Published:Updated:

கண்ணீர் வர வைத்த தாய்லாந்து கோலி சோடா! | My Vikatan

Wat Pho temple

அந்த பன்னீர் சோடா தண்ணீரை எப்படி கண்ணாடி பாட்டிலுக்குள் ஊற்றி இருப்பார்கள்? அந்த கோலிகுண்டு எப்படி அதிலிருந்து வெளியில் வராமல் இருக்கிறது? இப்படி பல்லாயிரம் கேள்விகள் மனதுக்குள் .. இரவு தூக்கமே வரவில்லை.

கண்ணீர் வர வைத்த தாய்லாந்து கோலி சோடா! | My Vikatan

அந்த பன்னீர் சோடா தண்ணீரை எப்படி கண்ணாடி பாட்டிலுக்குள் ஊற்றி இருப்பார்கள்? அந்த கோலிகுண்டு எப்படி அதிலிருந்து வெளியில் வராமல் இருக்கிறது? இப்படி பல்லாயிரம் கேள்விகள் மனதுக்குள் .. இரவு தூக்கமே வரவில்லை.

Published:Updated:
Wat Pho temple

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என் பத்தாவது வயதில் குளிர்பானம் எனக்கு அறிமுகமாகியது. ஒரு முறை அப்பாவும் நானும் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகரை வாங்கி வர கடைத்தெருவுக்குச் சென்றோம். எங்கள் ஊர் கடைத்தெரு மிகவும் சின்னது.

நாலைந்து டீக்கடைகள், பட்டாணி கடை அரிசி கடை வட்டிக் கடை, பூக்கடை ,மளிகை கடை, துணிக்கடை(கோ ஆப் டெக்ஸ்) அவ்வளவுதான் விநாயகருக்கு எருக்கம் பூ மாலை வாங்க பூக்கடைக்கு சென்ற பொழுது அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் அகலமான சிமெண்ட் தொட்டியில் கலர் கலராய் பச்சை நிறத்தில்/ நீல நிறத்தில் சற்று கடின தன்மையான கண்ணாடி பாட்டில் , அகலமான கீழ்ப்பகுதி ,குறுகிய கழுத்து அடைத்துக் கொண்டிருக்கும் கோலிக்குண்டு.

சோடா
சோடா
ஆர்.எம்.முத்துராஜ்

இப்படி பார்க்கவே மிகவும் அழகாய் இருந்த பாட்டிலைப் பார்த்து இது என்ன? என, அப்பாவிடம் கேட்க இது மாணிக்க விநாயகர் கோலிசோடா அது பக்கத்துல இருக்கிறது ஒண்டிப்புலி சர்பத் என்றும் கூறினார் . ஒவ்வொரு பாட்டிலுக்கும் மேலையும் ஒரு அழகான எலுமிச்சை சூலத்தில் சொருகி இருப்பது போல் அழகாய் கம்பீரமாய் வீற்றிருந்தது. எனக்கு வேண்டும் என்று கேட்க, அப்பா கோலிகுண்டை கட்டை விரலால் உள்ளே அழுத்த.. ஸ்ஸ்ஸ் என்ற சத்தம்.. வாயில் வைத்து குடிக்கும் போது சற்று பயமாகவே இருந்தது கோலிகுண்டு எங்கேயாவது வயிற்றுக்குள் போய் விடுமோ என்று! அந்த கோலிகுண்டு பாட்டிலுடன் உறவாடும்போது ஒரு அழகான சத்தம்.. (கிளிங் கிளிங் என்று...) வீட்டுக்கு வந்தும் ஒரேபன்னீர் சோடாபுராணம் தான். வாங்கி வந்த விநாயகரின் நினைப்பே இல்லை. அந்த பன்னீர் சோடா தண்ணீரை எப்படி கண்ணாடி பாட்டிலுக்குள் ஊற்றி இருப்பார்கள்? அந்த கோலிகுண்டு எப்படி அதிலிருந்து வெளியில் வராமல் இருக்கிறது? இப்படி பல்லாயிரம் கேள்விகள் மனதுக்குள் .. இரவு தூக்கமே வரவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனம் விரும்புதே உனை... என சத்தம் போட்டு கத்தலாம் போல இருந்தது . குடித்த அந்த சோடாவின் சுவை.. அந்த ஜில்லிப்பு.. மறக்கவே முடியவில்லை . காலை எழுந்தவுடன் முதல் வேளையாக அப்பாவிடம் இதைப் பற்றி கேட்க, பாட்டில்களில் சுத்தமான நீரை பயன்படுத்தி அதில் வாயுவை கலந்து தயாரிப்பார்கள் என்று அப்பா சொன்னார்.... இப்படியாக என்னுள் அறிமுகமான பன்னீர் சோடா.. கால மாற்றங்களுக்கு ஏற்ப லைம் சோடா ஆரஞ்சு சோடா ,ஜிஞ்சர் சோடா ,..என்று என்னைப் போலவே நான் 'வளர்கிறேனே மம்மி' என வளர்ந்தது . குறிப்பாக கல்லூரி படிக்கும் காலத்தில் பேருந்தை விட்டு இறங்கியவுடன் குறிப்பிட்ட அந்த கடைக்குச் சென்று, பன்னீர் சோடா அல்லது நன்னாரி சர்பத் (இதோ இப்ப கூட அந்த நன்னாரி சர்பத்தின் வாசம் இன்னும் என்னுடனேயே இருப்பது போல் ஒரு பிரமை) குடித்துவிட்டு தான் தெம்பாய் நடந்து வீட்டிற்கு செல்வேன். அதேபோல் தேர்வு காலங்களில் ஒரு பன்னீர் சோடாவை குடித்த பிறகே பேருந்தில் ஏறுவேன். குடிக்கும் தருணங்களில் எனக்குரிய பேருந்து வந்தாலும் அதற்காக பெரிதாக கவலைப்படாமல் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்து ஏறிச் செல்வேன். .. என் கல்லூரி காலங்களில்.. எங்கள் ஊர் பன்னீர் சோடா மற்றும் ஒண்டிப்புலி சர்பத் தான் சீக்ரெட் ஆஃப்மை எனர்ஜி .

