Published:Updated:

பத்து ரூபாய்! | குறுங்கதை | My Vikatan

Representational 'image

ஜெராக்ஸ் எடுக்க ரெண்டு ரூபாய் தான் ஆகுமே என மூளை கணக்கு சொன்னது. இருப்பினும் மனமில்லாமல் பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

பத்து ரூபாய்! | குறுங்கதை | My Vikatan

ஜெராக்ஸ் எடுக்க ரெண்டு ரூபாய் தான் ஆகுமே என மூளை கணக்கு சொன்னது. இருப்பினும் மனமில்லாமல் பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

Published:Updated:
Representational 'image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் சங்கர் என்னிடம் வந்து பத்து ரூபாய் கேட்டார்.


“எதுக்குங்க பத்து ரூபாய்”


“எப்எம்பி ஜெராக்ஸ் எடுக்கனும் சார்”

ஜெராக்ஸ் எடுக்க ரெண்டு ரூபாய் தான் ஆகுமே என மூளை கணக்கு சொன்னது. இருப்பினும் மனமில்லாமல் பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

அவர் சென்றதும் அலுவலகத்தின் உள்ளே எழுதி கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலரான கலைச்செல்வி சங்கர் பெயரைச் சொல்லி இரண்டு முறை கூப்பிட்டார்

“அவர் இல்லீங்க மேடம். வெளிய போயிருக்கார்”

அவர் அழைக்காமலே நான் உள்ளே சென்றேன்.

“ஒன்னுமில்ல சார். இதுல அஞ்சு எப்எம்பி காபி தேவப்படுது. ஜெராக்ஸ் எடுக்க அனுப்பனும். அதான் சங்கர கூப்பிடேன்” என்றார்.

“அவர் இப்ப தான் மேடம், எங்கிட்ட ஜெராக்ஸ் எடுக்கனும்னு பத்து ரூபா வாங்கிக்கனு கையில ஒரு நோட்ட எடுத்துனு போனார்”


“எப்எம்பி புக்கே இங்க இருக்கு. அப்புறம் எதை ஜெராக்ஸ் எடுக்க போனார். இதே வேலையா போச்சு அவருக்கு. டைமாச்சுல்ல.. டீ குடிக்க போயிருப்பாரு” தலையில் கைவைத்து கடிந்துக் கொண்டு தமது எழுத்து வேலையை தொடர்ந்தார்.

டீக்கடை
டீக்கடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“டீ குடிக்க காசு வேணும்னா கேட்டு வாங்கிட்டு போக வேண்டியதானே. இப்படி பொய் சொல்லி எதுக்கு வாங்கிட்டு போகனும். இதெல்லாம் ஒரு பொழப்பா” என்று உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது.

அலுவலகத்தின் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் சங்கர் திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் போது என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.

அந்த சிரிப்பு கூட “பார்த்தியா உன்னை ஏமாத்திட்டன்” என்பதாக எனக்குப் பட்டது.

வந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன். வந்த வேலை முடிய வேண்டுமே!

மறுபடியும் எங்கிட்ட வந்து ஜெராக்ஸ் எடுக்க மீண்டும் பத்து ரூபாய் கேட்கிறானா இல்லையான்னு பார்க்கலாம். ஒரு வேலை மீண்டும் பத்து ரூபாய் கேட்டால் நாக்கை பிடிங்கிக் கொள்வது மாதிரி நாலு வார்த்தை கேட்டுவிட வேண்டியதுதான். உள்ளுக்குள் கருவிக்கொண்டு வெளியே காத்திருந்தேன்.

அலுவலகத்லிருந்து வெளிவந்த சங்கர் நான் நினைத்தபடியே

“சார்.. இன்னொரு பத்து‌ர்ருபா குடுங்க” என்றார்.

“எதுக்குங்க பத்துர்ருபா”

“ஜெராக்ஸ் எடுக்கனும் சார்”

எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது.

“பத்துர்ருபாய்க்கு எதுக்குங்க பொய் சொல்றீங்க”

“என்ன சா..ர். நான் எதுக்கு பொய் சொல்லனும்?”

என் மனம் உள்ளே ஓலமிட்டது “பன்றதையும் பன்னிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி எப்புடி நடிக்கிறான் பாரு”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் நேரடியாகவே கேட்டு விட்டேன் “டீ குடிக்க பத்து ரூபா வேணும்னா கேட்டிருக்கலாம்ல. ஜெராக்ஸ் எடுக்க பத்து ரூபா குடுங்கன்னு முன்னயே வாங்கிட்டு போய்ட்டீங்க. மறுபடியும் வந்து பத்து ரூபா கேக்கறீங்க. உங்களுக்கே அசிங்கமா இல்லையா” கேட்ட பிறகு தான் மனதிற்குள் ஒரு நிம்மதி வந்தது.

“அய்யோ அதுவா... நான் உங்க ஊர் எப்எம்பிக்கு பதிலா மாத்தி தூக்கிட்டு போய்ட்டேன். அங்க போய் விரிச்சு பாத்த பெறகுத்தான் தெரிஞ்சது அது புஞ்சபுளியம்பட்டி எப்எம்பின்னு. அடடா மாத்தி எடுத்துட்டு வந்துட்டோம்னு திரும்பி வந்துட்டன்”

“அப்படின்னா எங்கிட்ட வாங்கிட்டு போன அந்த பத்துர்ருபா ஒங்ககிட்டே இருக்கும்ல. இப்ப எதுக்கு மறுபடியும் கேக்கறீங்க?” மடக்கி கேட்டேன்.

ஜெராக்ஸ் கடை
ஜெராக்ஸ் கடை

“சார்.. எப்எம்பி மட்டமில்லாம இந்த காகிதத்தயும் மேடம் கூடுதலா அஞ்சு காப்பி எடுத்துட்டு வர சொல்லியிருக்காங்க” என்று இன்னொரு தாளை என்னிடம் காண்பித்தார்.

அதே சமயத்தில் உள்ளே இருந்த கிராம நிர்வாக அலுவலர் “ஆமா... சார் அந்த டாகுமெண்ட்டோட காபியும் தேவப்படுது” என்றார்.

எனது முகத்தில் அசடு வழிந்ததை நானே உணர்ந்தேன்.

என்னை விட வயதில் மூத்த அவரை “சாரிண்ணே... மன்னிச்சிடுங்க” என்றேன்.

“அட விடுங்க சார்.. இதுக்கெல்லாமா மன்னிப்பு கேக்குவீங்க” என்று சொல்லிவிட்டு நகலெடுக்க நகர்ந்து விட்டார்.

மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும் உள்ளுக்குள் ஏதோ நெளிந்து கொண்டேயிருந்தது. முன்முடிவுகளை முறித்துக் கொள்ள ஆயத்தமானேன்.

-ந.ஜெகதீசன்

சென்னை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.