Published:Updated:

அப்பாவின் பக்கங்கள்! - சிறுகதை

Representational Image

தேங்க்ஸ் கோச்.. but எங்க அப்பாக்கிட்ட எப்படி சொல்றது, எந்தமாதிரி சப்போர்ட் கிடைக்கும் தெரியல, அவரு நினைச்சு நினைச்சு ஒன்னு பேசுவாரு, அதுவும் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி டக்குனு மாத்துவாரு, நமக்கு பைத்தியமே பிடிச்சிரும் கோச்.. இதில் வீட்டு சூழ்நிலை வேற..என்று ராம் பேச பேச..

அப்பாவின் பக்கங்கள்! - சிறுகதை

தேங்க்ஸ் கோச்.. but எங்க அப்பாக்கிட்ட எப்படி சொல்றது, எந்தமாதிரி சப்போர்ட் கிடைக்கும் தெரியல, அவரு நினைச்சு நினைச்சு ஒன்னு பேசுவாரு, அதுவும் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி டக்குனு மாத்துவாரு, நமக்கு பைத்தியமே பிடிச்சிரும் கோச்.. இதில் வீட்டு சூழ்நிலை வேற..என்று ராம் பேச பேச..

Published:Updated:
Representational Image

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நடுத்தர குடும்பம், அப்பா சீரியஸாக டிவி பார்த்து கொண்டே, ச்சே, நம்பாளுங்க சொதப்புறாங்க, என்னத்த சொல்லறது... TV பாக்கவே கடுப்பா இருக்கு. அருகில் ராம், அப்பாவுடன் டிவி பார்த்து கொண்டே, வினாடிக்கு வினாடி மொபைல் போன் எடுத்து பார்த்து கொண்டே இருந்தான், இன்னொரு கையில் நகம் கடித்து கொன்டு, திருட்டுத்தனமாக அப்பாவையும், டீவியும், பார்த்து கொண்டே இருந்தான்..

அப்பா,

என்னடா ராம் ஏதோ டென்ஷனா இருக்க..

ஒன்னும் இல்லப்பா..

ஹ்ம்ம், என்ன எக்ஸாம் ரிசல்ட் வருதா இல்ல, எதுனா பிரச்சனையா... ஒன்னும் இல்லப்பா.... ராமை, மேலும், கீழுமாக அப்பா பார்த்து கொண்டே, ராமின் அம்மாவிடம் எவ்ளோ நேரம்டி, இன்னும் காபி கொண்டு வர என்று கத்த, உள்ளே ராமின் அம்மா கிச்சேனலிர்ந்து, வரேன் வரேன் என்று உரைக்கு சொல்லிவிட்டு, பிறகு தனக்குளே முனகி கொண்டால், அடுப்புலேந்து அப்படியே கொண்டு வரமுடியுமா என்ன, பால் காய வேண்டாம், உக்காந்தா இடத்தை விட்டு நகரதில்ல, எல்லாம் இடம் தேடி வரணும், இது வீடா இல்ல ஹோட்டலா.. பேசுனா சண்டை வரும், திருத்தவே முடியாது..என்று சொல்லி கொண்டே, வேகமாக ராம்கும், அப்பாவிற்கும் காபி கொண்டு வந்தார்..

Representational Image
Representational Image

அப்பா, கையில் வைத்து கொண்டே,

ஏன்டா ராம், நம்பாளுங்க ஏன்டா ஸ்போர்ட்ஸ்ல பெருசா ஜெய்க்கறதில்ல, நீ கூட athlete போறியே என்னாச்சு..

போய்கிட்டு இருக்குப்பா..

ஹ்ம்ம்..குட்..

