காலைஅலுவலகத்திற்கு கிளம்பும் நேரம்... மொபைல் போன் ரிங் ஆனது. எடுத்து பேசினேன்.
``ஹலோ சார்.. நான் சங்கீதா பேசுறேன்’’ (எனது ஜூனியர்).
``சொல்லுமா’’ என்றேன்.
``விவாகரத்து விஷயமா உங்ககிட்ட பேச வேண்டி கணவன் மனைவி வந்து இருக்காங்க. அவர்களை நீங்க இன்று வர சொல்லி இருந்தீங்களாம்’’ என்றாள்.
`` ஓ ஆமா. நான்தான் வரச் சொல்லியிருந்தேன். அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுமா. கொஞ்ச நேரத்தில் நான் வந்துட்றேன்’’ என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன்.
பொதுவாக என்னிடம் விவாகரத்து விஷயமாக யார் வந்தாலும், கணவன் மனைவி இருவரையும் வரவழைத்து அவர்களிடம் பேசி சமாதானம் செய்து வைக்கவே விரும்புவேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு. நான் சிறுவனாக இருந்த பொழுது என் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின்பு சிறிது காலத்தில் எனது தந்தை வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு போய் விட்டார். அம்மா மட்டும் தனியாக என்னை வளர்த்தாள்.

அம்மா தனியார் பள்ளி ஆசிரியை. கஷ்டப்பட்டு என்னை வளர்த்து எம்.ஏ.பி.எல் படிக்க வைத்தாள். ஆம். நான் ராகவன். எம்.ஏ.பி.எல். வழக்கறிஞர். டேய் சாப்பிட்டுவிட்டு போடா... என்று அம்மாவின் குரல் வர, இல்லம்மா அவசர வேலை. பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினேன். அலுவலகத்தில்... கணவன், மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயது பெண் குழந்தை எனக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநான் என் அறைக்குள் சென்று என் இருக்கையில் அமர்ந்த பிறகு, சங்கீதாவை அழைத்து முதலில் கணவரை மட்டும் உள்ளே அனுப்புமாறு கூறினேன். கணவர் வந்தார்.
``வாங்க ..உட்காருங்க'' என்றேன்.
உட்கார்ந்த பிறகு பேச ஆரம்பித்தார்.
``சார்.. நான் போன வாரம் உங்ககிட்ட வந்து இருந்தேனே... விவாகரத்து விஷயமா... நீங்க குடும்பத்தை அழைத்துவர சொன்னீங்க.. அழைச்சிட்டு வந்திருக்கேன்’’ என்றார்.
``ஆமாம் எனக்கு ஞாபகம் இருக்கு. முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்க’’ என்றேன்.
`` என் பெயர் பரத். தனியார் கம்பெனியில் மேனேஜரா இருக்கேன். மனைவி பெயர் ஷெரின். அவளும் தனியார் கம்பெனியில் வேலை செய்யுறா. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவங்க.

