Published:Updated:

வைட் ஹவுஸ் சந்திரன்! | My Vikatan

Representational Image ( Photo by Sonaal Bangera on Unsplash )

அந்த முடிவெடுத்த பொழுது எனக்கு உண்மையிலேயே அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. சில நேரங்களில் கடைசி தருணத்தில் (nth Moment) நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையையே மாற்ற கூடியதாக இருக்கும்.

வைட் ஹவுஸ் சந்திரன்! | My Vikatan

அந்த முடிவெடுத்த பொழுது எனக்கு உண்மையிலேயே அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. சில நேரங்களில் கடைசி தருணத்தில் (nth Moment) நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையையே மாற்ற கூடியதாக இருக்கும்.

Published:Updated:
Representational Image ( Photo by Sonaal Bangera on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று திங்கள் கிழமை மாலை ஐந்து மணிக்கு பௌதீகம் முதுநிலை ( MSc Physics) சேர்க்கைக்காக கல்லூரி முதல்வரை சந்திக்க வேண்டும். எங்கள் ஊரிலிருந்து ரெண்டே முக்கால் மணி காமாட்சி பஸ்ஸில் சென்று சத்திரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள தேசிய கல்லூரி மேல் நிலை பள்ளி வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் நானும் எனது அப்பாவும் காத்திருந்தோம். என் மனது MCA என்று அடித்து கொண்டேயிருந்தது. ஒரு பத்து நிமிடம் கழித்து என் அப்பாவிடம் அப்பா நீங்க ஊருக்கு போங்க நான் என் பிரெண்ட பாத்துட்டு நைட் ஊருக்கு வந்திறேன் .....என்று சொல்லிவிட்டு முதல்வரை சந்திக்காமலே கீழ புலிவார்ட் ரோடிலுள்ள நண்பனின் வீட்டிற்கு சென்று விட்டேன். அந்த முடிவெடுத்த பொழுது எனக்கு உண்மையிலேயே அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை.

Representational Image
Representational Image

சில நேரங்களில் கடைசி தருணத்தில் (nth Moment) நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையையே மாற்ற கூடியதாக இருக்கும். நான் என்னுடைய இளநிலை கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அவ்வாறு ஒரு முடிவெடுக்க நேர்ந்தது. ஆட்டமும் பாட்டமும் கிண்டலும் கேலியாக எதிர்காலம் பற்றிய எந்த கவலையுமின்றி கல்லூரி முடித்தாகிவிட்டது. கல்லூரி முடிக்கும் முன்பே மேற்படிப்பு படிப்பது என்பதும் தெரிந்து விட்டது. என்ன படிக்கலாம் என்றும் ஒருவாறு முடிவாகிவிட்டது. பௌதீகம் முதுநிலை ( MSc Physics) அல்லது முதுநிலை கணினி பயன்பாடுகள் (Master of Computer Applications - MCA) எதோ ஒன்று படிக்கலாம் என்று முடிவு செய்து பல இடங்களில் விண்ணப்பமும் செய்து விட்டு சில கல்லூரிகளில் நுழைவு தேர்வும் எழுதினோம்.

ஆனால் எந்த நுழைவு தேர்விற்கும் உருப்படியாக தயாராக வில்லை.

ஏதோ தெரிஞ்சதை எழுதிட்டு வருவோம் என்ற நிலையிலேயே எதுவும் படிக்க வில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் சில இடங்களில் விண்ணப்பிப்பதற்கு என் நண்பர்களே காரணம். மேலும் முதன்முறை நகரத்தில் சென்று கல்லூரி படித்தும் இது போன்ற நுழைவு தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும் என்று பெரிதாக எந்த அறிவும் அப்போது இருக்க வில்லை. மேலும் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளுக்கு அப்பொழுது தான் ஒரு நல்ல வாய்ப்பு உருவாகிக்கொண்டிருந்தது. அதனாலேயே MCA தான் எனது முதல் தேர்வாக இருந்தது,

எங்காவது MCA விற்கு சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலும் நான் படித்த தேசிய கல்லூரி மாலை நேர வகுப்பிற்கு பௌதீகம் முதுநிலை ( MSc Physics) விண்ணப்பித்திருந்தேன். நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்தபோது பல இடங்களில் விண்ணப்பித்து முதலில் தேசிய கல்லூரியிலிருந்து தான் அனுமதி சேர்க்கை கடிதம் வந்தது. அது போலவே இப்பொழுதும் அனுமதி சேர்க்கை கடிதம் வந்தது தேசிய கல்லூரியிலிருந்து. வேறு எங்கும் இடம் கிடைக்க வில்லை. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என்னுடைய விண்ணப்பம் காத்திருப்பு பட்டியலில் (Waiting List) இருந்தது. MCA படிப்பு அப்பொழுது அவ்வளவு எளிதாக இடம் கிடைக்காது. திருச்சியிலேயே சில கல்லூரிகளில் மட்டும்தான் இருந்தது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இருந்தது.

