வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நம் பசியாற்ற உணவு உற்பத்தி செய்யும் உழவர்கள், நம் மனித இனத்திற்கு மட்டும் உணவு உற்பத்தி செய்யவில்லை. அறிந்தும் அறியாமலும் மனித இனத்தோடு சேர்த்து இவ்வுலகில் உள்ள பிற ஜீவராசிகளுக்கும் நேரடியாகவும் மறைமுகமுகமாகவும் உணவளிக்கின்றனர். இயற்கையை சார்ந்து நாம் இருக்கிறோம், நம்மை சார்ந்து பல உயிரினங்கள் உள்ளன. அதற்கு சான்றாக எனது புகைப்பட படைப்புகளுள் சிலவற்றை நான் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.

உதாரணத்திற்கு ஒரு விவசாயி ஒரிடத்தில் பயிரிட ஆரம்பித்து தண்ணீர் பாய்ச்சும் பொழுது தேங்கிக்கிடக்கும் அந்த சேற்றினில் நண்டு, தவளை போன்ற பிற உயிரினங்கள் அங்கு வந்து தஞ்சமடைகின்றன.
அவர்களை உண்ணுவதற்கு கொக்கு, வெள்ளை அறிவாள் மூக்கன்கள், கரிய அறிவாள் மூக்கன்கள், சாம்பல் நாரைகள், குளத்துக் கொக்குகள், சிறிய மீன்கொத்திகள், வெண்தொண்டை மீன்கொத்திகள், கார்வெண் மீன்கொத்திகள், அன்றில் பறவை, பனங்காடை மற்றும் பல பறவைகள் அங்கு வருகின்றன.

பயிர் சற்று வளர்ந்தவுடன் எலிகள் போன்ற விலங்குகள் பயிர்களை உண்ண வருகின்றன.
எலிகளை உண்ணுவதற்கு பாம்புகள் மற்றும் ஆந்தைகளும் வருகின்றன.

பாம்புகளை உண்ணுவதற்கு மயில்களும் மேலே குறிப்பிட்ட பல பறவைகளுள் சில பறவைகளும் வருகின்றன. அவற்றுள் பருந்துகளும் கழுகளும், வைரிகளும், வல்லூறுகளும் அடங்கும்.
பயிர் நன்கு வளர்ந்தவுடன் கிளிகளும், சிறு குருவிகளும் (கதிர் குருவி, சாம்பல் கதிர் குருவி, தூக்கணாங்குருவி, வெண்தொண்டை சில்லை, புள்ளி சில்லை, கருந்தலை சில்லை மற்றும் பல) வருகின்றன. பயிர் முதிர்ந்தால் நமக்கு சோறு.

முதிர்ந்து களத்தில் புடைத்த தவிடுகளும் உடைந்த குருணைகளும் கோழிகளுக்கு உணவு.
களத்தில் அடித்து கய்ந்த சருகுகள் (வைக்கோல்கள்) ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் உணவு. இவை தவிர சிறு சிறு எறும்புகளும் கூட தானியங்களை உண்டும் பசியாறுகின்றன..

நான் குறிப்பிட்ட மேற்கூறியவைகள் ஒரு பெரிய யானைக்கு உள்ள சிறிய கண்ணில் உள்ள ஒத்த முடியைப் போன்ற சிறு தவகல்களே.
விவசாயம் என்கிற வெவ்வேறு களத்தில் வெவ்வேறு ஜீவராசிகளுக்கு உணவளித்து வருகிறார்கள்.

உடம்பில் சேறு தெரிக்கும் களத்தில் இறங்கி களப்பசியாற்றும் விவசாயிகள் அனைவருக்கும் என் இனிய உழவர் தின நல் வாழ்த்துக்கள்.
நீ உண்டு களப்பசியாறு! நீ உணவளித்து களப்பசியாற்று!
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”. (1031)

உலகிலுள்ள எல்லா உயிர்களும் உழவர்களை நம்பி வாழ்கின்றன. உலகம் உழவுத் தொழிலை நம்பியுள்ளது. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். யாவருக்கும் உணவளிப்பவர். உழவர் யாரிடமும் யாசித்து நில்லாதார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.