Published:Updated:

திக் திக்! | குறுங்கதை | My Vikatan

Representational Image

பாதைகள் இல்லாத பயணம் மனிதர்களின் நடமாட்டம் குறைவு என உணர்த்தியது. தலைக்கு மேலிருந்த சூரியன் மெல்லமெல்ல மரங்களுக்குள் மறைந்து திடீரென இருள் சூழ்ந்தது... வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று சற்றே வேகமாய் முகத்தில் அறைந்தது...

திக் திக்! | குறுங்கதை | My Vikatan

பாதைகள் இல்லாத பயணம் மனிதர்களின் நடமாட்டம் குறைவு என உணர்த்தியது. தலைக்கு மேலிருந்த சூரியன் மெல்லமெல்ல மரங்களுக்குள் மறைந்து திடீரென இருள் சூழ்ந்தது... வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று சற்றே வேகமாய் முகத்தில் அறைந்தது...

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பசுமை நிறைந்த மலைச் சரிவு சுற்றிலும் ஓங்கி வளர்ந்த பெயர் தெரியாத மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கத்தும் பறவைகள் அவ்வப்போது கேட்கும் இலைகளின் சலசலப்பு....

பாதைகள் இல்லாத பயணம் மனிதர்களின் நடமாட்டம் குறைவு என உணர்த்தியது. தலைக்கு மேலிருந்த சூரியன் மெல்லமெல்ல மரங்களுக்குள் மறைந்து திடீரென இருள் சூழ்ந்தது... வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று சற்றே வேகமாய் முகத்தில் அறைந்தது...

அருகே ஏதோ மலைக் கிராமம் இருக்கும் போல நாயின் குறைப்பு மிகவும் தூரத்தில் கேட்கிறது...

திடீரென காற்றில் குளிர்ச்சி குறைய ஆரம்பித்திருந்தது.... ஆனாலும் காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது.... தனியாக இருட்டிய பிறகும் அடர்ந்த காட்டில் நான் மட்டும்.....

Representational Image
Representational Image

சிறுவயது முதலே நான் தைரியமாகவே இருந்ததாக அம்மா கூறி கேள்விப்பட்டு இருக்கிறேன். இல்லாவிட்டால் இந்த சூழலில் மற்றவர்கள் பயந்து விட்டிருப்பார்கள்.... என்னுள் நானே பேசியவாரே இருந்தேன். .... இவ்வளவு நேரமும் நான் ஏன் நடக்கவில்லை.... குழப்பம் ஆரம்பித்தது... ஆனால் காட்சிகள் மாறிக்கொண்டே இருந்ததே....

திடீரென சின்ன சத்தம்.... அது டிஸ்கவரி சேனலில் கேட்டறிந்திருந்த சத்தம்... நதியிலிருந்து ஏதோ ஒரு உயிரினம் நீர் அருந்தும் சத்தம். நான் அமைதியானேன்.... நடக்கத்தான் இல்லவேயில்லையே! .... இருந்தாலும் நின்றுவிட்டேன்....

கீழே குனிந்து கையில் சிக்கிய சிறு பாறையுடன் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.... சத்தம் வந்த திசையில் முழுகவனமும்....

மீண்டும் நாய் கத்தும் சத்தம் ஆனால் அருகில்..... மீண்டும் அமைதி..... ஒரே நிசப்தம்....

புலிகளின் நடமாட்டம் இருப்பதாக அங்கே பெரியவர் ஒருவர் சொன்னதை சீரியஸா எடுத்துக்காது வந்து விட்டது பெரிய பிழையானது... நிசப்தம்.... பீப்..... ஏதோ ஒரு சத்தம்... ஒருவேளை புலிகளின் கணக்கெடுப்புக்காக கட்டப்படும் எந்திரத்தின் பீப் ஒலியாக இருக்குமோ....

திடீரென்று மீண்டும் குளிர்ந்த காற்று.... ஆனால் நிசப்தம் மட்டுமே....

கையில் மெதுவான நடுக்கம்... சிங்கத்தின் கர்ஜனை... சத்தம் வந்த திசையில் கையிலிருந்த பாறையை தூக்கி எறிந்தேன்....

அதன் மேல் பட்டிருக்க வேண்டும் மீண்டும் நிசப்தம்.....

திடீரென மறைந்த சூரியன் பிரகாசமாக கண்ணை பறிக்கும் வகையில் தோன்றியது.... நிற்பதுவும் நடப்பதுமாய் என்னவள் என்னை மிரட்சியுடன் பார்த்திருந்தை பார்த்து குழப்பம் இன்னும் அதிகமானது....

என்னாச்சு இன்னிக்கு ஒம்போது மணிக்கே தூங்கிட்டீல்ல.. இப்போ மொபைல ஏன் செவத்துல அடிச்சு ஒடைச்ச...... எதுனா கனவுகினவு கண்டியா???? அதுவும் ஒருமணிநேரத்துக்குள்ள அப்டீ என்ன கனவு... மொபைலையே தூக்கி எறிஞ்சுறுக்க...

என் படுக்கையில் உட்கார்ந்து ஓடும் ஏசியையும் டியூப்லைட்டையும் மாறி மாறி பார்க்க.... மீண்டும் என்னை ஒருமுறை நன்றாக உலுக்கினாள்.... கண்களை நன்றாக கசக்கி விட்டு பார்த்த போது சுக்கல்சுக்கலாய் நொறுங்கியிருந்த மொபைலை பொறுக்கியவாறே.... என்னவளை பார்த்தேன்...

இதுக்குத் தான் மொபைலை பெட்டுக்கு கொண்டு வராதன்னு .... சொன்னேன் கேட்டியா........

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.