Published:Updated:

நாவல் மரத்தின் கதை! |சிறுகதை | My Vikatan

Representational Image

தினமும் என்னை கூப்ட்டு போற முருகேசு அன்னைக்கு ன்னு பாத்து சொல்லாம போயித்தான் வேற வழியில்லாம தனியா போனேன். காத்து நல்லா அடிச்சுது, ராட்சச பொம்மை தலைய அசைச்சு ஆடுறத மாதிரி காத்துல நாவல் மரம் ஆடிக்கிட்டு இருந்துச்சு.

நாவல் மரத்தின் கதை! |சிறுகதை | My Vikatan

தினமும் என்னை கூப்ட்டு போற முருகேசு அன்னைக்கு ன்னு பாத்து சொல்லாம போயித்தான் வேற வழியில்லாம தனியா போனேன். காத்து நல்லா அடிச்சுது, ராட்சச பொம்மை தலைய அசைச்சு ஆடுறத மாதிரி காத்துல நாவல் மரம் ஆடிக்கிட்டு இருந்துச்சு.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஆத்துக்கரைய ஒட்டுனாப்ல பிரமாண்ட நாவல் மரம், நல்ல வயதான மரம். பாதி ஆத்துக்குள்ளயும் மீதி கரையிலுமாய் இருக்கும். புதுசா பாக்குற யாரும், "ட்டேயப்பா இத்தோ மொத்தி மரமா" ன்னு சொல்லுவோ.

நாவல்பழம் ன்னாலே லேசா துவர்கும் ஆனா இது இனிக்கும் அளவும் கூட சின்னுன்டு தான். அதனால தான் அத நரி நாவல்ன்னு சொல்லுவோ.

ஆனி மாதம் காய்க்க ஆரம்பிச்சு ஆடில பழம் நிறைய கிடைக்கும் ஆவணி கடைசி வரை தொடரும். அது வரை அந்த பக்கத்து புள்ளயலுவ எல்லாம் மரத்துக்கு அடியிலேயே கெடப்போம்.
10வது படிக்கற ராகேஷ் அண்ணே அது பிரண்டு , சுப்பு அத்தான், ராசு மாமா, ராமுக்கண்ணு அண்ணே-ன்னு பெரிய ஆளுவ மட்டும் தான் மரத்தில ஏறுவோ சின்னப் புள்ளயலுவ நாங்க ஏறக் கூடாதாம் பேய் இருக்குமாம். ஆமா வேப்பமரத்துக்கு ஈக்குவலா நாவமரத்துலும் எங்க பக்கட்டு பேய் பிசாசு குடியிருந்துச்சு.
சில சமயம் பெரிய பொம்பள புள்ளயலுவ கூட மரம் ஏறும் மேல சொன்ன அந்த ஆம்பள பயலுவ இல்லன்னா. ராமுக்கண்ணு அண்ணே இருந்தா பொம்பள புள்ளயலுவல ஒன்னும் சொல்லாது. பொம்பள புள்ளயலுவ மரத்தில் இருக்கும் போது ராமுக்கண்ணும் மரத்தில் இருக்கும்.

நாவல் பழங்கள்
நாவல் பழங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீழே வரும் போது நிறைய பறிச்சு , கைலி நிறைய பாவாடை நிறைய முடிந்து வைத்ததை எங்கள மாதிரி சின்னப் புள்ளயலுவலுக்கு தருவோவ.


மரம் ஏறும் போது கீழே கிடக்கும் நாவல் பழத்தை மரத்து தூர்ல தேய்ச்சுட்டுதான் ஏறுவோ. நம்பளோட கால் வச்சு ஏறுறோம் மரம் கோச்சுக்கும்ல அதான் தாஜா பன்றது. இல்லன்னா கீழே விழுந்துடுவோமே.


ஒரு தடவ ராகேஸண்ணே இப்படி தான் அவசர அவசரமாக மரத்தில பழத்தை தேய்க்காம ஏறினிச்சு "அண்ணே நீ இங்கிட்டு வந்து உலுக்குன்ன்ணே நாங்க பொறுக்கிக்கிர்ரோம் "ன்னு கத்த. "ஏல்ல்லே செத்த நாழி சும்மா இருங்கடா" ன்னு கிட்டே ஒரு கொப்புலேர்ந்து இன்னோர் கொப்ப புடிக்கவும் அது ஒடியவும்.. அண்ணே வால் ன்னு கத்திக்கிட்டு ஆத்துக்கரை படிக்கல்லுல சாயவும் சரியா இருந்துச்சு.


இதே மரத்தில் தான் நாவல்பழத்தோட ஒரு காதலும் காய்ச்சு கனியாகிருக்குன்னு அப்போ தெரியல அப்புறமாத்தான் தெரிஞ்சது. ராக்காயி அக்காவுக்கும் ராமுக்கண்ணும் தான் லவ் பன்னினவோ. ராக்காயி எனக்கு அத்தாச்சி முறை என்ன விட 7வயசு பெரிய புள்ளங்கறாதால அக்கான்னு தான் கூப்பிடுவேன் ஆனா என்னை மச்சான்னு தான் கேலி பன்னும்.


"அடி ராக்கு முத்து ராக்கு" ன்னு அது கூட படிக்கற புள்ளயலுவ எல்லாம் அக்காவ கிண்டல் பன்னுவோ. நான் ஒரு வாட்டி கேட்டேன் "ஒனக்கு ராக்காயி ன்னு யார் பேர் வச்சா நல்லாவே இல்ல"


"இது சாமி பேர் மச்சான், எங்க அம்மாவோட அக்காயி பேர் அது சின்ன வயசுல செத்து போச்சு அதுலேர்ந்து அத சாமியா வச்சு எங்கம்மா கும்புடும். அது தான் வச்சது இந்த பேர".


