Published:Updated:

புறாவின் ஜனனம்! | My Vikatan

புறா

கூடு கட்ட சுள்ளிகளை கொண்டு வந்து சேர்த்தது. முதல் நாள் குடியிருப்பை சுத்தம் செய்பவர் சுள்ளிகளையும் சேர்த்துப் பெருக்கினார். சரி இவை இனி இங்கே வராது என நானும் அவரும் நினைத்தோம்.அதற்கு மாறாக மீண்டும் ஜோடிப்புறாக்கள் கூடு கட்டியது.

புறாவின் ஜனனம்! | My Vikatan

கூடு கட்ட சுள்ளிகளை கொண்டு வந்து சேர்த்தது. முதல் நாள் குடியிருப்பை சுத்தம் செய்பவர் சுள்ளிகளையும் சேர்த்துப் பெருக்கினார். சரி இவை இனி இங்கே வராது என நானும் அவரும் நினைத்தோம்.அதற்கு மாறாக மீண்டும் ஜோடிப்புறாக்கள் கூடு கட்டியது.

Published:Updated:
புறா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சென்ற வருடம் lockdownல் என் கோவை வீட்டை ஆறேழு மாதங்கள் பூட்டியதின் விளைவு, என் balcony யை புறாக்கள் நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டன. நான் வீட்டுஉரிமையாளருக்குக் கொடுத்த வாடகையில் ஒரு பகுதியை எப்படியாவது ஏதாவது ஒரு ஜென்மத்தில் இந்தப் புறாக்களிடம் இருந்து வாங்கிவிட வேண்டும் என நினைத்தேன். மீண்டும் நான் கோவையில் வந்து தங்கிய பிறகு நான் ஷூ ஷூ என்று கத்திய சத்தத்தில் புறாக்கள் பயந்து வேறு இடம் தேட ஆரம்பித்தன. கடைசியாக அவற்றுக்கு நான் இருக்கும் முதல் தளத்தின் ஓர் ஓரத்தில் இடம் கிடைத்தது.

புறா கூடு
புறா கூடு

கூடு கட்ட சுள்ளிகளை கொண்டு வந்து சேர்த்தது. முதல் நாள் குடியிருப்பை சுத்தம் செய்பவர் சுள்ளிகளையும் சேர்த்துப் பெருக்கினார். சரி இவை இனி இங்கே வராது என நானும் அவரும் நினைத்தோம்.அதற்கு மாறாக மீண்டும் ஜோடிப்புறாக்கள் கூடு கட்டியது. அவரும் இதை இன்னிக்கும் பெருக்கனுமா என்று சோகமாகக் கேட்க, சரி விட்ருங்க பாத்துக்கலாம் என்றேன். காலை நேரங்களில் நான் கதவு திறந்து பார்க்கும் போது புறாக்கள் இரண்டும் கூட்டின் அருகில் அமைதியாக அமர்ந்திருக்கும்.சிறிது நேரம் பறந்து இரைத் தேடி மீண்டும் வரும்.பிறகு பெண்புறா தவம் செய்வது போல் அமர்ந்திருக்கும். முதலில் என்னைப் பார்த்து பயந்தது. பிறகு அதற்கு என்னைப் பார்த்து பார்த்து பழகிவிட்டது. அதனால் நான் கதவை திறந்து அதைப் பார்க்கும் வேளைகளில் அது பயப்படுவதில்லை. புறாக்களில் ஆணாதிக்கம் கிடையாதாம்.அதன் முட்டையை அடைக்காப்பதில் ஆண் பெண்புறா இரண்டும் சமமாக நேரம் ஒதுக்குமாம். மனிதர்கள் இயற்கையிடம் இருந்து நிறையக் கற்றுக் கொள்ளவில்லை போலும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் இந்தப்புறாக்களை மூன்று வேளைகளிலும் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கமானது. அதனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். ஏண்டீம்மா, உடம்பு நல்லாருக்கா, ஏதாவது வாய்க்கு ருசியா சமைச்சுப் போடடும்மா என்று கேட்டேன். அதன் மஞ்சளும், ஆரஞ்சும் கலந்த அழகிய கண்களின் வழியே என்னை விசித்திரமாகப் பார்த்தது. வளைகாப்பு, சீமந்தம் இதெல்லாம் வழக்கம் உண்டா உங்க இனத்தில்? நான் வேணா தடபுடலா பண்ணட்டுமா எனக்கேட்டேன் அதை தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து நான் கிளம்பினால் போதும் என நினைத்து அதன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டது.நான் அதற்கு வைக்கும் உணவு வகைகளில், அந்த ஜோடிப் புறாக்களுக்கு காராபூந்தி மிகவும் இஷ்டம். மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடும். ஒருநாள் காலையில் அழகிய அதன் முட்டையைக் கண்டேன். மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அடுத்த நாளைக்குள் அது களவாடப்பட்டு விட்டது. எடுத்துச் சென்றது எந்தப் பறவை எனத் தெரியவில்லை.

புறா கூடு
புறா கூடு

மீண்டும் சில நாட்களுக்குப் பின் இரண்டு முட்டைகள் இட்டது. கடவுளே இந்தமுறையாவது இவைப் பத்திரமாக இருக்க வேண்டுமென எண்ணினேன். கிட்டதட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு முட்டையிலிருந்து அதன் குட்டி வெளிவந்தது. அதைப் பார்த்த அந்த நொடி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தாயும் சேயும் கொஞ்சிக்கொண்ட காட்சிகள் அவ்வளவு அருமை. அன்று அனைவருக்கும் இனிப்பு செய்து பகிர ஆசையாக இருந்தது. நான் அன்றைக்கு வீடு காலி செய்யும் வேலையில் மும்முரமாக இருந்ததால் செய்ய முடியவில்லை. மறுநாள் அந்த இடத்தை விட்டு நான் வந்துவிட்டேன். என்றாவது ஒருநாள் அந்தக் குட்டிப் புறா வளர்ந்து என்னை நோக்கிப் பறந்து வரும் என்ற நம்பிக்கையில் வேறு ஊரில் வேறு இடத்தில் காத்திருக்கின்றேன்.

-Vinu shahapuram

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.