Published:Updated:

அப்பா-மகன் சென்ட்டிமெண்ட்! | சிறுகதை | My Vikatan

Representational Image

"மே"மாத சென்னை வெய்யில் வேறு மண்டையை தாக்க, அவன் வயிற்றுபசி பத்தும் பறந்திட செய்ய , ஒரு ஆதரவுக்கரம் அவன் தோளை தொட்டது! அவன் ஆவலுடன் திரும்பி பார்க்க, பெருசு ஒண்ணு பரதேசி கோலத்தில் "தர்மம் போடுங்க தம்பி" என கெஞ்ச, இவன் நிலையோ தர்மசங்கடம் ஆனது!

அப்பா-மகன் சென்ட்டிமெண்ட்! | சிறுகதை | My Vikatan

"மே"மாத சென்னை வெய்யில் வேறு மண்டையை தாக்க, அவன் வயிற்றுபசி பத்தும் பறந்திட செய்ய , ஒரு ஆதரவுக்கரம் அவன் தோளை தொட்டது! அவன் ஆவலுடன் திரும்பி பார்க்க, பெருசு ஒண்ணு பரதேசி கோலத்தில் "தர்மம் போடுங்க தம்பி" என கெஞ்ச, இவன் நிலையோ தர்மசங்கடம் ஆனது!

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"சார்! என் பூர்வீகம் முசிறி! ஏழை விவசாய குடும்பம்., சினிமால ஆக்ட்டு பண்றதுக்கு சென்னை வந்தேன். ஆனா பஸ் ஸ்டாண்ட்லயே, கைப்பை, பர்ஸ் என எல்லாத்தையும் ஆட்டைய போட்டுடானுவ! ரெண்டு நாளா கொலப்பட்டினி, வயித்த ரொம்ப பசிக்குது. கைல காசில்ல. இரண்டு இட்லி காபி சாப்டுட்டு போட்டுமா?" என அந்த நடுத்தர ஓட்டல் முதலாளியிடம் , மெல்ல ஏதோ பிரம்ம ரகசியம் பேசுவது போல்..

நம்ம "முசிறி முத்து", தன்மானம் குன்றாமல் பவ்யமாய் விண்ணப்பிக்க!

அந்த புளிமூட்டை மனிதரோ " ஏங்கய்யா, மெதுவடையும், மசால் தோசையும் சேத்து சாப்பிடுங்களேன், பசி இன்னும் நல்லாவே அடங்கும்!" என நையாண்டி நக்கல் செய்து, "எத்தினி பேர்டா இப்டி சென்னைல கவ்ரவ பிச்சை எடுக்க கிளம்பி இருக்கீங்க. இவ்ளோ பெரிய உடம்ப வச்சிக்கினு பிச்ச எடுக்கறிங்களே! உங்களுக்கே இது வெக்கமா இல்ல! எங்கனா போய் கூலி வேலை செஞ்சி உழச்சி சாப்டுங்கடா!" என நீண்ட பிரசங்கம் செய்ய,

அவன் மெல்ல நழுவி, இந்த உபாயம் "வொர்க் அவுட்" ஆகாது என்ற முடிவுக்கு வந்து அடுத்து என்ன செய்யலாம்னு யோசித்தான்.

Representational Image
Representational Image

"மே"மாத சென்னை வெய்யில் வேறு மண்டையை தாக்க, அவன் வயிற்றுபசி பத்தும் பறந்திட செய்ய , ஒரு ஆதரவுக்கரம் அவன் தோளை தொட்டது! அவன் ஆவலுடன் திரும்பி பார்க்க, பெருசு ஒண்ணு பரதேசி கோலத்தில் "தர்மம் போடுங்க தம்பி" என கெஞ்ச, இவன் நிலையோ தர்மசங்கடம் ஆனது!

