வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"டேய், கல்யாணம் ஆன ஒரு வருஷத்துக்குள்ள நீ நிரம்ப மாறிப் போயிட்டடா சுரேஷ்"- மகனிடம் முறையிட்டாள் அம்மாக்காரி.
" அம்மா! எதையாவது சொல்லணும்னு பேசாதே. என்னத்த மாறிட்டேன் நான்."-மகன் சுரேஷ்
"அதைவேற சொல்லிக்காட்டணுமாக்கும். உன் பெண்டாட்டி எதைச் சொன்னாலும், அதை மின்னலா செய்றே. நான் பத்து முறை சொன்னாலும், காதுல வாங்காம இருக்கற நீ, இப்ப, பெண்டாட்டிச் சொல்லுக்கு பறக்கற. இதைவிட உதாரணமா எதைச் சொல்ல?"-அம்மா
" அம்மா! பேசறதுக்கு முன்னாடி யோசிச்சுப் பேச மாட்டியா? என் பெண்டாட்டி இந்த வீட்டுக்கும், வீட்டுச் சூழ்நிலைக்கும் புதுசு. எது வேண்டுமானாலும், என்கிட்டத்தான் உரிமையா சொல்ல முடியும். இருபத்திரண்டு வருஷம் அம்மா, அப்பா, அண்ணன்கூட வாழ்ந்துட்டு, நிரம்பவும் ஒரு புதிய சூழ்நிலையில் வாழ வந்திருக்கா. சுற்றமும், சூழ்நிலையும் பழகறவரைக்கும், என்னைத்தான் அவ சார்ந்திருக்கணும். இது இயல்பான ஒன்றுதான். "--சுரேஷ்.
"நீ அடிக்கற ஜால்ராக்கு, என் காதே 'ஙொய்'ன்து. நீதான் அவளுக்கு முழு நேர வேலைக்காரன் ஆயிட்டியே, அப்புறம் உன் செயலுக்கு விரிவாக்கம் வேணுமா?"-அம்மா
இவர்கள் இருவர் பேச்சில் அப்பா ரகுராமனும் கலந்துகொண்டார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
" என்ன பிரச்னை உங்க இரண்டு பேருக்கும்?"--ரகுராமன்.
"என்னடா இன்னும் பஞ்சாயத்துத் தலைவரைக் காணலையேன்னுப் பார்த்தேன். எல்லாம் நம்ம பிள்ளையாண்டான் சங்கதிதான். அவன் பெண்டாட்டிதாசனா மாறிட்டானேன்னு சொல்லிக்கிட்டிருக்கேன், நீங்களும் வந்துட்டீங்க."-அம்மா
"அதுல என்ன தப்பிருக்கன்னு எனக்குத் தெரியல."- அப்பா ரகுராமன்
"அதானே, உங்களமாதிரிதானே உங்க பிள்ளையும் இருப்பான். "-அம்மா
" நன்றி. நீயே எனக்காதரவா பேசிட்டே. நான் என் மனைவிக்கு ஜால்ராவா இருக்கேன். என் மகன் என்னைமாதிரியே அவன் மனைவிக்கு ஜால்ராவா இருக்கான். இன்னும் சொல்லப்போனால், நம்மோட மருமகன், அவரோட மனைவிக்கு, அதான் நம்ம மகளுக்கு சரியான ஜால்ராவா இருக்காருன்னு, சம்மந்தியம்மா ஏற்கெனவே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. அதனால இது வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயம்னு நினைச்சி, பெருந்தன்மையா, பெரியவங்க நடந்துக்கணும். புதியதாகக் கல்யாணமானவங்க நெருக்கமாகவும், ஒருவர் பேச்சை ஒருவர் கேட்பவராகவும் இருப்பது இயல்பு. அதைக் கண்டும் காணாததுபோல், இருப்பதும் பெரியவர்களிடத்தில் இருக்க வேண்டிய குணம். பொறுமை இழக்கும்போது, குடும்பம் இரண்டுபடுவது தவிர்க்க இயலாது. யாருக்கு யார் ஜால்ராவாக இருக்கிறார்கள் என்பது இங்கே முக்கியமில்லை. உறவுக்கு கை கொடுப்பதுதான் முக்கியம். உறவைப் பலப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். அதில் மாமியார் என்ன, மருமகள் என்ன, இருவருக்குமே சமபங்கு உண்டு. நான் சொல்றது உனக்குப் புரியுதா?"- ரகுராமன்.
" இந்த வீட்டுக்கு வாழ வந்த நாளிலிருந்து, இந்த நாள் வரை, எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. புதியதாக புரியவேண்டியது எதுவுமில்லை. உங்களுக்கும், உங்கள் மகனுக்கும், உங்கள் மருமகளுக்கும்தான் எல்லாம் புரியணும்" - அம்மாக்காரி பதில் சொல்லிவிட்டு, கணவன் ரகுராமனை முறைத்துக்கொண்டே சென்றாள்.
மகன் சுரேஷ் பரிதாபமாகத் தெரிந்தான்.
-கேசவ் பல்ராம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.