என்னத்த போய் என்ன பண்றது, மத்த ஊர்ல ஸ்போர்ட்ஸ் நிறையா முக்கியத்துவம் இருக்கு, ஆனா நம்பூர்ல வாரத்துல ஒரு PT பீரியட், சில சமயம் அதையும், maths டீச்சர்ஸ் கடன் வாங்கி வந்துறாங்க, அப்பறம் எங்கத போய் ஸ்போர்ட்ஸ் வளரும்..நூறு பேர் போன, ரெண்டு பேர் கப் வாங்கிட்டு வராங்க.. வீட்டுல பெருசா சப்போர்ட் பண்றது இல்ல, எல்லாத்துக்கும் மேல விளையாட்டுல அரசியல், ரெகமெண்டஷன். ஒன்னும், உறுபடறதுக்கில்ல..

என்று அப்பா பேசி கொண்டே இருக்க, ஒரு புறம் ராமிற்கு சந்தோசம் அப்பா சப்போர்ட் கிடைக்கும் அடுத்த லெவல் போக., மறுபுறம் டென்ஷன் எதிர்பார்த்த போன் கால். மெதுவாக, அம்மா, ராமை கிச்சனுக்கு கூப்பிட்டு,

டேய் ராம்,

உங்க அப்பா குடிகாரன் மாறி, மாத்தி மாத்தி பேசுவாரு, இப்போ ஸ்போர்ட்ஸ் சேனல் பாக்கறாரு, அதனால ஸ்போர்ட்ஸ் அது, எது டயலாக் வரும், அடுத்து சினிமா பக்கம் போய்டுவாரு.. எந்த சேனல், என்ன வருதோ அத பத்தி பேசுவாரு.. நீ சீரியசா எடுத்து கிட்டு உளறிவைக்காத..

ஹ்ம்ம்ம்.. சரிம்மா..

டேய் ராம், ஆல் தி பெஸ்ட்..

ராம் சிரிச்சுகிட்டே, தேங்க்ஸ் அம்மா..

உள்ளே, பேசி கொண்டு இருக்க, வெளிய ராம் போன் ரிங் அடிக்கிறது பாட்டுடன், "எதிர் நீச்சலடி, ஜாலியா வாலி சொன்னதடி",

அப்பா, ஹால்ல இருந்து

டேய் ராம், ரொம்ப நேரமா போன் அடிக்குது.. என்று சொல்ல, பதறி அடித்து கொண்டு ராம் வெளியே ஓடி வர வர. அதை பார்த்த அப்பா, டேய் ஏன்டா, மெதுவாடா, போன் என்ன, ரெக்கை முளைச்சு பறக்கவா போது.. ராம் வருவதற்கும், போன் கட்டாவதும் சரியாக இருந்தது.. யாருடா போன்-ல என்று அப்பா கேட்டவுடன், திரு திருவென்று முழித்து கொண்டே, அது வந்து என்று இழுக்க, மறுபடியும் அதே கால்..ராம் போன் எடுத்து கொண்டு வெளியே வந்து, ஹலோ என்று சொன்னதும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுமுனையில்,

ஹலோ ராம், என்ன பிஸியா, போன் எடுக்கல என்று சொன்னதும்.

சாரி கோச், ஒரு சின்ன வேலை..

ஹ்ம்ம் ஓகே ராம்.. ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கால் பண்ணினேன்.

சொல்லுங்க கோச், உங்க போனுக்குதான் வெயிட் பண்றேன்.

ஹாஹாஹா என்று கோச் சிரித்துக்கொண்டே.. ராம், ஒரு குட் நியூஸ், நம்ப டீம்ல நீ மட்டும் தான் தமிழ்நாட்டுக்காக விளையாட செலக்ட் ஆகி இருக்க, but இனிமே தான் நீ ரொம்ப கவனமா இருக்கனும், உன்னோட ப்ராக்டிஸ் பண்ற டைம், இன்னும் அதிக படுத்தனும், அதுவும் இல்லாம, மென்டலா, பிசிக்கலா ரொம்ப சீரியஸா கவனம் செலுத்தணும். ஏன்னா, இனிமே தான் நிறையா பிரச்சனை வரும் வீட்டுல, வெளியில அரசியல், sponsor புடிக்கணும். இதுக்கும் மேல, பல ஊர்லேந்து விளையாட வருவாங்க, எல்லாரும் பல strategy வெச்சுக்கிட்டு வருவாங்க, எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும், இந்தியன் டீம் போகணும்னா, பல ஸ்டேட்ல இருந்து வருவாங்க, உன்னோட உழைப்ப அதிக படுத்தனும், இது போதாது. இதற்கு அப்பறம், உன்னோட முழு கவனமும், ஸ்போர்ட்ஸ்ல மட்டும் இருக்கனும்..

