" என்ன மஞ்சு! சொல்லு"
தன் வருங்கால மனைவி மஞ்சுவிடமிருந்து அழைப்பு வந்ததால், அவளிடம் பேசினான், சுந்தர் கணேஷ்.
" சும்மாதான் சுந்தர். நேர்ல சந்திக்க முடியல. தொலைபேசியிலாவது பேசலாம்னு அழைத்தேன்".
" பேசேன். ' லேப்- டாப்' முன்னாடி உட்கார இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு."
" அதனால்தான் இப்ப அழைத்தேன்."
"ஏதாவது எங்கிட்ட கேட்கணும்னா, கேளேன்"
" நம்ம கல்யாணத்தை 2022 கடைசியில வெச்சிப்போமா? கொரோனாவின் கடுமை குறைஞ்சிருக்கும்."
" நமக்கு திருமணத் தேதி குறிச்சப்போ இதை யோசிச்சுயிருக்கலாமே!"
"இது என் அம்மா, அப்பாவுக்குத் தெரியாது. உன்னிடம் அனுமதி கேட்டுட்டு, அவங்களிடம் சொல்லலாம்னு இருக்கேன்."
"இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து மொத்தமே 50 பேரைத்தான் அழைச்சிருக்கோம். கொரோனாவுக்கு பயந்துக்கிட்டு எத்தனை பேர் வருவாங்கன்னு சொல்ல முடியாது"

"ம்... அதைத்தான் சொல்ல வரேன்.
திருமணம் என்பது மிகவும் சந்தோஷமானத் தருணம். என்ன நடக்குமோ, யாருக்கு ஆபத்து வருமோன்னு பயந்துகிட்டு, சந்தேகக் கண் கொண்டு பார்த்துக்கிட்டு, தேவையா நமக்கு? கொஞ்ச நாட்கள்ல எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பும்னு நம்பறேன். நான் என் அம்மா, அப்பாகிட்ட பேசறேன். நீயும் உங்க அம்மா, அப்பாவிடம் பேசுங்க. நான் பலமுறை யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். நீ என்ன சொல்றே சுந்தர்?"
"நிரம்ப ஆவலோடு காத்திருக்கிறேன். பரவாயில்லை. காத்திருக்க, காத்திருக்க ஆர்வம் அதிகமாகும். சரி மஞ்சு. நாம தொடர்ந்து பேசுவோம்."
"ஆமாம் சுந்தர். தொடர்ந்து பேசுவோம். உங்களை நான் நெருங்கும் நாள் நெருங்குகிறது.
அதுவரை இனிய கனவுகளுடன்."
-கேசவ் பல்ராம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.