Published:Updated:

'நாக்கு அவுட்' ஐன்ஸ்டீன்! - ஒரு குட்டி ஸ்டோரி

கேமராவை கையில் வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஆர்தர். ஐன்ஸ்டீனை நெருங்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1951. மார்ச் 14.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 72 வது பிறந்த நாள் கொண்டாட்டம், நியூ ஜெர்ஸியின் பிரின்ஸ்டன் சென்டரில் நடந்து கொண்டிருந்தது.

ஐன்ஸ்டீனின் நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் என சிலர் அதில் கலந்து கொண்டனர்.

அனைவரின் கேமராவும் ஐன்ஸ்டீனை விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, எல்லோரும் உற்சாக முகத்துடன் காணப்பட்டனர்.

ஆனால்...UPI ( United Press International ) ல், புகைப்பட நிபுணராக இருந்த ஆர்தர் சச்சே மட்டும் சுற்று பதற்றத்துடன் இருந்தார்.

'நம் பத்திரிக்கையில் வெளியிட, நல்ல புகைப்படம் ஒன்று கூட கேமராவில் சிக்கவில்லையே. விழா வேறு முடிந்து விட்டது. ஐன்ஸ்டீனும் கிளம்பத் தயாராக இருக்கிறார். இப்போது என்ன செய்வது...?'

கேமராவை கையில் வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஆர்தர். ஐன்ஸ்டீனை நெருங்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

கொண்டாட்டத்தின் களைப்பில் இறுகிய முகத்துடன் காரில் ஏறினார் ஐன்ஸ்டீன்.

இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்று படமெடுக்க முடியாது என நினைத்துக் கொண்டே ஐன்ஸ்டீனின் கார் அருகே வேகமாக ஓடினார் ஆர்தர்.

Albert Einstein
Albert Einstein

'சார்...ப்ளீஸ். நான் இன்று உங்களை சரியாக புகைப்படம் எடுக்கவில்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்கிறேன். கொஞ்சம் ஒத்துழைப்பு தாருங்கள்...' என சொல்லியபடியே கேமராவை இயக்கத் தயாராக இருந்தார் ஆர்தர்.

உண்மையில் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் மனநிலையில் அப்போது ஐன்ஸ்டீன் இல்லை.

வெறுப்புடன் கேமராவை அவர் பார்க்க, ஆர்தரின் விரல் கேமராவின் பொத்தானை வேகமாக அழுத்தியது. ஆனால் அந்தப் புகைப்படம் ஆர்தருக்கு திருப்தியைத் தரவில்லை.

மிகவும் பணிவுடன், 'சார்...கொஞ்சம் சிரிக்கலாமே...' என ஐன்ஸ்டீனிடம் ஆர்தர் சொல்ல, அப்போது ஐன்ஸ்டீன் என்ன நினைத்தரோ தெரியவில்லை, திடீரென தனது நாக்கை வெளியே காண்பித்து பின்பு உள்ளே மடெக்கென இழுத்துக் கொண்டார்.

இதை சற்றும் எதிர்பாராத ஆர்தர் திகைத்துப் போய் நிற்க, அவரையே அறியாமல் அந்த நிகழ்வு அப்படியே புகைப்படமாக கேமராவில் பதிவாகியிருந்தது.

அடுத்த நாள் பத்திரிக்கை அலுவலகத்தில் பெரிய விவாதம். இந்தப் புகைப்படத்தை வெளியிடலாமா வேண்டாமா என!

ஆனால் எப்படியோ படம் வெளியாகிவிட்டது.

அடுத்த நாளே இந்தப் புகைப்படம் மூலம் ஆர்தர் மிகவும் பிரபலமானார்.

'ஐன்ஸ்டீன் அப்போது மிகவும் சோர்வாக இருந்தார். இருந்தும் நான் புகைப்படம் எடுத்து விட வேண்டும் என உறுதியாக இருந்தேன். நாக்கை வெளியே நீட்டி அவர் போஸ் கொடுத்தை நான் சற்றும் எதிர்பார்க்க இல்லை. மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து விட்டது...' என ஒரு பேட்டியில் ஆர்தர் சொல்லியிருப்பார்.

ஐன்ஸ்டீனின் குறிப்பிட்ட இந்தப் படம் இன்றளவும் அவருக்கென தனி ஒரு அடையாளத்தை தேடித் தருகிறது.

Albert Einstein
Albert Einstein

உலகம் முழுக்க இருக்கும் பல சிறுவர்களுக்கு ஐன்ஸ்டீன் அறிமுகமாவது இந்தப் படத்தின் மூலம் தான்.

அது சரி, புகைப்படம் வெளியான பின்பு அதைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்னது என்ன?

ஐன்ஸ்டீனை அந்தப் புகைப்படம் மிகவும் கவர்ந்திருக்கிறது. ஆர்தரை தொடர்பு கொண்டு பாராட்டியது மட்டுமல்லாமல், அதன் ஒன்பது பிரதிகளை அனுப்பும்படி கேட்டிருக்கிறார்.

அதில் தன் உருவத்தை மட்டும் தனியாக எடுத்து, கையொப்பமிட்டு நெருங்கிய நண்பர்களுக்கு பரிசளித்திருக்கிறார்.

இன்றும் அந்த பிரதிகளை சிலர் வைத்திருப்பதாக தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. சமீபத்தில் அதில் ஒன்று, இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.

தன்னுடைய எழுபத்து இரண்டாவது பிறந்த நாளில், அதாவது இறப்பதற்கு நான்கு வருடங்கள் முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஐன்ஸ்டீனை அடுத்தடுத்த தலைமுறைக்கு எளிதில் கொண்டு சேர்க்க உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

- சரத்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு