Published:Updated:

கூட வந்துட்டா என்னவாம்? | குறுங்கதை | My Vikatan

Representational Image

பர்சிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் தடவித் தடவித் தேடி ஒன்றே ஒன்றை கவனமாய் எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு, மீண்டும் விரலால் விப்பூதி தொட்டு சடங்கான யாழினி நெற்றில் ஒற்றி ஆசீர்வதித்துப் ‘பணத்தைப் பத்திரமாய் வை!’ சொல்லிக் கொடுத்தார்.

கூட வந்துட்டா என்னவாம்? | குறுங்கதை | My Vikatan

பர்சிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் தடவித் தடவித் தேடி ஒன்றே ஒன்றை கவனமாய் எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு, மீண்டும் விரலால் விப்பூதி தொட்டு சடங்கான யாழினி நெற்றில் ஒற்றி ஆசீர்வதித்துப் ‘பணத்தைப் பத்திரமாய் வை!’ சொல்லிக் கொடுத்தார்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வெள்ளை வெளேர் வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் வந்து இறங்கினார் வேலாயுதம். பேத்தியின் சடங்குக்கு ஆசீர்வதிக்க வந்த பெருமை முகத்தில் மின்னியது.

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து விபூதி தட்டை நீட்டினாள் சடங்கான யாழினியின் அம்மா.

மோதிர விரலால் தொட்டு நெற்றியின் பூசிக் கொண்டு, ‘இரு ஒரு நிமிஷம் என்று மகளிடம் அதிகார தோரணையில் சொல்லிவிட்டு, பர்ஸைத் திறந்து விரித்து, வாயைத் திறந்து நாக்கை நீட்டி எச்சில் தொட்டுத் தடவிக் கொண்டு, பர்சிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் தடவித் தடவித் தேடி ஒன்றே ஒன்றை கவனமாய் எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு, மீண்டும் விரலால் விப்பூதி தொட்டு சடங்கான யாழினி நெற்றில் ஒற்றி ஆசீர்வதித்துப் ‘பணத்தைப் பத்திரமாய் வை!’ சொல்லிக் கொடுத்தார்.

Representational Image
Representational Image

பார்த்துக் கொண்டிருந்த கோமதி கேட்டாள் எச்சில் தொட்டு இத்தனை தடவு தடவறது எதுக்கு? கூட ஒண்ணு வந்துட்டாத்தான் என்னவாம்? பேத்திக்குத்தானே செய்யறீங்க?! கொரோனா காலத்துல கணக்கு வழக்குப் பார்க்காம கொடுத்தது கொடுக்கும் பரிவினால் அல்ல.. கொரோனா பயத்துனாலா? இப்ப, இந்தத் தடவு தடவுறீங்க? அப்போதெல்லாம், எச்சில் படாம எச்சரிக்கையா இருந்த்தெல்லாம் எங்கே போச்சு? கொரோனா போனா கருணையும் சுகாதாரமும் கூடவே போயிடுச்சோ?

சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியாமல் விழுங்கினாள். ஆசீர்வதிச்சது அப்பாவாச்சே!!!