கருணை பார்வை ஒன்றை மட்டும் அவர் விழியுடன் கலக்க விட்டு , மெல்ல உதட்டை பிதுக்க, அவர் "சரியான சாவு கிராக்கி, கஞ்ச பிசுநாரி" என சபித்து செல்வது ஸ்பஷ்டமாய் அவன் காதில் விழுந்தது!

"முசிறி முத்து" பற்றிய சில தகவல்களை, இக்கட்டதில் வாசகர்கள் தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது!

அவன் பார்ப்பதற்கு "அஜித்" மாதிரி அவ்ளோ அழகாக இல்லாவிட்டாலும், "ஜெய்"மாதிரி சுமாரா இருப்பான்.. அம்மா என்றால் உயிர், அப்பனை கண்டால் ஆகாது (தண்டசோறு, உதவாக்கரை,உருப்படாதவன் என வசவுகள் கேட்டு கேட்டு அலுத்துப் போனதால்). அப்பனிடம் அடிக்கடி போட்டு கொடுப்பதற்காகவே அவதாரம் எடுத்த ஒரு குட்டி தங்கையும் உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், மிகவும் அப்பாவி பேர்வழி, நண்பர்கள் என்ன சொன்னாலும் நம்பி விடுவான், சினிமா பைத்தியம். படிப்பு கிஞ்சித்தும் ஏறவில்லை, அப்பனுக்கு வயல் வேலைகளில் உதவாமல், விட்டேற்றியாய் நண்பர்களுடன் ஊரை சுற்றி பொழுதை கழிப்பவன்.

நட்புகள் அவனை "ஹீரோ" என்று அழைத்து காமடி செய்ய, அதை உண்மை என நம்பி ஹீரோ வாகும் கனவுடன், யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல், வீட்டில் இருந்த

நெல்லு வித்த காசை "அபேஸ்" பண்ணி கொண்டு, கூட இருந்தே குழிபரிக்கும் "சகுனி" நண்பன், கொடுத்த பிரபல சினிமா டைரக்டர் ஒருவரின் பொய் விலாசத்தை வாங்கி கொண்டு,

"வந்தோரை வாழவைக்கும்", "தருமமிகு" சென்னை வந்து சேர்ந்து...

இப்போ சோறு தண்ணி கிடைக்காமல், எப்படி ஊர் போய் சேர்வது என வருந்தி தவிப்பவன்.

Representational Image
Representational Image

"கிட்னி திருடும் கும்பலிடம் மாட்டாமல் (சினிமாவில் வடிவேல் காமடியை பார்த்த ஞாபகம் வர) எப்படியாகிலும் உடனே முசிறி திரும்ப வேண்டும்" என,

தன் குலசாமியாம் "எறும்பீஸ்வரரை" வேண்டியவண்ணம்,.. அவன் கால்கள், அடுத்த ஓட்டல் பக்கம் அனிச்சையாக கூட்டி சென்றன., இம்முறை எந்த விண்ணப்பமும் செய்யாது , உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, பிறகு நிலமையை சமாளிக்கலாம் என சற்றே தைரியத்துடன்,

ஜன நடமாட்டம் மிகுந்த அந்த "பிராம்ணாள்" ஓட்டலுக்குள் , சுற்றி நோட்டமிட்டபடி நுழைகிறான்.

ஒரு மூலையில் நால்வர் அமரும் மேசையில்,வெள்ளையும் சள்ளையுமாய் உடை அணிந்த மூவர் அமர்ந்திருக்க, நான்காவது சீட் காலியாக இருப்பதை கண்டு, அதில் சற்றே சங்கோகஜத்துடன் அமர்ந்தான்.

அவர்கள் ஏதோ பேச்சு சுவாரஸ்யத்தில், இவனை கண்டு கொள்ளவே இல்லை. அம்மூவர் குழு தலைவன், சர்வரிடம் "எல்லாருக்கும் அன்லிமிட்டெட் சாப்பாடு கொண்டாப்பா"என ஆர்டர் பண்ண, அந்த புண்ணியவான் சர்வரோ, முத்துவும் அந்த குழுவில் ஒரு அங்கத்தினர் என சுய அனுமானம் செய்து கொண்டு , இவனுக்கும் ஒரு சாப்பாடு கொண்டு வந்து வைக்கிறான்.