இளவட்டக்கல்லும்... கோலி சோடா குண்டும்!
இளவட்டக்கல்லும்... கோலி சோடா குண்டும்!

ஊரை விட்டு வந்த பிறகு இந்த 30 வருடங்களில் நான் எங்கும் பன்னீர் சோடாவை குடித்ததே இல்லை. (சந்தர்ப்பமும் அமையவில்லை) இப்பொழுது வருகிற எந்த குளிர்பானங்களையும் இந்த நிமிடம் வரை நான் தொட்டதில்லை.. (கோக் , பெப்சி ,மாசா... ) அது என்னவோ எனக்கு பிடித்தமே இல்லை அதில் எல்லாம்..

கடந்த மாதம் தேவதைகளின் நாடான தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அப்பொழுது பாங்காக்கில் வாட்ஃபோ(பேலஸ்) பார்க்க சென்றிருந்தோம். மிகப்பெரிய புத்தர் கோயில் தகதகவென தங்க நிறத்தில் ஜொலித்தார் புத்தர். கண்ணை விட்டு அகலவில்லை.. கொளுத்துகிறது வெயில்.. காலில் செருப்பும் இல்லை.. தொண்டை வறண்டு போய்விட்டது. அந்தக் கோயிலுக்குள் கையில் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. அடித்து பிடித்து அவசர அவசரமாக வெளியில் வந்து தண்ணி எங்கு கிடைக்கும் என்று பார்த்தால்.. வெளியே ஒரு நடுத்தர வயது பெண்மணி அகலமான சிமெண்ட் தொட்டியில் சோடாவை வைத்திருந்தார்.

பார்த்தவுடன் பேச்சே எழவில்லை. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ... ஒரு காலத்தில் எங்கள் ஊர் பெட்டிக்கடையில் கோலோச்சிய குளிர்பானம்.. எங்கள் ஊரின் குடிசை தொழில்... அதே கடினத்தன்மையான பச்சை நிற கண்ணாடி பாட்டில், அகலமான கீழ்ப்பகுதி குறுகிய கழுத்து.. அடைத்துக் கொண்டிருக்கும் கோலி குண்டு.. என விதவித ப்ளேவர்களில் சோடா வைத்திருந்தார். விலையைப் (பாத்) பற்றி சற்றும் கவலைப்படாமல் நான்கைந்து சோடா வாங்கி குடித்தேன். கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தோடியது அனைவரும் வெயிலினால் நாக்கு வறண்டு கண்ணீர் வருகிறது என நினைத்தனர்... ஆனால் எனக்கு மட்டுமே தெரியும் என் அப்பா முதன் முதலில் வாங்கி கொடுத்த பன்னீர் சோடா நினைவுக்கு வந்ததால் வந்த கண்ணீர் என்று...

மாணிக்க விநாயகம் கோலி சோடா ஒண்டிப்புலி சர்பத் மறக்க முடியுமா மறக்கத்தான் முடியுமா?!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.