Published:Updated:

பென்சிலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! | My Vikatan

Representational Image

பென்சில் மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுறன்னு போகிற போக்கில் நக்கல் அடித்து செல்வோம். அந்த பென்சில் ஒன்னும் அவ்வளவு குறைஞ்சது இல்லை.

பென்சிலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! | My Vikatan

பென்சில் மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுறன்னு போகிற போக்கில் நக்கல் அடித்து செல்வோம். அந்த பென்சில் ஒன்னும் அவ்வளவு குறைஞ்சது இல்லை.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கற்றல் என்கிற கடலில் எப்பொழுதுமே பெரிய சம்பவம் / பெரிய மனிதர்கள் / பெரிய பொருள்கள் கிட்ட இருந்து தான் கத்துக்கிடனும்னு அவசியம் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் சிறிய துரும்பு கூட சில சமயங்களில் பெரிய பாடம் சொல்லும். அப்படி நான் கேட்ட கதைகள்/சுவாரஸ்யங்களை உங்களிடம் நல்லதா நாலு விஷயம் என்கிற தலைப்பில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

பென்சில் - எழுதுகோல். பென்சில் மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுறன்னு போகிற போக்கில் நக்கல் அடித்து செல்வோம். அந்த பென்சில் ஒன்னும் அவ்வளவு குறைஞ்சது இல்லை. பென்சிலிடம் இருந்து இன்னைக்கு நாம நாலு விஷயம் கத்துக்க போறோம்.

Representational Image
Representational Image

1. Write Good with your Little Potential - பென்சில் தேகமாய் வெளிப்புறத்தில் நாம் எப்படி பலவீனமாய் காணப்பட்டாலும் அதைப்பற்றி பெரிதாக வருத்தப்படவோ / அச்சமுறவோ தேவை இல்லை. பென்சிலில் இருக்கும் Graphite போன்று ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு திறன் இருக்கும். அதை பயன்படுத்தி நாம் என்ன எழுதுகிறோம் என்பதே முக்கியம். பென்சிலை வைத்து நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ / வரைகிறீர்களோ அதுவே அந்த பென்சிலின் தன்மையை எடுத்துரைக்கும். நல்லதும் எழுதலாம், தீயதும் எழுதலாம். ஆக்கப்பூர்வமான சக்தியை எழுத்தின் அல்லது படத்தின் மூலம் விதைக்கலாம், மாறாக அழிவுக்கு வழி வகுக்கும் திட்டமும் தீட்டலாம். நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கை / விடாமுயற்சி / நம்பிக்கை கலந்த Graphite போன்ற சிறிய திறனை வைத்து நல்லது பல உருவாக்க முற்படுவோம். நாம் செய்யும் செயல்கள் நல்ல அச்சாக என்றும் நிலைத்து நிற்க செய்யலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2.Do not regret over the past - நம்மில் பலர் ஒரு தவறு செய்த பின்னர் அதில் இருந்த மீண்டு வராமல் அந்த தவறையே நினைத்துக் கொண்டு நேரத்தை வீணடித்து நிகழ்காலத்தையும் தொலைத்து நிற்போம். ஆனால் பென்சில் சட்டென்று தன் தவறை உணர்ந்து அழிப்பான் (Eraser) துணை கொண்டு தன் தவறை திருத்திக்கொண்டு மீண்டு எழுதத் தொடங்கிவிடும். அதே போன்று நம் நலன் விரும்பிகளின் கருத்தை ஏற்றுக்கொண்டு அவ்வப்போது நாம் செய்யும் தவறை உடனடியாக பென்சில் அழித்துவிடுவது போல திருத்திக்கொள்ள வேண்டும். அந்த தவறிலேயே தேங்கி நின்று விடக்கூடாது. கூடவே இன்னொன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரே தவறை மீண்டும் மீண்டும் எழுதி அழித்துக்கொண்டே இருப்போமே ஆனால் அந்த பக்கத்தில் சிறிய வடு (Traces) இருப்பது போல ஒரே தவறை நாம் மீண்டும் மீண்டும் செய்வதால் நமக்கும் கறை உண்டாகலாம். ஆதலால் கூடுமானவரை தவறை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

Representational Image
Representational Image

3.Face and fight the difficulties - பென்சில் கூர்மை மழுங்கி விட்டால் கூர்ப்பியை (Sharpener) கொண்டு அவ்வப்போது சீவி விட்டு கூர்மை செய்து எழுத தொடங்குவோம். அதே போன்று ஒரே வகையான (Monotonous) வாழ்க்கையில் அவ்வப்போது நமக்கு பிரச்சனைகள் வரலாம். அந்த கஷ்டங்களோடு நொந்து கொண்டே கூர்மை இல்லாத எழுத்தாய் மழுங்கி வாழாமல், அந்த பிரச்சினைகள் தான் நம்மை மெருகேற்ற வந்த Sharpener என்று நினைத்துக்கொண்டு போராடி அதை எதிர்கொண்டு, கையாண்டு, நம்மை பட்டைத் தீட்டி, கூர்மையாக்கி புதிய மனிதராய் மீண்டும் நல்ல எழுத்துக்களை எழுத வேண்டும்.

4.Make use of Kith and Kin - என்னதான் பென்சிலிடம் எழுதும் திறன் இருந்தாலும் அதைப் பிடித்து எழுத விரல்கள் தேவை. அதே போன்று தான் இந்த உலகில் எந்த ஒரு தனி மனிதனும் தானாக வெற்றி பெற முடியாது. சுற்றம், சொந்தம், நண்பர்கள், நலவிரும்பிகள், சமூகம் என்று எவரோடு சேர்ந்து தான் ஒரு படைப்பை / பயணத்தை/ வெற்றியை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட வெற்றியே தனிமனித வெற்றியை விட சிறந்தது. ஆகவே சோதனைகள் வரும்போது துவண்டு போகாமல், நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று சலித்துக்கொள்ளாமல் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் கரங்களைப் பிடித்துக் கொண்டு சிறிய வழிகாட்டுதலோடு முன்னேறுவோம். இந்த கலி காலத்தில் அந்த நம்பிக்கையான கரங்கள் கிடைப்பது கடினம் தான். ஆனால் மனிதகுலம் இன்னும் அத்தகைய கரங்களைக் கொண்டிருக்கத்தான் செய்கிறது. நாம் முயன்றால் நிச்சயம் நமக்கும் கிடைக்கும்.

Representational Image
Representational Image

இனி நீங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது பென்சிலை நினைத்துக்கொள்ளுங்கள். நம்மால் சிறப்பானவற்றை எழுத முடியும், நம் தவறை திருத்திக்கொண்டு மீண்டு வர முடியும், இந்த கடின கால கட்டம் நம்மைப் பட்டைத் தீட்டி கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் நல்ல கரங்கள் நமக்கு துணை நிற்கின்றன என்று எண்ணிக் கொண்டு வீறு நடை போடுங்கள் உங்கள் பயணத்தில் ..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.