வெரி சிம்பிள், practice practice practice

அதற்கு ராம்,

தேங்க்ஸ் கோச்.. but எங்க அப்பாக்கிட்ட எப்படி சொல்றது, எந்தமாதிரி சப்போர்ட் கிடைக்கும் தெரியல, அவரு நினைச்சு நினைச்சு ஒன்னு பேசுவாரு, அதுவும் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி டக்குனு மாத்துவாரு, நமக்கு பைத்தியமே பிடிச்சிரும் கோச்.. இதில் வீட்டு சூழ்நிலை வேற..என்று ராம் பேச பேச,

உடனே கோச் டக்கென்று,

ராம், வர வர காரணம் சொல்ல கத்துக்கிட்ட, இது நல்ல ஸ்போர்ட்ஸ்மேனுக்கு அழகில்லை. .உன் வீட்டு பிரச்சனையா, நீதான் சமாளிக்கணும், உனக்கு வேணுங்கறது, நீ தான் தேடணும், நீ தான் கேட்கணும், நீ தான் பேசணும்.. உன் பிரச்சனைக்கு பேச, வாடகைக்கு வாய் தேடாத.. ஆல் தி பெஸ்ட் என்று சொல்ல..

ராம், கோச் ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் என்று சொல், போன் கட்டானது.

Representational Image
Representational Image

ராம், என்ன செய்வதறியாது, ஒரு நொடி மிகுந்த குழப்பத்துடன், மெதுவாக வீட்டுக்குள் வர..

அப்பா,

என்னடா ராம் ! மூஞ்சில ஏகப்பட்ட குழப்பம், சரியில்லையே என்று பேச. நேராக கிச்சனுக்குள் சென்ற ராம், முதலில் அம்மாவிடம்,

அம்மா,

நான் தமிழ்நாடு டீம்ல செலக்ட் ஆயிட்டேன். நம்ம ஊர்ல நான் மட்டும் தான் செலக்ட் ஆகியிருக்கேன். ஆனா, கோச் போன்ல பேசுறப்போ இனிமே, நிறையா நேரம் practice பண்ணனும், படிப்பை ஓரங்கட்டிட்டு இதை பாரு, கண்டிப்பா இந்தியன் டீமுக்கு நீ விளையாடுவ சொன்னாரு.

அதற்கு அம்மா,

சூப்பர் டா ராம். எனக்கு ரொம்ப ஹாப்பி.. செம ஹாப்பி என்று சொல்லி கொண்டே, ஒரு வினாடி பதறிக்கொண்டு, ஸ்வீட்க்கூட இல்ல, டேய் ராம், இந்த சர்க்கரை வாயில போடு என்று சொல்ல,

ஐயோ! அம்மா இப்போ அப்பாக்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்கிறது. அதை சொல்லாம, சர்க்கரையை போடு, அதை போடுன்னு சொல்லற..ஏற்கனவே, காலேஜ்ல attendance கம்மி, மார்க் கம்மி, அதுக்கே கத்தறாரு..இதெல்ல இதை சொன்னேன்.. அவ்ளோதான்..

அம்மா, சிரிச்சுக்கொண்டே.

