Published:Updated:

அருமை! | குறுங்கதை | My Vikatan

Representational Image

‘ஏன் இதிலென்ன கஷ்டம்? நேரம் தவறாமலும் மாத்திரை மாத்தாமலும் எடுத்துச் சாப்பிடும் வசதிக்குத்தானே அது?’ எடுத்துச் சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருப்பியா? அதை விட்டுட்டு புலம்பறயே?!’

அருமை! | குறுங்கதை | My Vikatan

‘ஏன் இதிலென்ன கஷ்டம்? நேரம் தவறாமலும் மாத்திரை மாத்தாமலும் எடுத்துச் சாப்பிடும் வசதிக்குத்தானே அது?’ எடுத்துச் சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருப்பியா? அதை விட்டுட்டு புலம்பறயே?!’

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

‘இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு எந்த அருமையும் தெரிய மாட்டேங்குதே!?’ வருத்தப்பட்டுக் கொண்டார் வைத்தியநாதன்.

‘ஏன் என்ன ஆச்சு?’ எண்ணெய் ஊற்றினார் ஏகாம்பரம்.

‘காசோட அருமையோ, பொருளோட அருமையோ ஒண்ணும் தெரியமாட்டேங்குது. எல்லாம், கைநிறைய சம்பாதிக்கிற தெனாவெட்டு.

‘ஆ’… ‘ஊன்னா’… எதையாவது அமேசான்ல அழைச்சு ஆர்டர் பண்றது. அடுத்த ரெண்டு நாளுல அதுக்கே குட்பை சொல்லி அதையே குப்பைலயா போடறது?!’ வெறுப்பாய் இருக்குது வாழ்க்கை. ஒவ்வொரு பைசாவும் உணர்ந்து செலவளிச்சா சரி. ஆனா,  ஊதாரித்தனமா செலவு பண்றதுதான் ஒதைக்குது!’ வருந்தினார் வைத்தி.

Representational Image
Representational Image

‘விடுப்பா… நாம, அந்தக் காலத்து ஆளு இல்லையா?!, நாம்ம அணா, பைசா காலத்துக்கும் இந்த டாலர் காலத்துக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது!. இவங்க, சம்பாதிக்கறாங்க, செலவு பண்றாங்க, விட்டுத்தள்ளு! அவங்க காசு அவங்க செலவளிக்கறாங்க! நமக்கென்ன, நம்மையா காசு கேட்டு தொந்தரவு பண்றாங்க?’ என்றார் ஏகாம்பரம்.

‘என்ன அவங்க காசு நம்ம காசு…?! நம்ம கண்ணுமுன்னால ஒவ்வொரு பைசாவும் போகும் போதும் பக்கு பக்குங்குது தெரியுமா?

‘எங்க அப்பா அம்மால்லாம் மாத்திரை மருந்துகூட வாங்கக் காசில்லாம செத்துப் போனாங்க, இப்ப, மாத்திரைகளை வாங்கி, அதை  நேரா நேரத்துக்கு போட்டு வைக்க ஒரு பிளாஸ்டிக் டப்பா ஆர்டர் பண்றாங்க…. எனக்குத்தான். இருந்தாலும், அதுவும் கஷ்டமா இருக்குல்ல…?!’

‘ஏன் இதிலென்ன கஷ்டம்? நேரம் தவறாமலும் மாத்திரை மாத்தாமலும் எடுத்துச் சாப்பிடும் வசதிக்குத்தானே அது?’  எடுத்துச் சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருப்பியா? அதை விட்டுட்டு புலம்பறயே?!’

‘புலம்பாம என்ன? நாலு தடவை ஒபன் பண்னி குளோஸ் பண்ணினதுல,  அது வாயைப் பிளந்திடுச்சு.. எடுத்து குப்பைல போட்டுட்டு, அதைவிடக் காஸ்டிலியா இப்ப வேற ஒரு டப்பா ஆர்டர் பண்ணியிருக்காங்க?’ வைத்தி வருத்தப்பட்டார்.

அப்போது அங்கே வந்த அவர் மகள்,  ‘அங்கிள், அப்பாவுக்கு எப்பவும் அவசரம்  அந்த பிளாஸ்டிக் டப்பாவின் முன் பக்கம் பின்பக்கம் தெரியாம பேக் சைடுல டப்பாவை மடியில வச்சு ‘இரண்யவதம்’ பண்ணினா எந்த டப்பாதான் தாங்கும்?!’ என்று அவள் பங்ககுக்கு  அவள் புலம்ப, 

‘வாங்கிக் கொடுக்க ஆளிருந்தாலும் சிலபேருக்கு வைத்து அனுபவிக்க கொடுத்து வைக்கலையேன்னு  வைத்தி பற்றி ஏகாம்பரம் தன் நிலையோடு ஒப்பிட்டு நொந்து கொண்டார்.                    

-வளர்கவி, கோவை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.