Published:Updated:

இந்த வாத்திகளே இப்படித்தான்! | குட்டி ஸ்டோரி | My Vikatan

Representational Image

சட்டென அவனுக்குள் ஒருவித பட்சாதாபம் தலைதூக்க, ‘சரி, நிறுத்தி ஒரு கேள்வி கேட்போம்! அவன் கரெக்டா பதில் சொன்னா, ‘ லிப்ட்’ கொடுக்கலாம்’ முடிவு பண்ணி, வண்டியை ஸ்லோ பண்ணினான்.

இந்த வாத்திகளே இப்படித்தான்! | குட்டி ஸ்டோரி | My Vikatan

சட்டென அவனுக்குள் ஒருவித பட்சாதாபம் தலைதூக்க, ‘சரி, நிறுத்தி ஒரு கேள்வி கேட்போம்! அவன் கரெக்டா பதில் சொன்னா, ‘ லிப்ட்’ கொடுக்கலாம்’ முடிவு பண்ணி, வண்டியை ஸ்லோ பண்ணினான்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

டூவீலரில் அந்த  ஸ்கூலைத் தாண்டி நாலு ரோடு பக்கம் வந்திருப்பான் வைத்தி.  பிளஸ்டூ படிக்கற பையனாட்டம் தெரிந்த அவன், தன் இடக்கை நான்கு விரல்களையும் மடக்கி கட்டை விரலை மட்டும் உயர்த்தி ‘லிப்ட்’ கேட்கும் பாவனையில் இவனை நிறுத்த முயன்றான்.

‘நிறுத்தலாமா வேண்டாமா? இவனுகெல்லாம் இப்ப எங்க ஒழுங்கா படிக்கறானுக! எதுக்கு நிறுத்தீட்டு? நடந்து போகட்டும்! இல்லே… கவர்மெண்ட் பஸ்ஸிருக்கில்லே அதுல போகட்டும்! அதென்ன இந்த வயசுலயே ‘லிப்ட் கேட்கிற தெனாவட்டு?! அந்தக் காலத்துல நாங்க,  எத்தனை கஷ்டப்பட்டு படிச்சு வாத்தியாரானோம்  தெரியுமா?!! எங்க, வாத்தியார்களை எப்படி தலைக்கு மேல வச்சு தாங்கினோம் தெரியுமா?’ நினைத்துக் கொண்டான்.

Representational Image
Representational Image

சட்டென அவனுக்குள் ஒருவித பட்சாதாபம் தலைதூக்க,  ‘சரி,   நிறுத்தி ஒரு கேள்வி கேட்போம்! அவன்  கரெக்டா பதில் சொன்னா, ‘ லிப்ட்’ கொடுக்கலாம்’ முடிவு பண்ணி, வண்டியை ஸ்லோ பண்ணினான். 

அவன் ஓடி வந்து பின் சீட்டில் ஏறி உக்கார முயலுகையில், ‘தம்பி ஒரு கேள்வி கேக்கலாமா உன்னை? பதில் சொன்னா லிப்ட் தரேன்!’ என்றான்,

மனசு,  ‘கேள் கேள் என்று நச்சரிக்க, என்ன கேட்பது மனசுக்குள் யோசித்தான. ‘தம்பி, ‘லிப்ட்’  கேட்டயே.. ‘லிப்ட்’ நவுனா? வெர்பா? வெர்புனா என்ன? நவுனுனா என்ன ? கேட்க ஆசை உந்த, 

உள்மனசு எச்சரித்தது. அவனுக்கு நம்ம மேல ‘வெறுப்பு’ வந்து நம்மை ‘டவுணாக்கீட்டான்னா?!’,  அவன் இந்தக் காலத்து மாணவன் அவனுக்கு தகவல் தொழில் நுட்ப அறிவு நம்மை விடவும் ஜாஸ்தி, நாம,  ஏடா கூடமா இதைக் கேட்க அவன் தயங்காம’

‘லிப்டை உருவாக்கினது யாருன்னு திருப்பி நம்மைக் கேட்டுட்டா?’ என்ன பண்றது? நமக்குத் தெரியாதே?!  நல்ல வேளை,  நாம் வாத்தியார்னு அவங்கிட்ட முன்னாடியே சொல்லாதது!’ நினைத்துக் கொண்டான்.

‘அங்கிள் எதோ கேக்கணும்னு சொன்னீங்களே?கேளுங்க!!” என்றான் அவன்.

ஹும்… நீ எங்க போகணும்? அவ்வளவுதான்’ முடித்துக் கொண்டு அவனை அங்கு கொண்டு இறக்கி விட்டுவிட்டுப் பறந்து மறைந்தான்.,

                                                        *****

-வளர்கவி, கோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.