Representational Image
Representational Image

என் நண்பன் ஜெயகாந்த் "மச்சி புத்தனாம்பட்டில நேரு மெமோரியல் காலேஜ் (NMC) ல கொஞ்சம் சீட் இருக்கு ... MCA க்கு ",

"நீ எதுக்கும் ஒரு தடவ அங்க போயி பாருடா...." அங்க லைப்ரரியன் தான் அட்மிசன்லாம் பாக்குறது. அவரை மீட் பண்ணு..அப்டினு சொன்னான்.

புத்தனாம்பட்டி எனக்கு தெரிந்த ஊர் தான். என்ன ஒன்று பஸ் வசதி அவ்வளவு கிடையாது. என்னுடைய அக்கா அங்குதான் ஆசிரியை பயிற்சி படித்தார். அதனால் முன்பே நான் அங்கு சில முறை சென்றிருக்கிறேன். கிராம புற சூழலில் அந்த பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் கல்லூரி கனவை நினைவாகும் விதமாக அந்த கல்லூரி திரு மூக்கபிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை பற்றி முதலில் அம்மாவிடம் சொன்னேன். என்னுடைய இளைய அக்காவும் எனக்கு சப்போர்ட் ஆக இருந்ததால் என் அப்பாவை ஒருமாதிரி சம்மதிக்க வைத்து விட்டோம்.

என் போன்ற கிராமப்புறத்திலிருந்து முதல் தலைமுறை மாணவனாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு அன்று இளநிலை பௌதீகம் பிரிவில் சேர்க்கைக்கு அனுமதி அளித்த முதல்வர் திரு தியாகராஜன் அவர்களுக்கும், MCA க்கு சேர்க்கை அனுமதி அளித்த நேரு நினைவு கல்லூரி அப்போதய முதல்வர் திரு ராமலிங்கம் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். அடுத்த நாள் நானும் என்னுடைய அப்பாவும் நேரு மெமோரியல் காலேஜ் (NMC) க்கு சென்று முதல்வர் அறைக்கு வெளியில் சிறிது நேரம் காத்திருந்தோம். லைப்ரரியன் அவர்கள் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். MCA அட்மிஷனுக்காக வந்திருப்பதாக சொன்னவுடன் எவ்வளவு சதவீதம் மதிப்பெண் என்று விசாரித்தார்.

எழுபத்தியொரு சதவீதம் மதிப்பெண் என்று சொன்னவுடன், "எப்போ வந்து அட்மிஷன் போட்டுகிறீங்க....." என்று கேட்டவுடன் ஒருநாள் கழித்து வந்து பணம் கட்டி சேர்ந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டோம். பின்பு ஒருவழியாக பணம் ரெடி செய்து MCA சேர்ந்து விட்டேன்.

Representational Image
Representational Image

இன்று 27 வருடங்களுக்கு பிறகு நினைக்கையில் ஒரு கனவு போல் இருக்கிறது. தினமும் கல்லூரி செல்ல ஆரம்பித்துவிட்டேன். எங்களுக்கு கல்லூரி மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறரை மணி வரை. மதியம் இரண்டு பேருந்துகள் உண்டு. பதினொன்றரை மணிக்கு (ஓமாந்தூர் வழியாக) ஒன்றும் பனிரெண்டரை மணிக்கு (வெள்ளைக்கல் பட்டி வழியாக) ஒன்றும் உண்டு. பெரும்பாலும் வெள்ளைக்கல் பட்டி வழியாக செல்லும் பெருந்தில்தான் செல்வோம். சிலநேரம் உட்கார இடம் கிடைக்கும் பலநேரம் நின்று கொண்டுதான் பயணம். ஒன்றே முக்கால் மணிக்கு புத்தனாம்பட்டி செல்லும். மத்திய உணவை அவசரம் அவசரமாக சாப்பிட வேண்டும். புத்தனாம்பட்டி சந்திரன் டீ கடையில் தான் அமர்ந்து சாப்பிடுவோம். ஒரு ஆம்லெட் இல்லை ஒரு கரண்டி முட்டை (தாளிக்கும் கரண்டியில் முட்டையை அடித்து ஊற்றி உருண்டையாக இருக்கும்) கட்டாயம் வாங்குவோம். ஒன்று ஐந்து ரூபாய் என்று ஞாபகம். கூடுதலாக தேவையென்றால் கொஞ்சம் பொரியல் இலவசமாக கேட்டு வாங்கி கொள்ளலாம். அந்த கடையை நடத்திய சந்திரன் அண்ணா எங்களை விட சில வயது மூத்தவராக இருப்பார். அனைவரையும் சரியாக பெயர் சொல்லி அழைப்பார். எனக்கு சற்று வியப்பான விஷயம் அதுதான். பரபரவென்று அனைவருக்கும் பரிமாறுவார். அவருடைய அம்மாவும் அப்பாவும் சேர்ந்து கவனித்து கொண்டார்கள்.

