Published:Updated:

முழுப் பக்குவம்! | குறுங்கதை

கோயில்

வழக்கமாக வருவோர் அவரைக் கண்டதும் வணக்கம் சொல்லியபடி கடந்து போய், முருகன் சன்னிதானத்தை அவருக்கு மறைக்காதபடி ஒதுங்கி நின்று, கை கூப்பினர்.

முழுப் பக்குவம்! | குறுங்கதை

வழக்கமாக வருவோர் அவரைக் கண்டதும் வணக்கம் சொல்லியபடி கடந்து போய், முருகன் சன்னிதானத்தை அவருக்கு மறைக்காதபடி ஒதுங்கி நின்று, கை கூப்பினர்.

Published:Updated:
கோயில்

அன்று கிருத்திகை. வளர்ந்து வரும் அந்தப் புற நகர்க் கோயிலில் முருகன்-வள்ளி-தெய்வானை சந்நிதியில் சிறப்புப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதிப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்க, ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அந்தப் பெரியவர் வந்து,எல்லோருக்கும் கடைசியாக நின்று கண் மூடியபடி கந்தர் சஷ்டிக் கவசத்தை முணு முணுக்க ஆரம்பித்தார்.

நிர்வாகத்தைக் கவனிக்கும் நாமக்கார மேஸ்திரி அவரைக் கண்டதும் நாற்காலியிலிருந்து எழும்பி அமரச்சொல்ல,அவர் பிரியமாக மறுத்து, அவர் தோளை வாஞ்சையுடன் பிடித்து அமரச் செய்து விட்டு, தன் பணியைத் தொடர்ந்தார். கண்மூடி நிதானமாகக் கவசத்தைச் சொல்லிக் கொண்டே, அடிக்கடி கண்களைத் திறந்து எதிரே தெரியும் திரை விலகி விட்டதா என்பதைக் கவனித்தபடி, பக்தி பொங்க கவசத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். தான் கடைசியாக நிற்க வேண்டும் என்பதிலும், தன் உருவம் எவருக்கும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர் கண்டிப்பாக இருப்பார். எப்பொழுதுமே, எல்லோருக்கும் கடைசியாகத் தான் போய் நிற்பார்.

Murugan
Murugan

வழக்கமாக வருவோர் அவரைக் கண்டதும் வணக்கம் சொல்லியபடி கடந்து போய், முருகன் சன்னிதானத்தை அவருக்கு மறைக்காதபடி ஒதுங்கி நின்று, கை கூப்பினர். ஶ்ரீதர் குருக்களின் அலங்காரச் சிறப்பினை அப்பகுதிப் பெண்கள் நன்கறிவர். எனவே, தாமதமானாலும் பரவாயில்லையென்று எப்பொழுதும் பொறுமை காப்பர்.

ஶ்ரீதரும், அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப கிருத்திகை அலங்காரத்தைச் சிரத்தையுடன் செய்வார். கல்யாணி மாமி அந்தாதியை ராகத்தில் இசைக்க, அந்த இடமே இசையால் நிரம்பியது. சஷ்டிக் கவசத்தை முடித்து விட்டு, ‘108 போற்றி’ சொல்ல அவர் ஆரம்பித்த போதுதான் அங்குள்ள எந்திர மேளம் பெரும் ஒலியுடன் இயங்க, திரை விலக்கப்பட்டு முருகருக்குத் தீபாராதனை காட்டப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்களை அகலத் திறந்து அவர் முருகரை வழிபட்ட போதுதான், அவசரமாக வந்த அந்த நடுவயதுக்காரர் அவருக்கு முன்னே நின்று கைகளைத் தலைக்கு மேலே தூக்கி சேவிக்க, அவருக்கு அந்த முன்னால் நின்றவரின் கைகள் மட்டுமே தெரிந்தது. தீபாராதனையையும், முருகரையும் அப்பக்தரின் கைகள் மறைத்துக் கொள்ள, ”என்ன ஆளய்யா நீ? தள்ளிப் போ!”என்று அவர் சப்தமிட, அந்த எந்திர மேளச் சத்தத்தில் அவருடைய வார்த்தைகள் அமிழ்ந்து போயின! எல்லோரும் பரவசத்துடன் முருகரைத் தரிசிக்க, அந்த நடுவயதுக்காரரின் கைகள் கீழே இறங்கியதும், பெரியவரின் வயதான கண்களுக்கு முருக தரிசனம் நன்றாகவே கிடைத்தது.

கோயில்
கோயில்

இறைவனைக் கண்குளிரக் கண்டதும், அவர் தான் செய்த தவறை எண்ணி வெட்கிப் போனார்.

’என்ன ஆளய்யா நீ?தள்ளிப்போ!’

எப்படி நான் இப்படிப் பேசலாம்? இறைவன் கைகளால் மறைக்கப்படக் கூடியவரா? அவர் வந்த வேகத்தில் தனக்கு மறைக்குமாறு நின்றது அவருடைய தவறல்லவே! தன்னை மரியாதை செய்யும் இந்த மக்கள் ஒவ்வொருவரையும் நேசிப்பதும், அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளைப் பொறுப்பதுமல்லவா தனக்கு அழகு? அந்த அழகைக் கண நேரத்தில் எப்படி நான் இழந்தேன்? அவருக்கு,அவரின் செய்கை பெரும் வெட்கத்தை அளித்தது. தனக்கு இன்னும் முழுப் பக்குவம் வரவில்லை என்பதை அவர் உணர்ந்தார்!

தன் தவறுக்காக மனம் நொந்து இறைவனிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், மெல்ல அந்த எந்திர மேளத்திடம் வந்து, அதனைத் தொட்டு வணங்கி, தன் மானத்தைக் காப்பாற்றியதற்காக மனமுருகி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்!

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism