்கலைன்னு நெனக்

கிறேன்!நாளைக்கி டாக்டர்கிட்டப் போலாமுங்க!"

சுப்பு சரிந்தான்!...சோபாவில்!

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு