Published:Updated:

தரையில் பறந்த காதல்! | சிறுகதை | My Vikatan

Representational Image

அவள் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவது கண்டு "ஏன் இந்த மேடம், இப்படி ஒரு சாதாரண இறுதிக்கட்ட புற்றுநோயாளிக்காக , கண்ணீர் வடித்து இத்தனை சிரமப்படுகிறார்". என மனதுக்குள் ஆச்சரியப்பட்டும், பெரிய டாக்டர் என்பதால், வினா ஏதும் எழுப்பாமல் அமைதி காக்கிறான்.

தரையில் பறந்த காதல்! | சிறுகதை | My Vikatan

அவள் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவது கண்டு "ஏன் இந்த மேடம், இப்படி ஒரு சாதாரண இறுதிக்கட்ட புற்றுநோயாளிக்காக , கண்ணீர் வடித்து இத்தனை சிரமப்படுகிறார்". என மனதுக்குள் ஆச்சரியப்பட்டும், பெரிய டாக்டர் என்பதால், வினா ஏதும் எழுப்பாமல் அமைதி காக்கிறான்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"ராகுல்! குயிக், இம்மீடியட்டா, டாக்டர். பாபு கிட்ட சொல்லி...நான் இரத்தம் வழங்குவதற்கான எல்லா நடைமுறைகளையும் உடனே பூர்த்தி செய்யச்சொல். இவருடைய இரத்தம் "ஏ பி நெகடிவ்" எனும் அரிய வகை குரூப், நானும் அதே குரூப் என்பதால் இத்தனை அவசரப்படுகிறேன். உடனே ஸ்கூட்டரில இரத்த வங்கி வார்டுக்கு என்ன கூட்டிட்டு போ, பேஷண்ட் இஸ் சின்க்கிங்!" என கம்பீரமான குரலில் ஆணையிட்டபடி அவனுடன் பறந்தாள் , "ஆன்காலஜி சீஃப்" மருத்துவரான டாக்டர். சாந்தி..!

அவளுடைய பதட்டம் புரியாவிடினும், தலைமை மருத்துவரான அவர் ஆணைக்கு கட்டுப்பட்டு, முதலாம் ஆண்டு மேற்படிப்பு மாணவனான அவன் அவளுக்கு ஒத்துழைத்தான்! அவள் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவது கண்டு "ஏன் இந்த மேடம், இப்படி ஒரு சாதாரண இறுதிக்கட்ட புற்றுநோயாளிக்காக , கண்ணீர் வடித்து இத்தனை சிரமப்படுகிறார்". என மனதுக்குள் ஆச்சரியப்பட்டும், பெரிய டாக்டர் என்பதால், வினா ஏதும் எழுப்பாமல் அமைதி காக்கிறான்.
டாக்டர் சாந்தியின் நினைவுகள் முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி நகர்கின்றது.. சென்னை மாநில கல்லூரி கண் முன் நிழலாடுகிறது... அதில் பட்டப்படிப்பு படித்த தன் பொன்னான மாணவ பருவ நாட்கள் நெஞ்சில் ,கொஞ்சி! கொஞ்சி! ஊஞ்சலாடுகிறது...!

Representational Image
Representational Image

பி எஸ் ஸி (வேதியல்) முதலாம் ஆண்டில்..முதல் கெமிஸ்ட்ரி செய்முறை வகுப்பு நடைபெறுகிறது... "டபுள் சால்ட்" (இரு உப்புகள் கண்டு பிடிக்கும்) , குவாலிடேட்டிவ் அனாலிசிஸ்.. செய்ய ஒரு ரகசிய எண் குறியிட்ட பொட்டலம் ஒன்றை ,ஆசிரியர் இவரிடம் கொடுத்த , அடுத்த சில வினாடிகளில், "அம்மா சாந்தி!தப்பா குடுத்துட்டேன், அது விஜய் ஓடது.. நீ அதை "விஜய்" கிட்ட கொடுத்து மாற்றிக்கொள்" என கூறுகிறார். அவளுக்கு முந்தின வரிசையில் நேருக்கு நேரான டேபிளில் இருந்த விஜய் என்ற சக மாணவனை முதல் முறையாக பார்த்து,எந்த வார்த்தை பரிமாற்றமும் இன்றி பொட்டலங்கள் கை மாறுகிறது. ஆனாலும், அவன் அதீத வனப்பு ஏனோ அவளை பிரம்மிக்க வைக்கிறது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாந்தியும் மிகமிக வசீகர தோற்றம் படைத்த அமைதியான பெண்தான்.

