Published:Updated:

காதோடு பேசிய கடவுள்! | குறுங்கதை | My Vikatan

Representational Image

‘கடவுள் மழை குளிர் சப்தத்தைக் குறைப்பாரா? என் பிரார்த்தனைக்குக் காதுகுடுத்து, சன்னமாவாவது என் காதில் பேசுவாரா?!’ நினைத்தபடியே தூங்கிப் போனான்.

காதோடு பேசிய கடவுள்! | குறுங்கதை | My Vikatan

‘கடவுள் மழை குளிர் சப்தத்தைக் குறைப்பாரா? என் பிரார்த்தனைக்குக் காதுகுடுத்து, சன்னமாவாவது என் காதில் பேசுவாரா?!’ நினைத்தபடியே தூங்கிப் போனான்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தகரக் கூரை வேய்ந்திருந்த வீட்டில் குடியிருந்தான் தண்டபாணி. டிசம்பர் மாத மழையும் குளிரும் நடுநிசியில் நர்த்தனமாடுவதை ரசிக்க முடியாவிட்டாலும் சகிக்க முடியவில்லை அவனால். தொரத் தொரவென ஊற்றும் மழை நீரின் சப்தம் தன் தூக்கத்தைக் கெடுப்பதைக் கூட அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால், தன் பேரக் குழந்தை யைத் தொட்டிலில் தூங்கவிடிருந்தான். அந்தக் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கிறதே இரண்டும் என்றுதான் அவன் கவலைப் பட்டான் அதிகமாக.

‘கடவுளே… உன்னைக் கருணையின் இருப்பிடம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்., நீ தயவு செய்து, இந்த நடுநிசி மழை, குளிரின் கடுமையைக் குறை., பாவம் அந்தப் பிஞ்சு தூங்க முடியாமல் அனத்துவதை என்னால் சகிக்க முடியவில்லை!’ . மனதார பிரார்த்தனை செய்து கொண்டு தூங்கிப் போனான்.

Representational Image
Representational Image

‘கடவுள் மழை குளிர் சப்தத்தைக் குறைப்பாரா? என் பிரார்த்தனைக்குக் காதுகுடுத்து, சன்னமாவாவது என் காதில் பேசுவாரா?!’ நினைத்தபடியே தூங்கிப் போனான்.

‘எழுந்திரு… எழுந்திரு…!’ சன்னமான குரலில் கடவுள் தட்டி எழுப்ப, தடாலென எழுந்தான் தண்டபாணி.

‘கடவுளா பேசுவது?!’ தூக்க கலக்கத்திலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்.

‘இருக்கும் கடவுளாய்த்தான் இருக்கும்..! சன்னமான குரலில் அவரைத்தவிர யார் இப்படி மென்மையாகப் பேச முடியும்?’ துக்கக் கலக்கம் தெளிகையில், மழை நின்றிருந்தது. கூரையில் தொப தொப சப்தம் இல்லை.. ஆனாலும், குழந்தை சிணுங்கிக் கொண்டேதான் இருந்தது. குளிர் ஒத்துக் கொள்ளவில்லையோ?! அதான் சிணுங்குகிறதோ?! நினைத்தான்.

‘கொஞ்சம் திரும்பிப் படுங்க…’ என்ற அந்த சன்னக் குரல், கடவுளின் குரலா?குரல் தொடர்ந்தது…

‘குறட்டை சப்தத்துல குழந்தை தூக்கம் வராம சிணுங்குது! என்று மனைவி தொட்டுச் சொன்னபோதுதான் தெரிந்தது.

சன்னமாய் பேசியது கடவுளல்ல.. சம்சாரம் என்று! குளிர் கடவுளின் குரலாய்த் அவள் தொண்டையைக் கம்ம வைத்து விட்டது போலும்?!.

-வளர்கவி, கோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.