Published:Updated:

நானே கேள்வி, நானே பதில்! | My Vikatan

Representational Image

'ஆதி முதல் அந்தம்' வரையில் நம்முடன் பயணிப்பது விமர்சனம். குழந்தை பிறந்த உடன் அதன் தந்தைக்கு பதவி உயர்வு கிடைத்தால்... குழந்தை பிறந்த நேரம் நல்லது நடந்திருக்கிறது என்று முதல் விமர்சனம் ஆரம்பமாகும்.

நானே கேள்வி, நானே பதில்! | My Vikatan

'ஆதி முதல் அந்தம்' வரையில் நம்முடன் பயணிப்பது விமர்சனம். குழந்தை பிறந்த உடன் அதன் தந்தைக்கு பதவி உயர்வு கிடைத்தால்... குழந்தை பிறந்த நேரம் நல்லது நடந்திருக்கிறது என்று முதல் விமர்சனம் ஆரம்பமாகும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஆனந்த விகடனில் இடம் பெற்ற பிரபலமான பகுதி இது. வாசகர்களை வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வைக்க அடிக்கடி பல புதுமைகளை கொண்டு வருவது விகடன் வழக்கம். கேள்வி பதில் பகுதியில் வாசகர்களே கேள்வி கேட்டு அதற்கு அவர்களே பதில் சொல்லும் படி ஒரு புதிய தளத்தை அமைத்து தந்தார்கள்.

விகடன் பிரசுரம் அதை புத்தகமாக வெளியிட்டுள்ளது. பலர் அதில் புகுந்து விளையாடினார்கள். நானும் எழுதி இருக்கிறேன்.

கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பிறகு திடீரென்று ஒரு நாள் இந்த பிரிவில் எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்த புதிய முயற்சி.

Representational Image
Representational Image

"விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்களிடம் உள்ளதா...?"

" 'ஆதி முதல் அந்தம்' வரையில் நம்முடன் பயணிப்பது விமர்சனம். குழந்தை பிறந்த உடன் அதன் தந்தைக்கு பதவி உயர்வு கிடைத்தால்... குழந்தை பிறந்த நேரம் நல்லது நடந்திருக்கிறது என்று முதல் விமர்சனம் ஆரம்பமாகும். இது நேர்மறையானது. வேறு மாதிரியாக இருந்தால் எதிர்மறை விமர்சனம் வரும்.

வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருக்கும் ஒருவனுக்கு எதிர்பாராத விதமாக அவன் தந்தை இறந்து அவரின் அரசு பணி கிடைத்தால்...

இதுபோல நிறைய சொல்லலாம். தவிர்க்க முடியாதது விமர்சனங்கள். ஆனால் சிலர் விமர்சனம் என்ற பெயரில் எதையாவது சொன்னால் அதை கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும். அவர்களை புறக்கணிப்பது சாலச் சிறந்தது.

அதனால் நமக்கு எந்த இழப்பும் வராது. குறிப்பாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். யோகக்கலையில் முத்திரைகள் பிரதான இடத்தில் உள்ளது. அதில் ஒன்று தான் "ஆதி முத்திரை" அதை கற்றுக் கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'திருச்சிற்றம்பலம்' எப்படி இருக்கு...?"

தனுஷ், நித்யாமேனன்.
தனுஷ், நித்யாமேனன்.

"முதலில் 'திருச்சிற்றம்பலம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இரு சிவனடியர்கள் சந்தித்துக் கொண்டால் 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லிய பிறகு பேசத் தொடங்குவார்கள். அடியவர்களின் மனமாகிய ஆலயத்தில் ஆடும் இறைவன் சிவபெருமான். அம்பலம் வெளி ஆகாயமாகும்.

நமது இதயத்தில் சிறு கட்டை விரல் அளவு ஆன்மா இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மா. சைவப் பெரியவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது 'திருச்சிற்றம்பலம்' என்று ஒருவர் சொன்னால் இன்னொருவர் 'தில்லையம்பலம்' என்று சொல்வார். அதற்கான அர்த்தம் 'உன் ஆன்மா நிறைவு பெறட்டும்' அதனால் தில்லையம்பலத்தில் இருக்கும் ஆனந்தக் கூத்தனை தரிசிக்க வேண்டும்.

தற்போது எல்லாவற்றையும் சுருக்கிச் சொல்வது வழக்கம். 'பலம் பலம்' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஆன்மிகம் வேறு ஒரு வழியில் பலம் பெற தொடங்கி உள்ளது. மனசு நிரம்பி வழிகிறது. 'திருச்சிற்றம்பலம்' எழுதி உள்ள இடங்களிலும் அரங்கம் நிரம்பி வழிகிறது என்று 'அனேகன்' பேர்கள் தகவல் தருகிறார்கள். போதுங்களா..

'கவிஞர் பட்டம் எந்த பல்கலைக்கழகத்தில் கொடுக்குறாங்க...?

நடமாடும் பல்கலைக்கழகமேன்னு தங்கள் தலைவரை வாழ்த்தி சில கட்சிகளின் நிர்வாகிகள் போஸ்டர் அடித்தது பார்த்திருப்பீர்கள். அதற்கு என்ன அர்த்தம் பல்கலைக்கழகம் செய்யும் அத்தனை வேலைகளையும் அவர் ஒருவரே செய்வதாக சொல்லாமல் சொல்லியிருப்பார்கள்.