"உப்பு" கண்டு பிடிப்பதில் ஏனோ தவறு செய்து, மாட்டிக் கொள்கிறாள். முதலில் தந்த உப்புகளை, சரியாக கண்டுபிடித்தால் மட்டுமே அடுத்த உப்பு தரப்படும் என்பது விதி!

ஆனால் நம் ஹீரோ விஜய், ஓரே நாளில் இரண்டு "சால்ட்"களை கண்டு பிடித்து, ஆசிரியர் பாராட்டையும் பெற்று, மாணவர்களை வியப்பில் ஆழ்த்துவான். இவளோ ஒரு மாதம் ஆகியும் முதல் "சால்ட்டையே" கண்டுபிடிக்க முடியாமல், ஆசிரியரிடம் திட்டு வாங்குவாள்.

இவள் பரிதாப நிலை கண்டு, இவள் மேல் பச்சாதாபப்பட்ட விஜய்...

முதல் முறையாக இவளிடம்"நான் வேண்ணா ஹெல்ப் பண்ணட்டுமா?" என புன்சிரிப்புடன் கேட்க, அவள்,ஆக்ரோஷமான ஒரே முறைப்பால் அதை நிராகரித்தாள்.

ஆனால் அந்த நிராகரிப்பு வெகு நாள் நீடிக்கவில்லை..

ஆசிரியர் திட்டுவதை தாங்க முடியாத நிலையில் ஒருநாள் , மெல்ல அவனிடம் "ஏதோ ஹெல்ப் பண்றேன்"! ன்னு சொன்னீங்களே, இந்த சனியன் பிடித்த முதல் உப்பை மட்டும் கண்டு பிடித்து கொடுங்கள்!" என சரண்டர் ஆனாள்!

அந்த சரண்டர் அவள் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்க போகிறது என்பதை ,அன்று சாந்தி ஏனோ உணரவில்லை.

எதிர் எதிர் மேசை என்பதால், "சப்ஜெக்ட்ல" ஆரம்பித்து, "பிரடிகேட்" வரை, மெல்ல நட்பு வளர்ந்தது. இக்கால காதல் போல்,..

முதல் நாள் சேட்டிங்,

இரண்டாம் நாள் மீட்டிங்

மூன்றாம் நாள் டேட்டிங்,

நாலாம் நாள் ஹேட்டிங்க்,

ஐந்தாம் நாள் பிரேக்கிங்...

என்று இல்லாமல்,

அக்காலக்கட்டத்தில்

பெரும்பான்மையான காதல்... கருவுற்று, உருவுற்று,...

உயிருற,

பல மாதங்கள்! ஏன்? பல வருடங்கள் கூட ஆகலாம்..!

ஆனால் அந்த காதல் ஆத்மார்த்தமான, ஆழமான, அன்பான, அழியாத கோலங்களாக காலம் கடந்தும் பரிமளித்தன,..!

அப்படியே ஒருக்கால் அந்த காதல் தோற்றாலும் காலத்தால் அழியாத நினைவுகளால் ஆன நிராசையாய் நெஞ்சத்தில் நிலைபெறும்!

Representational Image
Representational Image

ஆம்...

நம் சாந்தி -விஜய் காதலும் நட்பிலிருந்து காதலாக பரிணாமம் அடைவதர்க்குள் இறுதி ஆண்டே வந்துவிட்டது, என்றால் எவ்வளவு "ஸ்லோ" என்று பார்த்து

கொள்ளுங்களேன்!

உறுதியான உண்மையான

காதலாகி, மெரினா, விக்டோரியா விடுதி, அண்ணா சமாதி, ரத்னா கபே, பார்த்தசாரதி கோயில், என பற்பல ஸ்தலங்கில் அது சாகித்யம் பெற்றது.

காமம் கடுகளவும் கலவாத, உண்மை காதலாய் ,அவர்களுள் ஆலவிருட்சம் போல் வளர்ந்தது. அந்த காதலில்...

அன்பு இருந்தது அவசரம் இல்லை!

ஆழம் இருந்தது ஆர்ப்பரிப்பு இல்லை! ஜீவன் இருந்தது ஈகோ இல்லை!

