Published:Updated:

கண்மணி நீ வர! | கல்லூரி நினைவுகள் | My Vikatan

Representational Image

கருத்தம்மா படத்தில் வரும் நடிகை மகேஸ்வரியை நினைவுக்கு கொண்டு வரும் முக சாயல். அதன் பின்னர் எனக்கு கருத்தம்மாவில் டாக்டர் வேடத்தில் நடித்த நடிகை மகேஸ்வரியை மிகவும் பிடித்து போனது.

கண்மணி நீ வர! | கல்லூரி நினைவுகள் | My Vikatan

கருத்தம்மா படத்தில் வரும் நடிகை மகேஸ்வரியை நினைவுக்கு கொண்டு வரும் முக சாயல். அதன் பின்னர் எனக்கு கருத்தம்மாவில் டாக்டர் வேடத்தில் நடித்த நடிகை மகேஸ்வரியை மிகவும் பிடித்து போனது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இருபது வருடங்கள் கழித்து நந்துவை பார்த்த பொழுதும் மனதுக்குள் அதே மணியோசை. கோவில் கதவில் கோர்க்கப்பட்டிருக்கும் சிறு மணிகள் கதவை திறந்தவுடன் உள்ளிருந்து குளிர்ச்சியாக தழுவும் காற்றுடன் சலசலவென ஆனந்தமாக ஒலிக்கும் மணிகளின் கலவையான ஓசையை போல.

......

முதன்முதலாக நந்து என்கிற நந்தினியை நான் பார்த்தது நான் கல்லூரி சென்ற முதல் நாள் அரசு பேருந்தில் தான்.

"கண்மணி நீ வர காத்திருந்தேன் .......

ஜன்னலில் பார்த்திருந்தேன்......." பாடல் பேருந்தில் ஒலித்து கொண்டிருந்தது.

எனக்கு பிடித்த அந்த பாட்டை ரசித்து கொண்டே ஜன்னல் வழியாக பேருந்தினுள் ஏறியவர்களை பார்க்க பளிச்சென்ற அந்த முகத்தை பார்த்தவுடன்.....

நீங்கள் முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்.

கருத்தம்மா படத்தில் வரும் நடிகை மகேஸ்வரியை நினைவுக்கு கொண்டு வரும் முக சாயல். அதன் பின்னர் எனக்கு கருத்தம்மாவில் டாக்டர் வேடத்தில் நடித்த நடிகை மகேஸ்வரியை மிகவும் பிடித்து போனது. நான் அப்பொழுது MSc முதலாம் ஆண்டும் நந்தினி BSc முதலாம் ஆண்டும் ஒரே கல்லூரியில் படித்து கொண்டிருந்தோம்.

.................

முத்தழகு ....முத்தழகு .....என்று கதறியபடி இழுத்து செல்லப்பட்ட அவனை பின்புறமாக இருகைகளையும் இணைத்து விலங்கு பூட்டியிருந்தார்கள். கையில் வேல்கம்புடன் இரண்டு பேர் இழுத்து செல்ல காட்சி பிழையாக மங்கி மறைந்து கொண்டிருக்கும் அவனுடைய காதலியான முத்தழகின் அழகிய முகத்தினை கடைசியாக ஒருமுறை ஆசை தீர பருகிவிட்டு முழுமையாக நெஞ்சில் நிரப்பி கொள்ளும் உத்வேகத்துடன் ஒருமுறை திரும்பி பார்த்தான். அங்கு முத்தழகை காணவில்லை.

வெட்டு பாறையில் கழுத்து புதையும் அளவு வட்டமாக வெட்டியெடுக்கப்பட்ட ஒரு மரண இயந்திரத்தில் தலை வைத்து இடுப்பை வளைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். இடப்புறமாக சாய்த்து முடிந்தவரை தலையை திருப்பி கையில் பெரிய வெட்டரிவாளுடன் நின்றவனை பார்க்க முடியவில்லை. ஆனால் உச்சி வெயிலில் பளபளத்த அரிவாள் மட்டும் கண்ணுக்கு தெரிந்தது.

"ம்ம்ம்ம்ம்.... ஆகட்டும் ..."என்ற உத்தரவு கேட்டது.