ராம், முதல பிரச்சனையா ஓரங்கட்டு, அது இருந்துக்கிட்டே தான் இருக்கும். அதுக்காக சின்ன சின்ன தருணங்கள் இழக்க கூடாது, முதல இந்த ஊர்லயே யார்க்கும் கிடைக்காத வெற்றி உனக்குடா, அதை கொண்டாடு. இந்த நொடிக்கு உண்மையா இரு, திரும்ப அது வராது, நீ நேசிக்கிற விஷயம் கண்டிப்பா உன்ன தேடி வரும் என்று motivation சொல்ல, ராம்க்கு கொஞ்சம் தெம்பு வந்து.

உடனே, ராம் அம்மாவிடம்,

தேங்க்ஸ் அம்மா, நான் போய் அப்பாக்கிட்ட பேசறேன், என்று சொல்லி நகர..அம்மா டக்கென்று ராமின் கையை பிடித்து, முதல சர்க்கரை சாப்பிடு, அப்பறம் போ..

ஏன்னா, எந்தவொரு நல்ல விஷயத்துக்கு முன்னாடி, அம்மா ஸ்வீட் சாப்பிட சொல்லி கொடுத்துருக்காங்க என்று கோரஸாக சொல்லி இருவரும் சிரிக்க. ராம் சர்க்கரை சாப்பிட்டு கொண்டே, மெதுவாக வெளியே வந்து..

அப்பா, உங்க கிட்ட கொஞ்ச பேசணும்,

அதற்க்கு அப்பா, கொஞ்சமென நிறையா பேசுடா..

ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் என்று மெதுவாக கனைத்து கொண்டே, அப்பா என்று ராம் இழுக்க.

அப்பா, உடனே..

ராம் முதல இந்த தண்ணிய குடி. போன் வந்ததுலேர்ந்து மூஞ்சி சரியில்லை. என்னடி ஆச்சு இவனுக்கு, கிச்சனுக்கு வந்து உன்காத கடிச்சுக்கிட்டு இருந்தான். என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்.. தோளுக்கு மேல வளர்ந்தா, friend மாறி. ஜவ்வு மாறி இழுக்கமா, பேசு..பேசிட்டு அடுத்த வேலைய பார்க்க போலாம்ல என்று பேசிக்கொண்டே அப்பா மொபைல் போனினை கையில் எடுத்து அப்படியே பார்த்து கொண்டு இருக்க, ஒரு புறம் ராம் என்னடா பண்றது, என்னத்த பேசறது, எப்படி ஆரம்பிக்கறது, இவரு பேசறது பார்த்தா என்ன மூட்ல இருக்காருன்னே தெரியல.

Representational Image
Representational Image

தலைக்குள்ளே, ஆயிரம் புழுவை ஓட விட்ட மாதிரி இருக்கு என்று தனக்குள்ளே முனகி கொண்டு, அம்மாவை கிச்சனில் எட்டி பார்க்க, அம்மா சமையல் வேலையில் பிஸியாக இருக்க, ராம் வினாடிக்கு வினாடி கிச்சனை பார்த்து கொண்டு இருக்க, அப்பா சட்டென்று, ராம் பசிக்குதா ? என்கிட்ட பேசணும் சொல்லிட்டு கிச்சன் பாக்கற..என்று சொன்னதும் டக்கென்று அம்மா ராமை பார்த்து..பேசு பேசு, தைரியமா பேசு என்று அங்கிருந்து சிக்னல் தர, அப்பா மெதுவாக..ரெண்டு பெரும் சிக்னல் செய்யறதெல்லாம் போதும்.. விஷயத்துக்கு வாங்க...நான் அடுத்த வேலைய பார்க்க போகணும், ஆபீஸ்லேர்ந்து வேற கால், இந்த நேரத்துல எதுக்குன்னு வேற தெரியல.. சரி சொல்லுடா என்று மறுபடியும் இழுக்க..

ராம்..திரும்பவும்..

அப்பா அது வந்து..

கிச்சனலில், இதை பார்த்த ராமின் அம்மா டென்ஷன் ஆகி, சட்டென்று வெளியே வந்து...