அன்னிக்கி ஒரு நாள் நாவல் பழம் பறிக்க என்னய கூட்டிட்டு போனுச்சு ராக்காயி. கூட அவுங்க செட்டு புள்ளயலுவலும் வந்தவோ


மரத்தில ராமுக்கண்ணு ஏற்கனவே ஒக்காந்து இருந்தாப்ல அப்பதான் எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது இவய்ங்க நாவல் பழம் திங்க இங்க வரலன்னு.


கூட வந்த அக்காவோட கூட்டாளி புள்ளயலுவ கோரசா பாட ஆரம்பிச்சுட்டு "அடி ராக்கு முத்து ராக்கு... ராமுக்கண்ண பாத்து...கைப்புடிச்சு தூக்கு....."


வெக்கத்தோட ராக்காயி அக்கா அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சத அதுவரைக்கும் நான் பார்த்ததில்லை.


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ராத்திரி ராக்காயி அக்கா அந்த நாவல் மரத்துல தூக்கு போட்டுகிச்சு.


ராமுக்கண்ணு ஊர விட்டு ஓடினது இன்னைக்கு வரைக்கும் வரல. சென்னைல ஏதோ ஒயின் ஷாப் பார்ல வேலை பாக்குதாம். பாத்தேன்னு கார்த்தி சொன்னான்.


அதுக்கு அப்புறம் அந்த மரத்துல யாரும் ஏறுவதே இல்லை. கீழே ஆத்துக்கரையில காய்ச்சு கொட்டி கிடக்கும் யாரும் அத பொறுக்கறது கூட இல்லை.
அம்மாயி வீட்டுக்கு பால் வாங்க விடிய காலைல போய்த்து வரும் போது கால் சட்டைப்பை நிறைய பொறுக்கி வீடு வர்ற வரைக்கும் தின்னுக்கிட்டே வருவேன் முருகேசுக்கும் கொஞ்சம் கொண்டு வந்து தருவேன்


ராத்திரி நேரத்துல ஒளியும் ஒலியும் பாக்க மரத்த கடந்து தான் போயாகனும் முருகேசு கூடத் தான் போவேன் தனியா போறதுக்கு பயமா இருக்கும்.


தினமும் என்னை கூப்ட்டு போற முருகேசு அன்னைக்கு ன்னு பாத்து சொல்லாம போயித்தான் வேற வழியில்லாம தனியா போனேன். காத்து நல்லா அடிச்சுது, ராட்சச பொம்மை தலைய அசைச்சு ஆடுறத மாதிரி காத்துல நாவல் மரம் ஆடிக்கிட்டு இருந்துச்சு.

கிட்ட நெருங்க அந்த சத்தம் எனக்கு கேட்டுச்சு "ராமுக்கண்ணு.... ராமுக்கண்ணு" ராக்காயி அக்கா குரல் தான். உச்சந்தலை முடிகூட நட்டுகிடுச்சு எடுத்தேன் ஓட்டம்.


டிவி பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பும்போது முருகேசு கூட வாரதால பயமில்லாம வந்தேன். இந்த விசயத்த அவன் கிட்ட சொன்னேன். அவன் இந்த மாதிரி நிறைய கதைய கேட்ருப்பான் போல பெரிசா ஒன்னும் அலட்டிக்கல.


டீக்கடை மாரியப்பன் தாத்தா கூட ஒரு நாள் கடையில இதப்பத்தி பேசிக்கிட்டு இருந்தாரு. அவருக்கும் கேட்டுச்சாம்.
இரண்டு வருசத்துல அந்த மரத்தை வெட்டிட்டாங்க ஆற்றங்கரைய அகலப்படுத்துறோம் ன்னு.


மரம் வெட்டுன புல்டோசர பயலுவ கூட வேடிக்கை பார்க்க போனேன். அன்னிக்கு நைட் கனவுல, ராக்காயி அக்கா வந்துச்சு, நான், "ராக்கு முத்து ராக்கு" ன்னு பாடுறேன் என்ன பாத்து செல்லமா முறைச்சது.

நாவல் பழம் பறிச்சு பாவட நிறைய கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டு சிரிச்சது. அப்புறம் திடிர்னு தலைமுடிய விரிச்சி போட்டு அழ ஆரம்பிச்சுட்டு"


மறுநாள் காலையில தூண்டி தாத்தாகிட்ட கூட்டிகிட்டு போய் துன்னுரு போட்டுவிட்டுச்சு அம்மா.


அதுக்கு அப்புறம் எப்பயாவது அந்த பக்கம் போகும் போது நரிநாவல் பழ ருசியை நாக்கு நினைத்து பார்க்கும்.


ஏழு வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு இப்பதான் வந்தேன் ஊரு காடு முழுக்க சுத்திட்டு ஆத்துக்கரைல வரும் போது நாவல் மரம் இருந்த இடத்துல செடி கொடி மண்டி கெடந்துச்சு அதுக்கு நடுவில ஒரு ஆள் மட்டத்துக்கு ஒரு கண்ணு அட நாவல் மரக் கண்ணு தான். பைக்க விட்டு கீழே இறங்கி கிட்டப்போய் பார்த்தேன். காத்து எங்கிருந்தோ வந்து வேகமா அடிச்சது.


அந்த நாவல் மரக் கண்ணு அழகா தலையை சாய்த்து ராக்காயி அக்கா குரலில் சொன்னது "ராமுக்கண்ணு".

-S.V.சிலம்பரசன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.