Published:Updated:

குஸ்தி யப்த பூர்த்தி! | My Vikatan

Representational Image

ஏன் நீதான் நல்ல டீயா போடறது... சும்மா குறை சொல்ல வந்துட்ட... காலைலருந்து ஒரு நிமிசம் உக்காராம உனக்காக பாத்து பாத்து புடிச்சதா செஞ்சு குடுத்தா எல்லாத்தையும் நல்லா சாப்ட்டு தூங்கிட்டு வந்து அது சரியில்லை இது சரியில்லை னு தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கீங்க....

குஸ்தி யப்த பூர்த்தி! | My Vikatan

ஏன் நீதான் நல்ல டீயா போடறது... சும்மா குறை சொல்ல வந்துட்ட... காலைலருந்து ஒரு நிமிசம் உக்காராம உனக்காக பாத்து பாத்து புடிச்சதா செஞ்சு குடுத்தா எல்லாத்தையும் நல்லா சாப்ட்டு தூங்கிட்டு வந்து அது சரியில்லை இது சரியில்லை னு தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கீங்க....

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஏலக்காயும் இஞ்சியும் சேர்ந்து கொதிக்கும் பாலில் ஒன்றாய் கலந்து விட்ட தேயிலைத் தூளும் யாருக்கும் தாகத்தை தூண்டும் மனம் ... அதுவும் மழை பெய்யும் அந்த மாலை நேரத்தில் மனதை கிரக்கும் இளையராஜா இசை பின்னணியில் ஜேசுதாசின் குரல் என எல்லாம் ஒருங்கே அமைய என்ன தவம் செய்தனையோ....


தாய்மாமாவின் போன் பலநாட்களுக்கு பிறகு... கிரகப்பிரவேசம் நிகழ இருப்பதாகவும் அன்றே தனது சஷ்டியப்த பூர்த்தியும் பிளான் பண்ணி உள்ளதாகவும் கூறி நிச்சயமாக வரவேண்டும் என்றார். பேசி முடித்ததிலிருந்தே அப்பா அம்மாவின் சஷ்டியப்த பூர்த்தியில் நிகழ்ந்தேரிய காமெடிகளை மனம் அசைபோட ஆரம்பித்தது.

எ.பழத்தை எலந்தை பழமென்று நினைத்து தேடோதேடென்று தேடி கடைசியில் அது எழுமிச்சம்பழம் என்றும் எலந்தை பழமல்ல அது இலந்தை பழமென்று உணர்ந்தபோது வீடே சிரிப்பின் விளிம்பிற்கு சென்று வந்தது... நினைக்கும் போதே புன்முறுவல் என் முகத்தில்.... அப்போது வழிந்த அசடின் மறுஒளிபரப்பு இன்றும்....

Representational Image
Representational Image

என்னவாம்.... ஒரே சிரிப்பாருக்கு.... என்னவளின் சீண்டலில் நிகழ்வுலகிற்கு வந்தேன்... பதிலுக்கு நானும் சற்றே சீண்டிவிட முயன்றேன்....

நீ என்ன இப்படி டீ போடுற.... நான் வேற உன்னோட டீயை பத்தி நெறய விளம்பரம் பண்ணிட்டு இருக்கேன் ....

ஏன் இதுக்கென்ன எப்பவும் போடற மாதிரி தானே பண்றேன்....

இன்னிக்கு அந்த வாசனை குறையிதே.... அவசரப்பட்டு டீத்தூள போட்டுட்ட ..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏன் நீதான் நல்ல டீயா போடறது... சும்மா குறை சொல்ல வந்துட்ட... காலைலருந்து ஒரு நிமிசம் உக்காராம உனக்காக பாத்து பாத்து புடிச்சதா செஞ்சு குடுத்தா எல்லாத்தையும் நல்லா சாப்ட்டு தூங்கிட்டு வந்து அது சரியில்லை இது சரியில்லை னு தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கீங்க....


கோபத்தில் அவள் முகம் சிவந்து திட்டுவது கூட காதலாய் தோன்றவே ......


கோபத்துல நீ இன்னும் அழகாயிருக்கடா...


...................

கோபம் உச்சமானது பாத்திரம் பறந்து வந்தது... சிறு வயதில் தங்கையின் தாக்குதலில் இருந்து தப்பித்து கற்றுக் கொண்ட தற்காப்பு கலை பயன் தந்தது....

Representational Image
Representational Image

ஜஸ்ட் மிஸ்..... சிரித்து கொண்டே மனம் பாடியது

(பறந்தாலும் விடமாட்டேன் பாடல் மெட்டில்) மனதில் பாட்டு ஓட ஆரம்பித்தது...

பாத்திரம் பறந்தாலும் அடி படமாட்டேன்... அடி பட்டாலும் அழ மாட்டேன்...

மடார்.... என்னவளின் குறி அர்ச்சுனனையொத்தது....

பட்ட அடியில் ஆழ்மனதில் திடீரென மனதினுள் ஒரு மின்னல் ....

ஏன் அறுபதாம் கல்யாணம் மட்டும்.... ஏன் நாற்பதாம் கல்யாணம் இருக்கக்கூடாது..... அதற்கு ஏன் சஷ்டியப்த பூர்த்தி போல "குஸ்தி யப்த பூர்த்தி" என்று பெயரிட்டு சற்றே சண்டைகளை குறைத்து கொள்ள கூடாது....

தங்கைக்கு போன் செய்து இந்த புதிய சடங்கை முன்னெடுக்கும் படி கேட்டுக்கொண்டேன்.... பதினோரு மணிக்கு போன் பண்ணி..... என ஏதேதோ விலங்குகளை என்னுடன் ஒப்பிட்டு போனை வைத்து விட்டாள்...

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.