டேய், ராம்.. எதுக்குடா பயப்படற. நான் இல்ல இருபது வருஷமா. என்னடா ஸ்போர்ட்ஸ்மென் நீ... எனக்கே அசிங்கமா இருக்கு.. ராம், ஒரு வினாடி திரு திருவென்று அம்மாவையும், அப்பாவையும் மாறி மாறி பார்த்து கொண்டே. அம்மா! சும்மா இரு என்று முனக.. அப்பாவோ, இவளுக்கு என்னாச்சு, நல்லாதானே இருந்தா...உனக்கு என்னாச்சுடி, என்று ஒரு புறம் கேட்க, அம்மா, எதையும் கண்டுகொள்ளவில்லை... அப்பாக்கிட்ட சின்ன சின்ன விஷயத்துக்கு மனசு விட்டு பேச தயங்குனா, உன்னால ஒன்னும் சாதிக்க முடியாது, உனக்கு போய் வாயில சர்க்கரை போட்டேன் பாரு, என்ன சொல்லணும்.

அப்பா, அம்மாவையே பார்த்து கொண்டு இருக்க..ராமின் அம்மா, சட்டென்று ராமை பார்த்து, இங்க பாருடா நீ சாதிச்சுட்டு வந்துருக்க,

அப்பாக்கிட்ட, ஒரு சாக்லேட் கொடுத்து, அப்பா, athlete-ல, தமிழ்நாடு டீம்ல நான் செலக்ட் ஆயிட்டேன். இப்போதான் கோச் போன்ல சொன்னாரு, இனிமே அதிக நேரம் practice பண்ணனும், படிப்புல என்ன ரொம்ப எதிர்பாக்காதீங்க, நான் ஸ்போர்ட்ஸ்-ல win பண்ணுவேன் அப்படி சொல்ல உனக்கு என்னடா பிரச்சனை என்று வேகமாக பேசிவிட்டு, இப்போ பேசுடா என்று சொல்லி எதுவும், நடக்காதது போல், கிச்சனுக்குள் அம்மா சென்று விட, அப்பாக்கு தெளிவாக புரிந்தது..ராம் ஒரு வித தயக்கத்துடன், அப்பாவை பார்த்து கொண்டு இருக்க...

சில வினாடிகள், அப்பா பேசவில்லை..

மெதுவாக, அப்பா ராமை பார்த்து,

வாழ்த்துக்கள் டா ராம்...எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்று சொல்லி தோளில் தட்டிக்கொடுத்து, சில நொடிகள் ராமிற்கு ஏகப்பட்ட சந்தோசம், இருந்தாலும் வெளியே சிறு புன்னகை மட்டும் தயக்கத்தோடு..

அப்பா, ராமிடம்..

நீ சொன்ன உடனே, எனக்கு எண்ண ரியாக்ஷன் கொடுக்கறது தெரில ராம், அம்மா உனக்கு சர்க்கரை தந்தாங்க, எனக்கு எண்ண தரது தெரியல. ஆனா, உனக்கு ஏன் இவ்ளோ தயக்கம் என்கிட்ட பேச..

எனக்கு எப்போதும், நீ சின்ன பையன்தான், எனக்கு மட்டும் இல்ல ராம். எல்லா அப்பாக்களுக்கும் அவங்களோட பசங்க குழந்தையா தான் தெரிவாங்க. நீ வளர்ந்துட்ட அப்படிங்கறதே, ஏத்துக்க முடில.. ஏன்னா, கண்ண மூடினா, அப்பப்போ, உன்னோட சின்ன வயசு தருணங்கள் தான் எங்களை உயிரோடவே வைக்குது. எப்போதும் நீ எனக்கு சின்ன பையன்தான், அடிக்கடி அடம் பிடிச்சு, வேணுங்கறது வாங்கறது, அந்த நாள் அவ்ளோ அழகா இருக்கும். அதை, இப்போ நினைச்சாலும், மனசு முழுசா நிறைஞ்ச மாதிரி இருக்கும்..இந்த உலகத்துல நாம விட்டுட்டு போறதே, அழகான தருணங்கள் தானே..என்று அப்பா பேச பேச, ராமிற்கு ஒரு புறம் லேசாக கண் கலங்கியது தன் பழைய நினைவுகளுடன்.