அவர்கள் ஒருமுறை பார்த்தசாரதி கோவிலில் நெடிதுயர்ந்த பெருமாள் சன்னதியில், "ஒருவரையொருவர் தம் காதலிலிருந்து விலக மாட்டோம்"... என ஆத்மார்த்தமாக சங்கல்ப்பம் செய்து கொண்டனர்!


ஆனால் , பாழாய்ப்போன வர்க்கபேதம் குறுக்கிட.. வசதிபடைத்த சாந்தியின் தந்தை போலீஸ் வரை செல்ல...

ஏழை விஜய் பட்டத்துடனும், பதக்கத்துடனும், சென்னையை விட்டே வெளியேற்றப்பட்டான்!

அன்று, அவள் தனிமையில் பிழிய பிழிய அழுததால் பெருகிய,விழிநீர் ஆழியின் அளவையும் விஞ்சி நின்றது!

விதி மீண்டும் விளையாடியதால், சாந்தியின் தந்தை அகால மரணம் எய்த ,

சாந்தி தன் கவலைகளை மறக்க, மருத்துவம் படித்து ,

திருமணம் தவிர்த்து,

சதா சர்வகாலமும்

விஜய் நினைவாகவே,

அல்லும் பகலும்... மக்கள் பிணி தீர்க்கும் பணியில் ஈடுபட்டு, பிரபல புற்றுநோய் மருத்துவராக,

தன் தாய் மண்ணாம் திருச்சி "அண்ணல் காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்"..., காதலின் நீங்கா நினைவுடன் வாழ்ந்தாள்!

விஜய்யும், தன் நெஞ்சம் முழுதும் காதலை சுமந்து, விரக்தியில் திருமணம் செய்யாது, ராணுவத்தில் சேர்ந்து, நாட்டுக்கு தொண்டாற்றி, பணி ஓய்வு பெறுகிறான்.,

தனிமை வாட்டி வதைக்க,

மிலிட்டரி தந்த பரிசுகளான,

புகை, போதை இரண்டும், அவன் சோகத்தை போக்கும் அருமருந்தாக மாறுகிறது...

நாட்கள் நகர,

"புகை எனும் பகை" அவன்

நுரையீரலில் புற்றுநோய் உண்டாக்க.. அதனால் பாதிக்கப்பட்டு, இறுதியில் அவன் ஒரே உறவாகிய, திருச்சியில் உள்ள தாய் மாமன் வீட்டில் அடைக்கலம் அடைகிறான். இறுதி கட்டத்தில் இரத்த வாந்தியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட,

நினைவற்ற நிலையில் அவனை நோயாளியாக..

அவன் ஆருயிர் காதலி சாந்தி,

ஒரு டாக்டராக அவனை சந்திக்கிறாள்.

சாந்தி அவனை அடையாளம் கண்டு, துன்புற்று, அவனை சிறிது காலமேனும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, இதோ தன் குருதியை

"காதல் பரிசாக" அவனுக்கு அளிக்க இரத்த வங்கிக்கு விரைந்து கொண்டிருக்கிறாள்.

(பி-கு)... அவள் இமாலய முயற்சியால்

அவன் மெல்ல கண்திறந்து இவளை கண்டு, கண்ணீரால் அவள் கரங்களை ஈரமாக்கி, ஏதேதோ பழங்கதை பேசி ,மூன்றாம் நாள் இரவு இறைவன் அடி சேர... சாந்தியின் "காதல் மறுமலர்ச்சி"

அதிவேகமாக முடிவுக்கு வந்தது!!

"என்றேனும் ஒரு நாள் தங்கள் காதல் கை கூடும்" என காத்திருந்த அந்த இலவு காத்த கிளிகளுக்கு

ஏமாற்றமே மிஞ்சியது!

அவள் தனிமரமாகி ...

மீண்டும் தன் மருத்துவ சேவையில் முழுமூச்சுடன் ஈடுபட்டு,

தன் மரணம் நோக்கி பயணிக்கிறாள்!


"முழுமை பெற்ற காதல் எலாம் முதுமை வரை கூட வரும்.."

(கவியரசு கண்ணதாசன்)

ஏன் மரணம் வரையும் ....

கூட வரும் அல்லவோ!?

( முற்றும்)

-மரு உடலியங்கியல் பாலா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.