Published:Updated:

சப்பாத்தி பூரிக்கு ஏற்ற முருங்கை மசால்! | My Vikatan

முருங்கைக்காய்

முருங்கைப்பூ, முருங்கைக்காய் ,முருங்கை கீரை, முருங்கை பிசின் , முருங்கை மர பட்டை இப்படி எல்லாமே மருத்துவ குணமிக்கது. இளமைக்கு பொலிவும் முதுமைக்கு தெளிவும் தருவது. இதோ முருங்கையில் சில வித்தியாசமான ரெசிபிகள் உங்களுக்காக..

சப்பாத்தி பூரிக்கு ஏற்ற முருங்கை மசால்! | My Vikatan

முருங்கைப்பூ, முருங்கைக்காய் ,முருங்கை கீரை, முருங்கை பிசின் , முருங்கை மர பட்டை இப்படி எல்லாமே மருத்துவ குணமிக்கது. இளமைக்கு பொலிவும் முதுமைக்கு தெளிவும் தருவது. இதோ முருங்கையில் சில வித்தியாசமான ரெசிபிகள் உங்களுக்காக..

Published:Updated:
முருங்கைக்காய்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வீட்டில் ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது எழுதப்படாத ஒரு நியதி முருங்கை மரம் வலுவில்லாத மரம் என்றாலும் வலுவை பிறருக்கு கொடுக்கும் மரம்.. எங்கள் வளவனூர் வீட்டு தோட்டத்தில் இரண்டு முருங்கை மரங்கள் இருந்தன அதில் கீரை பறிப்பதாகட்டும், முருங்கைக்காய் பறிப்பதாகட்டும் இரண்டும் என்னுடைய வேலை. வலுவில்லாத மரம் எளிதில் உடையும் அதனால் பார்த்து சர்வ ஜாக்கிரதையாக கீரை பறிக்க வேண்டும் .முருங்கைப்பூ, முருங்கைக்காய் ,முருங்கை கீரை, முருங்கை பிசின் , முருங்கை மர பட்டை இப்படி எல்லாமே மருத்துவ குணமிக்கது. இளமைக்கு பொலிவும் முதுமைக்கு தெளிவும் தருவது. இதோ முருங்கையில் சில வித்தியாசமான ரெசிபிகள் உங்களுக்காக..

முருங்கை
முருங்கை

சுடச்சுட முருங்கை சூப்

முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி தலா இரண்டு

துவரம் பருப்பு- கால் கப்

இஞ்சி -சிறு துண்டு

பூண்டு -மூன்று பல்

மிளகாய்த்தூள் , மிளகுத்தூள் பெருஞ்சீரகம், சீரகம் -தலா கால் டீஸ்பூன்

தனியா- ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள்-1 சிட்டிகை

உப்பு -தேவையான அளவு மல்லித்தழை -சிறிதளவு

மிளகு சீரகம் பெருஞ்சீரகம் தனியா ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து நன்கு பொடித்துக் கொள்ளவும் .இஞ்சி, பூண்டைநசுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி முருங்கைக்காயை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து இவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு பிரஷர் பேனில் வேக விடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி வைத்து ஆறியதும் வடிகட்டி சிறிதளவு வெண்ணை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.(முருங்கையின் விழுதை மட்டும் சூப்பில் சேர்த்து தோலை அகற்றி விடவும்) சுவையில் அசத்தும் இந்த சூப்..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சப்பாத்தி பூரிக்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசால் தானா? இதோ முருங்கையில் மசால் செய்யலாம்.

முருங்கை மசால் 1

முருங்கைக்காய் சிறு துண்டுகளாக நறுக்கியவை ஒரு அரை கப் சின்ன வெங்காயம் கால் கப் உரித்தது நீலவாட்டில் நறுக்கிய கத்தரிக்காய் கால் கப் உப்பு எண்ணெய் தேவையான அளவு சர்க்கரை சிட்டிகை அரைக்க

தேங்காய் துருவல்- கால் கப்

காய்ந்த மிளகாய் -எட்டு

வெங்காயம் -ஒன்று

இஞ்சி சிறு துண்டு

புளி-கோலிகுண்டு அளவு

கரம் மசாலாத்தூள் -அரை டீஸ்பூன்

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து நன்றாக வேக விடவும். பிறகு தேவையான உப்பும் சிட்டிகை சர்க்கரையும் சேர்த்து கரையும் வரை கலக்கவும். பொடியாக அரிந்த கறிவேப்பிலை சேர்த்து குழம்பு கெட்டியானதும் இறக்கி சூடான சப்பாத்தியுடன்பரிமாறவும்.. சுவையில் அசத்தும் இந்த மசால். ...

முருங்கை
முருங்கை

முருங்கை மசால் 2

இரண்டு முருங்கைக்காயை நன்கு வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.. அரை கப் பச்சை பட்டாணியை நன்கு வேக வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி -தலா இரண்டு, இஞ்சி சிறு துண்டு பூண்டு -இரண்டு பல் மிகவும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலம் தாளித்து(தலா1) வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் தக்காளி தேவையான உப்பு ,தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, இறக்கி ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு முருங்கைவிழுது+வேகவைத்த பட்டாணி+ அரைத்த வெங்காயம் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும். இதுவும் சப்பாத்தி/பூரிக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.

மாலை நேர ஸ்நாக்ஸ் ஒன்று செய்யலாமா!

ஹாட் முருங்கை கட்லெட்..

வேகவைத்து வழித்த முருங்கைக்காய் விழுது ஒரு கப்

பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் பேபி கார்ன்- அரை கப்

மசித்த உருளை-கால் கப்

தனியா தூள், சீரகத்தூள், தனி மிளகாய் தூள்- தலா ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் -கால் டீஸ்பூன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை- கால் கப்

கடலை மாவு- கால் கப்

அரிசிமாவு- ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு- சிறிதளவு

உப்பு எண்ணெய் தேவையான அளவு. அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகத்தை போடவும். பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கி, தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு உப்பு முருங்கைக்காய் விழுதுமசித்த உருளை சேர்த்து கிளறி இறக்கவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு மல்லித்தழை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய வடிவத்தில் கட்டலெட்டுகளாக செய்து கொள்ளவும் ஒவ்வொன்றாக தோசை தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சுவையில் அசத்தும் இந்தகட்லெட்(. கட்லெட்டுகளை உருண்டை வடிவத்தில் செய்து மைதாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்)... இப்படி வித்தியாசமான ரெசிபிகளை முருங்கையில் செய்து ஆனந்தமாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.