சந்திரன் டீ கடை எங்கள் கல்லூரி கேட்டுக்கு நேரெதிரே இருக்கும். அப்பொழுதான் கடைக்கு அருகிலிருந்த இடத்தில் ஒரு வீடு கட்டி இருந்தார். வேலைகள் முற்றும் முடியாத நிலையில் வெண்மையாக சுண்ணாம்பு அடிக்க பட்டு இருந்தது. கதவு மட்டும் வைக்கப்

?பட்டிருந்தது. என்னுடைய கல்லூரி தோழர்கள் சிலர் கல்லூரி விடுதியில் சேரவில்லை. வெளியில் வீடு எடுத்து ஒன்றாக தங்கி கொள்வதாக திட்டம்.

அறிமுகம் இல்லாத ஊரில் இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காத நிலையில் சந்திரன் கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது இதை பற்றி அவரிடம் கேட்க எதுவும் யோசிக்காமல் வீடு கிடைக்கும் வரை அவருடைய புதுவீட்டில் தாங்கிக்கொள்ளுமாறு உடனே கூறிவிட்டார். அப்பொழுது வீடு கிரக பிரவேச பூஜை எதுவும் நடக்க வில்லை. இதற்கு நிச்சயம் பெரிய மனது வேண்டும்.

முதல்வாரம் ஒருநாள் ஒரு பேராசிரியர் என் நண்பர்களிடம் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்ட போது

"வொயிட் ஹவுசில்......" என்று சந்திரன் வீட்டை பெருமையாக குறிப்பிட்டது இன்றும் நினைவிருக்கிறது.

அதன் பின்பு அவர்கள் வீடு கிடைத்து வேறு இடம் செல்லும்வரை சுமார் ஒருமாதம் இருக்கலாம் (சரியாக நினைவில்லை )என் நண்பர்கள் அங்குதான் தங்கியிருந்தார்கள்.

"காலத்தார் செய்த உதவி சிறிதெனினும்..." என்று வள்ளுவர் சொன்னது போல் அன்று இது மிகப்பெரிய உதவி.

கல்லூரி முடித்த பிற்பாடு ஒரு பத்து வருடங்கள் கழித்து ஒருமுறை அங்கு செல்ல நேர்ந்தது. அப்பொழுது சந்திரன் அண்ணா கடைக்கு சென்றேன். சரியாக ஞாபகம் வைத்து என் பெயர் சொல்லி அழைத்தார்.

Representational Image
Representational Image

சமீபத்தில் என் கல்லூரி தோழன் RR சுரேஷ் எங்களுடைய கல்லூரி WhatsApp குழுவில் ஒரு தகவல் பகிர்ந்திருந்தான். சந்திரன் அண்ணாவின் மகன் தற்பொழுது கல்லூரி முடித்து பெங்களுருவில் வேலை கிடைத்திருப்பதாகவும் வேலையில் சேர்வதற்காக பெங்களூரு வந்திருந்த சந்திரன் அண்ணாவின் மகன் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு தங்குவதற்கு உதவி செய்ய நேர்ந்ததை பெருமையுடன் குறிப்பிட்டு எவ்வாறு தனக்கும் தனது நண்பர்களுக்கும் எந்த வித முன் அறிமுகமும் இல்லாத போதும் தனது புதிய வீட்டில் தங்க பெரிய மனதுடன் உதவி செய்த சந்திரன் அண்ணாவை பற்றி பகிர்ந்திருந்தான்.

அவர் செய்த உதவிக்கு இது ஒரு சிறிய கைமாறு என்றாலும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு தக்க நேரத்தில் திருப்பி கிடைக்கும் என்பதே இன்றைய நியதி.

மீண்டும் சந்திப்போம்,

ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.