வெளியிலிருந்து யாரும் அப்படி வாழ்த்து சொல்லாததால், சும்மா 'கண்ணே..மணியே ன்னு ..' எழுதுபவர்கள் எல்லாம் தங்களை நடமாடும் பல்கலைக்கழகமாக பாவித்துக் கொண்டு தங்களுக்கு தாங்களே 'கவிஞர்' பட்டம் கொடுத்து கொள்கிறார்கள் (கொல்கிறார்கள்). முகநூலில் பாருங்கள்...கோடிக்கணக்கில் கவிஞர்கள் இருப்பார்கள். ஆதலால் நீங்களும் 'கவிஞர்'பட்டம் போட்டுக்கொள்ளலாம்... நடமாடும் பல்கலைக்கழகமாக மாறி. விலையில்லாப் பட்டம் இது.

Representational Image
Representational Image

'பணம் பத்தும் செய்யும்' ன்னு சொல்றாங்களே புதுசா ஒரு விளக்கம் கொடுங்கள்..."

சமீபத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. விருதுடன் பத்து லட்சத்துக்கான காசோலையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது. அந்த பத்து லட்சத்துடன் ரூ.ஐயாயிரத்துக்கு காசோலையை சேர்த்து பத்து லட்சத்து ஐயாயிரம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திருப்பித் தந்தார் திரு.நல்லகண்ணு அவர்கள். 'பணம் பத்துக்கு மேல் ஐந்தும் வைக்கும் பத்தரை மாற்று தங்களையும் தரும்' என்ற புது மொழி உருவாக காரணமாகிவிட்டார். இதுதான் இனி நிலைத்து நிற்கும்.. புரிந்து கொள்ளுங்கள்.

எழுத்தால் ஆள்பவர்களை விமர்சனம் செய்வீர்களா..?

Representational Image
Representational Image

நம்மை ஆள்பவர்கள் பற்றி... அதாவது தங்களது எழுத்தால் ஆள்பவர்களைப் பற்றி 3 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் மிக நீண்ட விமர்சனம் செய்துள்ளார். ஜோக், கவிதை, கதை, நாவல், கார்ட்டூன் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் முன்னணியில் இருக்கும் எழுத்தாளர்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற புதிய முயற்சியில் அவர் இறங்கி சுமார் 100க்கும் மேற்பட்டவர்களை பேட்டி கண்டு தனது வித்தியாசமான நடையில் எழுதி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அப்படி ஒரு முயற்சியை அவர் தொடங்கும் போது அதை கிண்டலடித்தவர்களும் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களைப் பற்றிய தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த தகவல் தனிப்பட்ட முறையில் நான் தெரிந்து கொண்டது.

புத்தகம் வெளியிடும் அனைவரும் தங்களது கதை, கவிதை, ஜோக் ஆகியவற்றை தொகுத்து வெளியிடுவார்கள். ஆராய்ந்து பார்த்தால் கவிதை தொகுப்பாக வெளிவந்த புத்தகங்கள் லட்சக்கணக்கில் இருக்கும். இது உண்மையா என்று கண்டறிய தொல்பொருள் இலாகா தான் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு கவிஞர்கள் நாட்டில் உள்ளார்கள். ஜோக், சிறுகதை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.

மாற்று சிந்தனையோடு எழுதப்பட்டு வெளிவந்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி வெளியிடப்பட்ட புத்தகம் 'எழுத்தாள்பவர்கள்'. தலைப்பே உயர்ந்து நிற்கிறது. ஒருவர் மற்றவர்களின் ஆளுமையைப் பற்றி எழுத பரந்த மனம் வேண்டும். நூற்றுக்கணக்கானோரின் தகவல்களை திரட்ட பொறுமை வேண்டும்.

எல்லாவற்றையும் திரட்டி எழுதி 2019 ல் வெளியிட்டார் நாவலாசிரியர் ராம்குமார் அவர்கள். வாங்கிப் படியுங்கள். முன்னணி வார இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் திருவாளர்கள் ராஜாசிங் ஜெயக்குமார், ராம்.ஆதிநாராயணன், ரிஷிவந்தியா, மதுரை முருகேசன், பா.து.பிரகாஷ், சீர்காழி ரேவதி, திருமயம் பாண்டியன், வைகை ஆறுமுகம், சின்னஞ்சிறு கோபு , காட்பாடி சுகுமார், நா.கி.பிரசாத்,முத்து ஆனந்த், தங்க.நாகேந்திரன், டாக்டர் லட்சுமணன்,மணிவண்ணன், சிவகுமார் நடராஜன், சரஸ்வதி செந்தில்...இவர்களைப் போல இன்னும் பலரைப் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.

இந்த புத்தகத்திற்கு சமீபத்தில் விருது கிடைத்துள்ளது. அவரது உழைப்புக்கு கிடைத்த முதல் மரியாதை இது. அந்த புத்தகத்தில் இடம்பெற்ற அனைவரும் அவரை பாராட்ட வேண்டும். முக நூல் பதிவில் சும்மா கட்டை விரல் லைக் போடுவது ஏற்புடையதல்ல.

திரு. ராம்குமார் அவர்கள் தற்போது விகடன் சர்குலேசன் பிரிவில் பணி புரிந்து வருகிறார். பல நாவல்களை எழுதி இருக்கிறார். பல பரிசுகளை வாங்க காத்திருக்கிறார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.