அப்பா தொடர்ந்து, கடவுள் எல்லாத்துக்கும் பிளான் வெச்சுருப்பாரு, to shape a boy into a man . நீ எப்போ அழறியோ, உனக்கே தெரியாம உன் கைய பின்னாடி பிடிச்சுக்கிட்டு இருப்பேன். எப்பெல்லாம் சொல்ற பேச்ச கேட்கலையோ, கண்டிப்பா திட்டுருப்பேன். நீ விழுந்தாலும், எந்திரிச்சுவிடுவன்னு ஒரு நம்பிக்கை. நீ எங்க போனாலும், உன் பின்னாடி நான் இருப்பேன். அது உனக்கே தெரியாது ராம்..அதாண்டா அப்பா.

Representational Image
Representational Image

ஆனா உன் வெற்றியை நினைச்சு பெருமை தாண்டா படுவேன்.. போராடு. ஆனா, ஜெயிச்சுடு ராம்.. இதோட நிறுத்தாத. வெற்றிக்கு எல்லையில்லை, தோல்விக்கு உண்டு...தன்னம்பிக்கை இருக்கற இடத்துல, ஆறுதலுக்கு வேலை இல்லை..

ஆல் தி பெஸ்ட் என்று சொல்லி அப்பா எந்திரிச்சு போக.

ராம் இடத்தை விட்டு நகராமல் அப்படியே அழுது கொண்டு இருக்க..

அம்மா அருகில் வந்து தலைகோதி விட்டு முத்தம் தந்ததும் ராமின் கண்ணீர் அதிகமானது..

தலையை தொட்டு பார்க்க, அங்கே அம்மாவின் கையுமில்லை. மெதுவாக, திரும்பி பார்க்க, அங்கே அவர்களுடைய புகைப்படம்.. அதில் கூட, அம்மா ராமிடம் சாப்டியாடா, அப்பாவும் இன்னும் practice போலையாடா என்று கேட்பதுபோல் இருந்தது..

மிஸ் யு அப்பா, மிஸ் யு அம்மா..

பேசக்கூடிய வாய்ப்பு இருந்தும், பல தருணங்கள் விட்டுட்டேன்..பேசணும் நினைக்கற அப்போ, நீங்க இல்லை..கூட இருக்கறப்போ அருமை யாருக்குமே தெரியறதில்லை..

என்னோட குழந்தையை, என்கிட்ட மனசு விட்டு பேச, ஒரு நல்ல அப்பாவா, இல்லை இல்லை ஒரு நண்பனா இருப்பேன்...

யாருக்காவது,

அப்பா, அம்மா கூட இல்லனா, யார்கிட்டயாவது மனச விட்டு பேச நினைக்கற அப்பல்லாம் பேசிடுங்க, திரும்ப அதே நேரம் கிடைக்குமா தெரியாது, அதே மனிதர்கள் இருப்பாங்களாம்னும் தெரியாது.

கலங்கிய கண்களுடன் ராம், அப்பாவின் பக்கங்கள் எழுதிய தனது My Kids Diary இணையதளத்தை மூடி வைத்துவிட்டு, shoe லேஸ் போடும் போது, ராமின் போன் அடிக்கிறது,

"தெய்வங்கள் எல்லாம், தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே,"

டக்கென்று போன் எடுத்து, ஹலோ…

மறுமுனையில், கோச் நாங்க கிரௌண்ட்க்கு வந்துட்டோம்.. குட்..Practice பண்ணுங்க..

on the way..

எழுத்தும், கற்பனையும்

கல்யாணராமன் நாகராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/