ஒங்கப்பட்ட அரிவாள் கழுத்தை நோக்கி வேகமாக இறங்க ஆரம்பித்தது.

Representational Image
Representational Image

கழுத்தை நெருங்கும் சமயம்.......

"வெட்டு பாறை பஸ் ஸ்டாப் வந்துருச்சு....இறங்கறவங்க படிக்கட்டுக்கு வாங்க...." என்ற கண்டக்டரின் குரலில் திடுக்கிட்டு கண்விழித்தான்.

முகமெல்லாம் வியர்வை அரும்பியிருக்க பேயடித்தவன் போல பேந்த பேந்த விழித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் என்ன நடந்தது என்று புரியாமல் தனக்கு ஏற்பட்டது கனவா அல்லது நினைவா என்று பகுத்தறிய முடியாமல் யோசித்து கொண்டிருந்தான். பேருந்து நகர தொடங்கியவுடன் முகத்தில் பட்ட சில்லென்ற காற்றினால் சற்று சுய நினைவுக்கு திரும்பினான். இதுவரை நிகழ்ந்தது கனவு என்று புரிபட தொடங்கியது.

நன்றாக தூங்கி கொண்டிருந்தவன் விழித்தவுடன் அவனுடைய அதிர்ச்சியான முகத்தை பார்த்து

"மச்சி...மச்சி....என்னடா.... ஆச்சு..." என்று கேட்டபடியே உலுக்கிவிட்டான் சக நண்பன்.

"ஒண்ணுமில்லடா மாமா .....எதோ கெட்ட கனவு...." என்று கூறியபடியே கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்து கொண்டான்.

மீண்டும் நிகழ்ந்த கனவை அசைபோட ஒன்றிற்கொன்று தொடர்பில்லாமல் சில காட்சிகள் மட்டும் நினைவுக்கு வைத்தன. கடைசிவரை அவனுடைய பெயரும் முகமும் நினைவிற்கு வரவேயில்லை.

........

தினமும் எங்களுடைய கல்லூரி இருந்த ஊருக்கு செல்லும் பேருந்தில் அனைத்து மாணவர்களுடனும் ஆட்டமும் பாட்டமும் கேலியும் கிண்டலுமாக கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். அதே பேருந்தில் இடையில் வரும் ஒரு ஊரில் ஏறிக்கொள்ளும் நந்துவை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனசுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போன்ற உணர்வும் காதுக்குள் அந்த மணியோசையும் கேட்கும்.

அன்றும் அப்படிதான் நந்துவை ரசித்து கொண்டே மனம் உலலாலா பாடி கொண்டிருந்தது. கண்ணை மூடி சீட்டின் மீது சாய்ந்திருந்தவன் அப்படியே தூங்கிவிட்டேன்.

........

ஓங்கிய வெட்டரிவாள் கழுத்தை துண்டிக்கும் முன் மிகுந்த பிரயாசையுடன் திரும்பி தண்டனையை நிறைவேற்ற பணித்த அந்த மனிதனின் முகத்தை பார்க்க....தெளிவாக அந்த முகம் தெரியும் நேரம் சரியாக கழுத்து துண்டிக்க பட .....

திடுக்கிட்டு விழித்த போது பேருந்து வெட்டுப்பாறை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தது. மீண்டும் அதே கனவு. இந்த முறை அந்த பெரிய மனிதனின் முகமும் நன்றாக நினைவில் பதிய நினைவில் வந்த அந்த முகத்தை எண்ணி அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

.........

இன்று நந்துவை பார்த்த பொழுது அருகில் இன்னொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. நந்துவுடன் அருகில் சகாதேவன். 


கல்லூரி படித்தபோது வந்த விடை தெரியாத ஒரு புதிர் கனவுக்கான விடை இப்போது தெரிந்து விட்டது. 


“everything falls into place….”

கழுத்து வெட்டுப்பட்ட அந்த முகம் சகாதேவன். 


அந்த பெரியமனிதன் நான் பூங்குன்றன். 


அப்பொழுது முத்தழகு ? வேறு யார்? 

நந்துவேதான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.