Published:Updated:

மாற்றம்! | குட்டி ஸ்டோரி | My Vikatan

Representational Image

தீபாவளியன்று அதிகாலை வாசலுக்கு வந்தபோது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

மாற்றம்! | குட்டி ஸ்டோரி | My Vikatan

தீபாவளியன்று அதிகாலை வாசலுக்கு வந்தபோது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நீண்ட நாட்களாகவே பக்கத்து வீட்டு அம்மணிக்கும், மனைவிக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. பெரிய விசயம் ஒன்றும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் மனைவி வாசல் கூட்டும் போது கூட்டிய குப்பைகளை தன் வீட்டு வாசலில் தள்ளுவதாக மனைவியின் புகார். ஆனால் கண்ணால் ஒரு முறை கூட அதைப் பார்க்காததால், நேரடிச் சண்டை நடக்கவில்லை.

Representational Image
Representational Image

தீபாவளியன்று அதிகாலை வாசலுக்கு வந்தபோது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ' பர்க் பரக்கென்று மனைவி பக்கத்து வீட்டு வாசலில் இருந்த குப்பைகளை தன் வீட்டு வாசலுக்கு தள்ளிக் கொண்டிருந்தார். அவ்வப்போது தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்றும் சுற்று முற்றும் திருட்டுத்தனமாக லுக் விடத் தவறவில்லை.

உள்ளே வந்தவுடன் கேட்டதற்கு கிசு கிசுப்பாக கூறினார்,

' நம் வீட்டை விட அவங்க வீட்டு வாசலில் பட்டாசு காகிதம் நிறைய கிடக்கிறது. பாக்கறவங்க அவங்க அதிகமா பட்டாசு வெடிச்சதா நினைப்பாங்க. அதுக்குத்தான்....'.

முற்றும்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.