இவனுக்கு நிலமை சற்றே விளங்க தொடங்குகிறது...

"குமாரு ஆண்டவன் நம்ம பக்கம் இருக்காண்டா!" எனும் சினிமா வசனம் அவனுள் அசரீரியாய் ஒலித்தது!

ஆனது ஆகட்டும், என்னவேண்ணா நடக்கட்டும்., இப்போ நமக்கு முன்னால் அறுசுவை உணவு "வாவா சாப்பிடு"என அன்போடுஅழைக்குது, அது போதும்! என்று எண்ணியபடி ஒரு வெட்டு வெட்டுகிறான்!.

அவர்களோ, இவன் ஒருவன் இருக்கும் நினைவே இன்றி ஏதேதோ பிசினஸ் பேசிக்கொண்டு இருந்தார்கள்! இவனுக்கும் சேர்த்து பில் போட்டு, சர்வர், தலைவரிடம் கொடுக்க.. அவர்கள் தங்கள் பேச்சை தொடர்ந்த வண்ணம் , கவுண்டரில் பணம் செலுத்தி வெளியேற, இவனும் அவர்களுடன் அடியொற்றி மெல்ல கடைசி ஆளாக வெளியேற முயலும்போது, மேனஜர் "ஏம்பா ஏம்பா" என இவனை மட்டும் தனியே கூச்சலிட்டு கூப்பிட, சப்தநாடியும் ஒருகணம் அவனுக்கு ஒடுங்கி, அடங்கி போனது...!

நல்லவேளை, அதற்குள் சர்வர் ஓடிவந்து அவனை நெருங்கி "ஏன் சார், ஸ்வீட் பீடாவ விட்டுட்டு போறீங்க.. இது எங்க ஓட்டலோட ஸ்பெஷல் ஐட்டம் சார்!

டேஸ்ட் பண்ணிப்பாருங்க. சூப்பரா இருக்கும்" என கூறி அவன் கையில், ஜர்தாபீடாவை?? திணிக்க, போன உயிரை திருப்பி தந்த "எமதர்மன்" போல் அந்த சர்வர், அவன் கண்ணுக்கு காட்சி தந்தான்.

அம்மூவர் குழு இதை எல்லாம் கவனிக்காமல் ஆட்டோ பிடிப்பதில் ஆர்வம் காட்டினர்.

அன்றிரவு எப்படியோ, "ராக் ஃபோர்ட்" பிடித்து, வித் அவுட்டில் , ஜென்ரல் கம்பார்ட்மெண்டில் ஏறி "கக்கூசிலேயே" பயணம் செய்து, தெய்வாதீனமாக, டீட்டீயிடம் சிக்கி கம்பி எண்ணாமல், அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தான். மலைக்கோட்டை காற்றை

சுவாசித்ததும் அவனுக்கு சுவர்க்கம் கண்டதுபோல் குதூகலம் ஏற்பட்டது. இனிமேலும், மீண்டும் பஸ்சில் 'வித் அவுட்டில்' போய் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று எண்ணி, முசிறிக்கு பொடிநடையாய், நடந்து அந்த அதிகாலை தென்றலை ஆனந்தமாய் அனுபவித்தபடி ஊரை நெருங்கினான்.

அவன் வீட்டை நெருங்க நெருங்க.. "பாவம் அம்மா! என்னை தேடித்தேடி, அழுதுபுலம்பி, எந்த நிலையில் நொந்து பொய் இருப்பார்களோ?

உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் ஏதேனும் சேர்த்திருப்பார்களோ?" என நினைத்த போது, கண்ணில் நீர்முட்டி அழுகை அழுகையாய் வந்தது! மீண்டும் குலசாமியிடம் "அம்மாவுககு ஒண்ணும் ஆகாம நீதாம்ப்பா காப்பாத்தணும்!" என உளமாற வேண்டினான்!