காதலிச்சு திருமணம் செய்துக்கிட்டோம். எங்க திருமணத்தை இருவீட்டாரும் ஏத்துக்கல. அதனால் நாங்க தனியா வந்துட்டோம். ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை நல்லா தான் போச்சு.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் என் மனைவி வேலைக்குச் போக ஆரம்பித்தாள். கொஞ்ச நாள் போனப் பிறகு என்கிட்ட அவ சரியா பேசுவது கூட இல்ல. ஸ்கூலுக்கு சென்றுவரும் குழந்தையை கூட சரியாக கவனிப்பதில்ல. நான் அதைப்பத்தி கேட்டா.. ஏன் நீ கவனிச்சிக்க மாட்டியா? என்று திருப்பி என்னையே கேட்கிறா. ஏதாவது சொன்னால்.. நானும் சம்பாதிக்கிறேன். எனக்கும் என் இஷ்டம் போல வாழ உரிமை இருக்கு என்கிறாள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வீட்டில் தினம் தினம் சண்டை தான். நான் எதைச் சொன்னாலும் அவள் கேட்பதில்லை’’ என்று தொடங்கி எல்லா தவறுமே தன் மனைவி மீதுதான் என்பதுபோல குறைகளை கூறிக்கொண்டே வந்தார். அவர் கூறிய அனைத்தையும் நான் அமைதியாக கேட்டுக் கொண்டேன். பின்பு அவரை வெளியே அமருங்கள் என்று கூறிவிட்டு அவரின் மனைவியை அழைத்து... சொல்லுங்கம்மா... என்ன பிரச்சனை? என்று கேட்டேன்.
அவர் பேச ஆரம்பித்தார்.
``நாங்கள் தனியாக வந்து வாழத் தொடங்கிய பிறகு அவர் ஒருவரின் சம்பாத்தியம் மட்டுமே பத்தாது என்று புரிந்து நானும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.
என் சம்பாத்தியத்தை சேர்த்து வைத்தால்தானே நாளை குழந்தைக்கு ஏதாவது செய்ய முடியும்... அதை அவர் புரிந்து கொள்வதே இல்லை. காலையில் சமையல் செய்து வைத்துவிட்டு அலுவலகம் சென்று மாலை சோர்வுடன் வீடு திரும்பினால், இவரும் என் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல், குழந்தையை சரியாக கவனித்துக் கொள்வதில்லை... என்று ஆரம்பித்து பல குறைகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார். தினம் தினம் சண்டை தான். அலுவலக டென்ஷனில் நான் வீட்டிற்கு வந்தால், வீட்டில் ஓய்வு எடுக்க கூட முடியவில்லை. இவரிடம் சண்டை போடவே நேரம் சரியாக இருக்கிறது நான் வேலைக்குச் செல்வதே இவருக்காகவும் எங்கள் குழந்தைக்காகவும் தானே...’’ என்று கூறி அழத் தொடங்கி விட்டார்... அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு பின்பு அவரது கணவரையும் உள்ளே வரவழைத்தேன்.

பின்பு இருவரையும் அமரவைத்து நான் பேச ஆரம்பித்தேன்... ``நீங்கள் விவாகரத்து கேட்டு இங்கே வந்துள்ளீர்கள். ஆனால் குடும்பத்தை பிரிப்பதற்காக இங்கு நான் வரவில்லை. ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறீர்கள். அலுவலகச் சூழ்நிலை உங்களை சண்டையிட வைக்கிறது. நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது இல்லை. அதற்கு உங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த பின்பு, நீங்கள் வீட்டைப் பற்றிதான் சிந்திக்க வேண்டுமே தவிர, அலுவலகத்தைப் பற்றி அல்ல.
நீங்கள் அலுவலகத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் வீட்டை யார் கவனித்துக் கொள்வது? இன்றைய சூழ்நிலையில் இருவரும் வேலைக்குச் செல்வது சரியானதுதான். ஆனால் அதற்காக உங்கள் சந்தோஷத்தை இழக்கக்கூடாது. நீங்கள் மனம் விட்டுப் பேசுங்கள். குழந்தையை கொஞ்சுங்கள். நீங்கள் பிரிந்து விட்டால், உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்துப் பார்த்தீர்களா? பெற்றோரில் ஒருவரை இழந்தாலும், குழந்தையின் மனநிலை எந்த அளவு பாதிக்கும் என்பதை நான் நன்கறிவேன்.

மிஸ்டர் பரத்.. குழந்தையை கவனிப்பது தாயின் கடமை மட்டுமல்ல. அது தந்தையின் கடமையும் கூட. உங்கள் மனைவியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு நீங்கள் அவருக்கு உதவ வேண்டுமே தவிர, குறை கூறி கொண்டிருக்கக் கூடாது. உங்கள் குழந்தையின் எதிர்காலம் கருத்தில்கொண்டு நீங்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்’’ என்று கூறினேன்.
அனைத்தையும் அமைதியாக கேட்ட பின்பு, அவர்களின் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. சரிங்க சார்.. இனி நாங்கள் விட்டுக் கொடுத்து வாழ்கிறோம் என்று கூறிவிட்டு அவர்கள் கிளம்பினர். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதே புரியாமல் உட்கார்ந்திருந்த அவர்களின் பெண் குழந்தை தன் அழகான சிரிப்பை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றது. சாப்பிட்டுவிட்டு போடா என்று அம்மா சொன்னது நினைவுக்கு வர, உடனே வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில்... அம்மா சோகமாக உட்கார்ந்து இருந்தாள். என்னை பார்த்ததும் எழுந்து வந்து சாப்பாட்டைப் பரிமாறினாள் மகிழ்ச்சியுடன்... இன்று நான் அவர்களுக்கு அறிவுரை சொன்னதைப்போல, எனது தாய் தந்தைக்கு யாராவது அறிவுரை சொல்லி இருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! என மனது ஏங்குகிறது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.