வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எங்கள் வீட்டில் ஒரு அழகான PANASONIC TV இருந்தது. எங்கள் வீட்டில் ஒரு நபர் என்று சொல்லும் அளவுக்கு அந்த டிவியை பிடிக்கும். எங்கள் கல்யாணத்திற்கு பிறகு வாங்கின முதல் பெரிய பொருள் அது தான்..... நிறைய உழைத்து விட்டது. பல வீடுகள் மாறி மாறி ஒவ்வொரு முறையும் வீடு மாறும் போதெல்லாம் அடிவாங்கி இடி வாங்கி டயர்ட் ஆகிவிட்டது. எங்க சொந்த வீட்டிற்கு வந்த பின்பு, ``அப்படா இவனுக்கு Rest ’’ என்று நினைத்தேன்.
ஒரு நாள் நல்ல மழை... பாவம் அவன் ஆயுசு முடிந்துவிட்டது. சரி வேறு TV வாங்குவதற்கு முன் இவனை யாருக்காவது Sale பண்ணுவோம் என்று முயற்சி செய்தேன் , எந்த Electrician-ம் வாங்கவில்லை....
சரி ! Scrap கடையில் போட்டு விடலாம் என்று கொண்டுப் போனேன்... அவரிடம் ரொம்ப நேரம் போராடியும் 100 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று கூறிவிட்டார். பல ஆயிரம் காசு போட்டு வாங்கிய டிவி என்பதால் அறை மனசாக கடையில் போட்டேன்....eS


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டிவியை கடையில் போட்ட பிறகும் மனசு கேட்காமல், தெரிந்த TV Repair Shop -க்கு போனேன்.... அங்கு கடையில் ஒரு தெரிந்த தம்பி தான் இருந்தார்....அவரிடம் TV பற்றி சொன்னேன் - 1000 ரூபா போகு என்றார்.... ஓடு Scrap கடைக்கு, அவரிடம் 100 ரூபாய் Return கொடுத்துட்டு... TV எடுத்துட்டு... TV Repair Shop க்கு போனேன். அந்த தம்பி திங்கள் கிழமை வாங்க அண்ணன் இருப்பார்... பேசி முடிச்சிருலாம் என்றார்.
திங்கள் கிழமை போனேன். அந்த ஓனர் அண்ணன் ``Display போச்சு , நெறய செலவு இருக்கு... So maximum 200 தரேன்’’ என்று குண்டை தூக்கி போட்டார்.
அடிச்சு புடிச்சு -பேசி முடித்து, எங்களின் செல்ல PANASONIC TV-யை ஒரு 250 க்கு விற்றேன்.
இப்போது 1000 ரூபா போக வேண்டிய TV - 250 க்கு விலைப் போனது. 100 ரூபா Scrap ஆக வேண்டிய TV - 250 க்கு போனது.
இதில் 150 ரூபாய் லாபமா ? 750 ரூபா நஷ்டமா ??? நீங்களே சொல்லுங்கள்!!!
-எஸ்.கோபால்,
மாங்காடு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.