அப்பாவை நினைத்ததும், "அந்த கஞ்சப்படுபாவி, துட்டு திருடியதால் என்ன என்னல்லாம் பாடுபடுத்தபோறானோ? ராட்சஸன்" என பலவாறு எண்ணிய வண்ணம், தன் வீட்டை நெருங்க,..

அம்மாவும் தங்கையும் தெருவில் பேசியபடி கோலமிடுவதை பார்த்து "அப்பாடா அம்மாவுக்கு ஒண்ணும் ஆகல!" என நிம்மதியுடன் வீடு சேர்ந்தான்!

அவனை கண்ட தாய் "எங்கடா ஒழிஞ்ச ரெண்டு நாளா.. உங்கப்பன் உன் நெனப்பாலயே சோறு தண்ணி சாப்டாம, நெஞ்சுவலி வந்து, ஆசுபத்திரிக்கி கூட போக மாட்டேன்னு அடம்புடிச்சிக்கிட்டு, உன் நெனப்பாவே சுருண்டு படுத்து கெடக்கான் பாரு.

உன்ன பெத்ததுக்கு என்ன பாவம் பண்ணமோ!" என ஓவென ஒப்பாரி வைத்தாள்..

Representational Image
Representational Image

அதை கேட்ட அந்த ஒரு நொடி " சே! அப்பாவ நான் எவ்ளோ கேவலமா எடபோட்டு, எப்படி எல்லாம் திட்டி தீர்த்தேன்! அவர் கால என் கண்ணீரால கழுவி மன்னிப்பு கேட்டு

"இனிமே எங்கேயும் போகமாட்டேன்பா, உன் சொல் பேச்ச கேட்டு உனக்கு ஒத்தாசயா உன் கூடவே இருக்கேம்ப்பா" என அவரிடம் பாசமாய் பேச அவன் மனம் எண்ணியது! (ஆனாலும் ,அவன் ஆழ்மனதோ "நெல்லுவித்த காச களவாண்டத இன்னும் இவங்க கண்டுபிடிக்கலயா?"என இவனிடம் வினா எழுப்பியது)

மகன் குரல் கேட்டு, அவன் வீடு திரும்பியத அறிந்த, அந்த பாவப்பட்ட அப்பாவோ, அந்த ஒரு நொடிப்பொழுது," காசு போனா போகுது, எம்மகன் திரும்ப வந்துட்டானே அது போதும்! அவன வாரி அணச்சி, இனிமே உன்ன திட்டவே மாட்டேண்டா!, நீ இல்லன்னா எனக்கு யாருடா இருக்கா! என்ன விட்டுட்டு எங்கேயும் பூடாதடா! " என அவனிடம் கெஞ்சி அழ வேண்டும் என எண்ணியது.

முத்து மெல்ல அவர் அறைக்குள் நுழைந்தான்! தந்தையும் மகனும்.. கண்ணோடு கண் நோக்கினர்... ஆனால் உண்மையில் அங்கு நடந்தது என்ன தெரியுமோ?

தந்தையின் காலை கண்ணீரால் கழுவி மன்னிப்பு கேட்க , ஏனோ முத்துவின் தன்மானம் தடுத்தது!

மகனை வாரி அணைத்து அவனிடம் கெ(கொ)ஞ்சி ஆனந்த கண்ணீர் சிந்த... ஏனோ அவன் தந்தையின் தன்மானமும் தடுத்தது!

இதுதான் பாழாய்ப்போன, ஆண்டவன் அருளிய ..

அப்பன் மகன் சென்டிமெண்ட்டோ?


மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் கண்டிப்பு, வன்மத்தை சேர்ந்தது இல்லை என்று?!

( முற்றும்)

-மரு உடலியங்கியல் பாலா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.