Published:Updated:

தபால் பெட்டி | குட்டி ஸ்டோரி| My Vikatan

Representational Image

கிராமங்களில் இது போன்ற விளிப்புகள் சர்வ சாதாரணம். ஆனால் கிழிந்த உள்ளாடையை அணிந்து வரும் மாணவர்களின் வருத்தம் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் இவ்வாறு விளையாடும் சிறுவர்கள் அதிகம்.

தபால் பெட்டி | குட்டி ஸ்டோரி| My Vikatan

கிராமங்களில் இது போன்ற விளிப்புகள் சர்வ சாதாரணம். ஆனால் கிழிந்த உள்ளாடையை அணிந்து வரும் மாணவர்களின் வருத்தம் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் இவ்வாறு விளையாடும் சிறுவர்கள் அதிகம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மோகனன் பிறந்தது திருச்சி அருகிலுள்ள ஒரு கிராமம். எட்டாம் வகுப்பு வரை உள்ளுரிலுள்ள அரசு இடைநிலை பள்ளியில் தான் படித்தான். இவனுடையது சற்று வசதியான குடும்பம். வசதியான குடும்பம் என்றால் கிழிந்த ஆடைகளை தைத்து உடுத்த வேண்டிய தேவை இல்லாத வசதியும் பள்ளியில் வழங்கும் அரசாங்க மதிய உணவை சாப்பிட வேண்டிய அவசியமின்றி வீட்டிற்கு சென்று சாப்பிடும் அளவுக்கு வசதியான குடும்பம்.

ஒரு நாள் வழக்கம் போல மதியம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு திரும்பியவன் பள்ளி மைதானத்தில் மற்ற சக நண்பர்களுடன் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போதுதான் சற்று தூரத்தில் அந்த சிறுவனை பார்த்தான். அவன் ஒரு சாப்பாட்டு தட்டை பின்புறமாக வைத்து மறைத்தவாறு வேகமாக வகுப்பறை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

"டேய் தபால் பெட்டி ...." என்று கூவியபடியே முன்னே சென்ற சிறுவனின் உணவுத்தட்டை பிடித்து கீழே இழுத்து விட்டு ஒரு பழைய காகித துண்டை அந்த சிறுவனின் நிக்கரின் பின்புறம் கிழிந்திருந்த ஓட்டை வழியே போட்டுவிட்டு அவனை பரிகாசம் செய்த படியே ஓடிவிட்டான். கிராமங்களில் இது போன்ற விளிப்புகள் சர்வ சாதாரணம். ஆனால் கிழிந்த நிக்கரை அணிந்து வரும் மாணவர்களின் வருத்தம் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் இவ்வாறு விளையாடும் சிறுவர்கள் அதிகம். அவ்வாறு கிழிந்த நிக்கரை டைலரிடம் கொடுத்து அப்போதைக்கு ஏதேனும் துண்டுத்துணி எதாவது ஒருகாலரில் வைத்து ஒட்டு போட்டு தைத்து அணிந்து கொள்வார்கள்.

Representational Image
Representational Image

இருபது வருடங்கள் உருண்டோட,

அந்த பெரிய அலுவலகத்தின் விஸ்தீரணத்தை பார்த்து வாயை பிளந்து கொண்டே உள்ளே வந்த அந்த போஸ்ட்மேன் அந்த உயரதிகாரியின் உதவியாளனை பார்த்து சார் MD க்கு பதிவு தபால் கொண்டு வந்திருக்கேன். அவர்கிட்ட நேர்லதான் கொடுக்கணும்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா MD வருவாரு.... "

சற்று நேரம் பொறுத்து

"சார் உங்களை கூப்பிடறாரு...." என்று உதவியாளன் சொல்ல

கண்ணாடி கதவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்து அங்கு அமர்ந்திருந்தவரை பார்த்து சார் ரெஜிஸ்டர் தபால் வந்துருக்கு என்று கூறியபடியே தபாலை எடுத்து கொண்டு நிமிர்ந்தபோது அங்கே MD யாக அமர்ந்திருந்தவரை பார்த்த போஸ்ட்மேனுக்கு அதிர்ச்சி.

அது நாகராஜன் (தபால் பெட்டி).

அந்த போஸ்ட்மேன் .... நீங்கள் இந்நேரம் கண்டு பிடித்திருப்பீர்களே.

- ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.